பராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026:மிதுன ராசி
கல்விக்கு அதிபதியான புதனை ஆட்சி வீடாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! இவ்வருடம் குரு பகவான் ஜூன் 1ம் தேதி முதல் உங்கள் ராசியில் இருந்து 2ம் இடம் வருகிறார். பிறகு அக்டோபர் 31ம் தேதி அன்று அதிசாரமாக 3ம் இடம் சென்ற குரு பகவான் மீண்டும் ஜனவரி 24ம் தேதி முதல் வக்ரகதியில் 2ம் இடம் வருகிறார்.
டிசம்பர் 5 முதல் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடத்திலிருந்து 8ம் இடத்திற்கும், கேது பகவான் 3ம் இடத்தில் இருந்து 2ம் இடமும் வருகிறார்கள்.
சனிபகவான் வருடம் முடிவு வரை உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில சஞ்சாரம் செய்கிறார்.
இதனால் தொழில் துறையில் வேலை மிக அதிகமாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான வேலையில் தாமதமானாலும் நிச்சயமாக முன்னேற்றம் உண்டு. வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டு. திருமணம் ஆகாதவர்களுக்கு இவ்வருடம் நல்ல குருபலம் உண்டு. திருமணம் நடக்கும்.
ஆரோக்யம் சீராகும். வெகு காலம் எதிர்பார்த்த குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில் வளர்ச்சியில் இருந்த தடைகள் விலகும். டிசம்பர் 5ம் தேதி முதல் ஜனவரி 24ம் தேதி வரை பிரயானங்களில் மிகுந்த அக்கறை தேவை. இக்காலங்களில் முடிந்த வரை இரவு நேர பிரயானத்தை தவிர்க்கவும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவர். படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தாய் தந்தையரின் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சனை தீரும்.
பரிகாரம்
சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய் விளக்கு வைக்கவும். டிசம்பர் முதல் வாரத்தில் விநாயகருக்கு அபிஷேகம் செய்யவும்.