HomeBlogதிருப்பாவை பாடல் 26 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 26 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 26

மார்கழி நீராட, தேவையான பொருள்களை அளிப்பாயாக!

குந்தலவராளி ராகம், ஆதி தாளம்.

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல்;
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே,
சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே,
கோல விளக்கே, கொடியே, விதானமே;
ஆலின் இலையாய்! அருள் – ஏலோர் எம்பாவாய்.

திருப்பாவை பாடல் 26

எளிய தமிழ் விளக்கம்:

திருமாலே! மணிவண்ணா! மார்கழி நீராட்டத்திற்கு பெரியோர்கள் அனுஷ்டித்து வந்தவற்றைக் கேட்பாயாகில் உலகம் நடுங்க ஒலிக்கும் பால் நிறப் பாஞ்சசன்னியம் போன்ற சங்குகளும், மிகப் பெரிய பறைகளும், பல்லாண்டு பாடுபவர்களும், அழகிய விளக்குகளும், கொடிகளும், அவற்றிற்கு மேல் கட்டவேண்டிய சீலைகளும் வேண்டும். ஆலிலைமேல் பள்ளி கொண்டவனே, இவையனைத்தும் எங்களுக்குத் தந்தருள வேண்டும்.

எளிய ஆங்கில விளக்கம்:

Thiruppavai – 26 – Raga: Kuntalavarali, Adi

Gem hued lord who slept as a child on a fig leaf during pralaya, the
great deluge
We have performed the Margazhi rites as our elders decreed.
Now hear what we want: conches like milk-white panchajanya which
reverberates through all creation with its booming sound,
a big wide drum, and singers who sing pallandu,
a bright lamp festoons and flags –
O lord grant us these

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!