பாரபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026:தனுசு ராசி
தேவகுருவான பிரகாஸ்பதியை ஆட்சி வீடாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! இவ்வருடம் உங்கள் ராசிநாதன் குரு பகவான் ஜூன் 1ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 7ம் இடத்திலிருந்து 8மிடம் வருகிறார், பிறகு அக்டோபர் 31ம் தேதி முதல் அதிசாரமாக 9ம் இடம் வருகிறார். பிறகு மீண்டும் ஜனவரி 24ம் தேதி முதல் வக்ரகதியில் உங்கள் ராசிக்கு 8ம் இடம் வருகிறார்.
வருடம் முழுவதும் சனிபகவான் அர்த்தாஷ்டம சனியாக உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
டிசம்பர் 5ம் தேதி முதல் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3ம் இடத்திலிருந்து 2ம் இடத்திற்கும், கேது பகவான் 9ம் இடத்தில் இருந்து 8ம் இடத்திற்கும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
தொழில்துறையில் மிகுந்த அலைச்சலும் இடமாற்றமும் உண்டாகும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் குடியிருக்கும் வீடு மாற வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்கள் இருக்கின்ற வேலையை விடக்கூடாது. வேறு வேலை கிடைப்பதில் தாமதமாகும். வேலைப்பளு அதிகமாகும். தேவையற்ற இடமாறுதலுக்கு உள்ளாவீர்கள்.
பண விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. நண்பர்கள் உறவினர்களால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பிறகு சரியாகும். பொது இடங்களில் வாக்குவாதங்கள் செய்வதை தவிர்க்கவும்.
தினசரி நடை பயிற்சி மேற்கொள்ளவும். மாணவர்கள் மிகுந்த அக்கறையுடன் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.
பரிகாரம்
சித்திரை அல்லது வைகாசி மாதம் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் கணபதி, நவகிரகம்,ஆயுஷ்மான் தன்வந்திரி ஹோமம் செய்வது சிறப்பு.வியாழக்கிழமை குருவுக்கு நெய் தீபம் வைக்கவும். மொத்தத்தில் இந்த புத்தாண்டு 50 சதவீதம் மட்டுமே நற்பலன்களை நல்கும் புத்தாண்டாக இருக்கிறது.. கவனம்…