Homeபராபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026பாரபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026:மீன ராசி

பாரபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026:மீன ராசி

பாரபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026:மீன ராசி

புத்திரக்காரனாகிய குருவை ஆட்சி வீடாக கொண்ட மீன ராசி அன்பர்களே! இந்த வருடம் ஜூன் 1-ஆம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு வருகிறார். அக்டோபர் 31-ஆம் தேதி அன்று அதிசாரமாக 5மிடத்திலிருந்து ஆறாமிடம் செல்கிறார். ஜனவரி 24-ஆம் தேதி முதல் வக்ரகதியில் ஆறாம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு வருகிறார்.உ

சனி பகவான் ஜென்ம சனியாக உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்.

டிசம்பர் 5-ஆம் தேதி முதல் ராகு பகவான் 12-ஆம் இடத்தில் இருந்து 11 ஆம் இடத்திற்கும், கேது பகவான் ஆறாம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

இதன் மூலம் இவ்வருடம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெகுகாலம் எதிர்பார்த்த திருமண காரியமும் நடக்கும். பூர்வ புண்ணிய சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளும் தீரும். தொழில்துறையில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். வேலைபளு காரணமாக தூக்கம் குறையும்.

பழைய பாக்கிகள் வசூலாகும். மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் தாமதமாக வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெறுவர். ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.

அதிக தண்ணீர் இருக்கும் இடங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கவும். தெய்வ ஸ்தல யாத்திரை வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்

சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமும், ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் வைத்து வர நன்மை நடக்கும். மொத்தத்தில் இந்த வருடம் 70% நன்மைகளை நல்கும் வருடமாக இருக்கும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular