Homeபராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026பராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026: மேஷ ராசி

பராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026: மேஷ ராசி

பராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026: மேஷ ராசி

மேஷ ராசி அன்பர்களே…

சகோதர்காரனாகிய செவ்வாய் ஆட்சி வீடாகக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே, இவ்வருடம் குருபகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருந்து ஜூன் 1ம் தேதி முதல் 4ம் இடம் செல்கிறார். பிறகு அதிசாரமாக அக்டோபர் 31ம் தேதி முதல் 5ம் இடம் செல்கிறார். பின்பு வக்ரகதியில் ஜனவரி 24ம் தேதி முதல் கடக ராசிக்கு திரும்புகிறார்.

சனிபகவான் வருடம் முழுவதும் விரயசனியாக 12-ம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.

டிசம்பர் 5ம் தேதி முதல் ராகுபகவான் 11ம் இடத்தில் இருந்து 10-ம் இடம் ,கேது பகவான் 5ம் இடத்தில் இருந்து 4ம் இடம் சஞ்சாரம் செய்கிறார்கள்.

இதனால் வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. தொழில்துறையில் செலவினங்கள் அதிகம் இருக்கும். வரவும் செலவும் சமமாக இருக்கும். அலைச்சல் அதிகமாக இருக்கும். வேலை பார்ப்பவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். வேலைப்பளு அதிகமாக அதன் காரணமாக தூக்கமின்மை ஏற்படும்.

பராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026: மேஷ ராசி

வயதானவர்களுக்கு ஆடி, ஆவணி மாதங்களில் கண் சிகிச்சை மற்றும் பாத சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும். எடுத்த காரியங்களில் தாமதமானாலும் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

திருமணமாகாதவர்களுக்கு ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் திருமண வாய்ப்பு கூடும். பழைய வாகனங்கள் வாங்குவதை தவிர்க்கவும். மாணவர்கள் மிகுந்த அக்கறையுடன் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெற முடியும். வெளிநாட்டு வேலை விரும்புவர்களுக்கு இவ்வருடம் வெளிநாட்டு வேலை அமையும். கருவுற்ற பெண்கள் ஆபத்தான பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்

பிரதி சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமும், ஆஞ்சநேயருக்கு நெய் தீபமும் வைக்கவும். ஆடி மாதம் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யவும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular