மேஷ லக்னம்
ஜென்ம லக்னம் மேஷமாகி சூரியன் விருச்சிக ராசியில் தனுசு நவாம்சத்தில் இருந்து மேற்படி சூரியன் ராகுவுடன் கூடி விருச்சக ராசியில் இருந்து சனியால் பார்க்கப்பட்டாலும், மேற்படி சனியுடன் செவ்வாய் கூடி இருந்தாலும், இவர்களை எல்லோரையும் குரு பார்த்தால் வயது 45 ஆகும். இதே போல் தனுசில் சந்திரனிலிருந்து சனியுடன் கூடிய செவ்வாயால் சந்திரன் பார்க்கப்பட்டால் பிறந்த 7-8-11-13 இந்த மாதங்களிலும் 4ம் வயதிலும் ஆபத்து உண்டாகும். மேலே சொல்லியபடி ராகு இருந்து அவர் திசை வரும் போது அல்லது அதற்கு முன்பே செவ்வாய் திசை முடிவின் திசை சந்தியில் ஆபத்து பயம் உண்டாகும். அந்த காலத்தில் தப்பிப்பிழைத்தால் ராகு திசையில் தவறாமல் மரணம் ஏற்படும். வயது மேற்படி 45 தான் உண்டாகும்.
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதி மிதுன ராசியில் இருந்து சனி லக்னத்தில் இருந்தாலும் ஜாதகம் 68 அல்லது 69 வயது வரை வாழ்வான். இதே போல் சந்திரன் விசாகம் 3ம் பாதத்தில் இருந்தால் சூரிய தசையின் முதல் அல்லது சுக்கிர தசையின் கடைசியில் தசா சந்தியில் மரணம் நேரிடும்.
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதி 6ம் இடத்தில் சுக்கிரனுடன் கூடியிருந்து, 8ம் இடத்தில் சனி, சூரியன், புதன் இருந்தால் 68 வயது வரை வாழ்வான். இத்துடன் ரோகிணி 2ம் பாதத்தில் சந்திரன் இருந்தால் மேற்படி புதனுடைய திசையில் மரணம் ஏற்படும்.ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னத்தில் சந்திரன் சுக்கிரன் கூடியிருந்து, லக்னாதிபதி 10லிருந்து இவர்களை பார்த்தால், 11ல் ராகு இருந்தால் தீர்க்க ஆயுலாக 75 வயது வரை வாழ்வார்கள். மேலும் சந்திரன் பரணி நட்சத்திரம் 4வது பாகத்தில்இருந்தால் பாலியத்திலும் 62 வயதிலும் அபமிருத்து பயம் உண்டாகும். அக்காலங்களில் சாந்தி செய்தால் மேற்படி வயது பூரணமாகும்.
ஜென்ம லக்னம் மேஷமாகி லக்னாதிபதி உச்சத்திலும், குரு 3லும் இருந்து சந்திரன் கேந்திர கோணங்களில் இருந்தால் 53 வயது வரை வாழ்வார்கள். மேலும் சந்திரன் பரணி 1வது பாகத்தில் இருந்தால் 2ம் இடத்தில் உள்ள ராகு தசை சுக்கிர புத்தியில் மேற்படி வயதில் பங்குனி மாதத்தில் சுக்கிலபட்ச ஏகாதசியில் வெள்ளிக்கிழமை விடியற்காலை மரணம் ஏற்படும்.
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து எட்டாவது அதிபதியும், லக்னாதிபதியும், ஸ்திர (சிம்ம) ராசியில் இருந்து, 12-வது அதிபதி (மகர) ராசியில் இருந்தால் 65 வயது வரை வாழ்வார்கள்.
ஜென்ம லக்னம் மேஷமாகி லக்னாதிபதி எட்டாம் அதிபதி இவர்கள் சர (துலா) ராசியிலிருந்து, 12ம் பாவாதிபதி ஸ்திர (விருச்சக) ராசியில் இருந்தால் 67 வயது வரை வாழ்வார்கள்.
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதி, எட்டாம் அதிபதி ஸ்திர (சிம்ம) ராசியிலும் 12 ம் அதிபதி சர(மேஷ) ராசியிலும் இருந்தால் மத்தில் பூரணமாகும். அதாவது வயது 65. 60 வது வயதில் அசுகம் உண்டாகி அது சாந்தி மூலம் நிவர்த்தியாகி சுகம் உண்டாகும்.
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதி, எட்டாம் அதிபதி இவர்கள் இருவரும் உபய(கன்னி) ராசியிலும் 12 ம் அதிபதி ஸ்திர(கும்ப) ராசியிலும் இருந்தால் 67 வயது வரை வாழ்வார்கள்.
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதியும், எட்டாம் அதிபதியும் சர(துலாம்) ராசியிலும் 12ம் அதிபதி சர (மேஷ) ராசியிலும் இருந்தால் வயது 65. 60 வயதில் தேக பீடையும், பிறகு சாந்தி செய்வதால் சுகமும் உண்டாகும்.
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதி எட்டாம் அதிபதி இவர்கள் ஸ்திர (ரிஷப) ராசியிலும் 12ம் அதிபதி உபய (மீன) ராசியிலும் இருந்தால் ஜாதகம் 72 வயது வரை வாழ்வான். 60வது வயதில் ஜாதகன் தேக பீடையை அடைவான். பிறகு சாந்தி செய்ய சுகம் உண்டாகும்.
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதி எட்டாம் அதிபதி இவர்கள் ஸ்திர(கும்ப) ராசியிலும் 12 ம் அதிபதி உபய(கன்னி) ராசியிலும் இருந்தால் ஜாதகன் 71 வயது வரை வாழ்வான்.
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதி, எட்டாம் அதிபதி இவர்கள் சர (துலா) ராசியிலும் 12ம் அதிபதி ஸ்திர (ரிஷப) ராசியில் இருந்தால் ஜாதகன் 71 வயது வரை வாழ்வான்.
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதி எட்டாம் அதிபதி இவர்கள் உபய(மீன) ராசியிலும் 12 ம் அதிபதி சர (மகர) ராசியிலும் இருந்தால் ஜாதகன் 72 வயது வரை வாழ்வான்.
ஜென்ம லக்னம் மேஷமாகி லக்னாதிபதி எட்டாம் அதிபதி 12ம் அதிபதி இவர்கள் ஸ்திர (சிம்ம) ராசியில் இருந்தால் ஜாதகன் 70 வயது வரை வாழ்வான்
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதி, எட்டாம் அதிபதி ,உபய (கன்னி) ராசியிலும் 12 ம் அதிபதி சர (துலாம்) ராசியிலும் இருந்தால் ஜாதகன் 72 வயது வரை வாழ்வான்
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதி, எட்டாம் அதிபதி இவர்கள் மிதுன ராசியிலும் 12ம் அதிபதி உபய (மீன) ராசியில் இருந்தால் ஜாதகன்75 வயது வரை வாழ்வான்.
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதி, எட்டாம் அதிபதி, இவர்கள் ஸ்திர (சிம்ம) ராசியிலும் 12 ம் அதிபதி உபய (மீன) ராசியிலும் இருந்தால் ஜாதகன் 64 வயது வரை வாழ்வான்
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதி, எட்டாம் அதிபதி இவர்கள் சர (கடக) ராசியிலும் 12 ம் அதிபதி சர (துலா) ராசியில் இருந்தால் ஜாதகன் 61 வயது வரை வாழ்வான்.
ஜென்ம லக்ன மேஷமாக இருந்து எட்டாம் அதிபதி, லக்னாதிபதி இவர்கள் ஸ்திர (ரிஷப) ராசியிலும், 12ம் அதிபதி உபய (மீன) ராசியிலும் இருந்தால் ஜாதகன் 67 வயது வரை வாழ்வான்.
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதி, எட்டாம் அதிபதி இவர்கள் சர (மகர) ராசியிலும் 12ம் அதிபதி உபய (கன்னி) ராசியிலும் இருந்தால் ஜாதகன் 66 வயது வரை வாழ்வான்.
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதி, எட்டாம் அதிபதி இவர்கள் உபய (கன்னி) ராசியிலும் 12ம் அதிபதி உபய (தனுசு) ராசியிலும் இருந்தால் ஜாதகன் 57 வயது வரை வாழ்வான்.
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதி, எட்டாம் அதிபதி இவர்கள் ஸ்திர (சிம்ம) ராசியிலும், 12ம் அதிபதி உபய (தனுசு) ராசியிலும் இருந்தால் ஜாதகன் 71 வயது வரை வாழ்வான்.
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதி, எட்டாம் அதிபதி இவர்கள் ஸ்திர (கும்ப) ராசியிலும், 12ம் அதிபதி உபய (மீன) ராசியிலும் இருந்தால் ஜாதகன் 68 வயது வரை வாழ்வான்.
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதி, எட்டாம் அதிபதி இவர்கள் உபய (மீன) ராசியிலும், 12ம் அதிபதி உபய (மிதுன) ராசியிலும் இருந்தால் ஜாதகன் 55 வயது வரை வாழ்வான்.
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதி, எட்டாம் அதிபதி இவர்கள் ஸ்திர (ரிஷப) ராசியிலும், 12ம் அதிபதி உபய (மிதுன) ராசியிலும் இருந்தால் ஜாதகன் 71 வயது வரை வாழ்வான்.
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதி, எட்டாம் அதிபதி இவர்கள் சர (துலா) ராசியிலும், 12ம் அதிபதி ஸ்திர (விருச்சிக) ராசியிலும் இருந்தால் ஜாதகன் 67 வயது வரை வாழ்வான்.
ஜென்ம லக்னம் மேஷமாக இருந்து லக்னாதிபதி, எட்டாம் அதிபதி இவர்கள் உபய (மீன) ராசியிலும், 12ம் அதிபதி சர (மகர) ராசியிலும் இருந்தால் ஜாதகன் 72 வயது வரை வாழ்வான்.


