பராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026 :கன்னிராசி
கல்விக்கு அதிபதியான புதனை ஆட்சி வீடாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! இவ்வருடம் குருபகவான் ஜூன் 1ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருந்து லாபஸ்தானமாகிய 11ம் இடத்திற்கு வருகிறார். பிறகு அதிசாரமாக அக்டோபர் 31ம் தேதி முதல் விரய ஸ்தானமாகிய 12ம் இடம் வருகிறார். பின்பு ஜனவரி 24ம் தேதி முதல் மீண்டும் வக்ரகதியில் 11ம் இடம் திரும்புகிறார்.
சனிபகவான் இவ்வருடம் முழுவதும் கண்டகசனியாக ஏழாம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.
டிசம்பர் 5ம் தேதி முதல் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 6ம் இடத்திலிருந்து 5ம் இடத்திற்கும், கேது பகவான் 12ம் இடத்தில் இருந்து 11ம் இடத்திற்கு வர இருக்கிறார்கள்.
இதனால் இவ்வருடம் திருமணம் ஆகாதவர்களுக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும். தொழில்துறையில் எதிர்பார்த்த நல்ல மாற்றமும், நல்ல லாபமும் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். திருஷ்டி காரணமாக எளிதாக நடக்க வேண்டிய காரியங்கள் தாமதமாக நடக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.தெய்வ யாத்திரை நல்ல பலன்களைத் தரும்.
மாணவர்கள் எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்கள் பெறுவர்.வீடு, மனை, புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. தகுந்த மருத்துவம் கிடைத்து நல்ல ஆரோக்கியம் கிடைக்க பெறுவீர்கள்.சகல துறைகளிலும் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டு
பலன் தரும் பரிகாரம்
சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம், ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி வரவும்.
மொத்தத்தில் இந்த புத்தாண்டு 80 சதவீதம் நற்பலன்களை நல்கும் புத்தாண்டாக இருக்கும்.