Homeநட்சத்திர ரகசியங்கள்நட்சத்திர ரகசியங்கள் : உத்திரம் நட்சத்திரம்

நட்சத்திர ரகசியங்கள் : உத்திரம் நட்சத்திரம்

உத்திரம் நட்சத்திரம்

உத்திரம் 27 நட்சத்திரங்களில் 12 வது இடத்தை பெறுவது உத்திர நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரியன். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசிக்கும், 2,3,4ம் பாதங்கள் கன்னி ராசிக்கும் உரியதாகும். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. உடலில் முதுகெலும்பு பகுதியை முதல் பாதமும், 2,3,4ம் பாதங்கள் குடல், சிறுநீர்ப்பை, கல்லீரல் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் டே, டோ ,பா, பி ஆகியவை தொடர் எழுத்துக்கள் பா,டீ ஆகியவையாகும்.

குண அமைப்பு

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதியாக சூரிய பகவான் இருப்பதால், நல்ல மன வலிமையும், உண்மையை பேசும் குணமும், கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும், நல்ல அறிவாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். கம்பீரமான நடையும், பெண்களை கவரும் உடலமைப்பும் இருக்கும். இவர்களை கண்டவர்கள் மேலும் மேலும் பேசவும், பழகவும் ஆசைப்படும் அளவிற்கு வசீகர தோற்றமிருக்கும். அனைவரையும் கவரக்கூடிய பேச்சாற்றல் இருந்தாலும், குறைகளைக் கண்டால் முகத்தில் அடித்தார் போல் பேசக்கூடியவர்கள். எந்த இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் தங்களுடைய நிலைமையில் இருந்து தடம் மாறாமல் சமாளிப்பார்கள். அனுபவ அறிவு அதிகம் இருக்கும். ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும். எவரையும் அலட்சியம் செய்யமாட்டார்கள். தன்னலத்தை விட பிறர் நலத்தை பேணிக்காப்பார்கள். சிக்கனத்தை கையாள்பவர்களாகவும்,சுயமரியாதையும், கண்ணியமும் உடையவராகவும் இருப்பார்கள்.

குடும்பம்

உத்திர நட்சத்திரக்காரர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கறையும் பாசமும் கொண்டிருப்பார்கள். முன்கோபத்தால் சிறு சிறு வாக்குவாதங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். இளமை காலத்தில் சிறு துன்பங்களை சந்திக்க வேண்டி இருந்தாலும் 30 வயதிலிருந்து செல்வம், செல்வாக்கு யாவும் சேரும். பூர்வீக சொத்துக்கள் அதிகம் இருந்தாலும் தங்களுடைய சொந்த முயற்சியால் வீடு, மனை, வாகனங்கள் போன்றவற்றை சேர்ப்பார்கள். ஆடம்பர பொருள்களை வாங்கி சேர்ப்பார்கள். அடிக்கடி பசி எடுப்பதால் சிறுக சிறுக உணவுகளை உண்பார்கள். சிறு வயதிலேயே தாய் அல்லது தந்தையை இழக்க வேண்டி இருக்கும். மனைவி பிள்ளைகளின் மீது அதிக அக்கறை உடையவராக இருப்பார்கள்.

தொழில்

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனோதிடமும், அறிவாற்றலும் அதிகம் இருப்பதால் பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்களாகவோ அல்லது பெரிய பெரிய நிறுவனங்களை அமைத்து அதில் பல ஆட்களை வைத்து வேலை வாங்குபவர்களாகவோ இருப்பார்கள். தொழிலாளி, முதலாளி என்ற பாகுபாடுன்றி அனைவரையும் சமமாக நடத்துவாதால் நல்ல மனதுள்ளவர்கள் என்று பெயர எடுப்பார்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவார்கள். வேத சாஸ்திரம் மற்றும் ஜோதிடம், கலை, இசை போன்றவற்றாலும் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். எந்த ஒரு போட்டி, பொறாமைகளையும் தவிடு பொடியாக்க கூடிய அளவிற்கு மனோதிடம் பெற்றவர்கள்.

நோய்

இவர்களுக்கு முதுகு மற்றும் கழுத்து பகுதியில் பிரச்சனை வர வாய்ப்புகள் அதிகம். மேலும் ரத்தக்கொதிப்பு, ரத்த நாளங்களில் அடைப்பும், மூளை நரம்புகளில் ரத்த அடைப்பும் உண்டாகும். உடல் நிலையில் பலவீனமாக இருப்பார்கள்.

தசை பலன்கள்

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக வரும் சூரிய தசை ஆறு வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு மீதமுள்ள சூரிய தசை காலங்களை அறியலாம். சூரியன் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், தந்தைக்கு முன்னேற்றம் கொடுக்கும். பலமிழந்து இருந்தால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும், தந்தைக்கு கெடு பலன்களையும் உண்டாக்கும்.

இரண்டாவதாக வரும் சந்திர தசை காலங்களில் ஜல தொடர்புடைய பாதிப்புகள் ஏற்படலாம். கல்வியில் ஏற்ற இறக்கமான சூழலை உண்டாக்கும்.

மூன்றாவதாக வரக்கூடிய செவ்வாய் தசையில் எதிர்பார்த்த அளவிற்க்கு முன்னேற்றம் ஏற்படாது என்றாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேற்றத்தை அடைந்து விட முடியும்.

நான்காவதாக வரும் ராகு தசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும் ராகு நின்ற வீட்டு அதிபதி பலம் பெற்று இருந்தால் பல வகையில் யோகத்தையும் உண்டாக்கும்.

குருதசை காலங்களும் ஓரளவுக்கு ஏற்றத்தை அளிக்கும். ஆறாவதாக வரும் சனி தசை காலங்கள் உயர்வான அந்தஸ்தினை அள்ளிக் கொடுக்கும்

உத்திர நட்சத்திரக்காரர்களின் ஸ்தல விருச்சம் அலரி ,இலந்தை மரமாகும். இவற்றை தொடர்ந்து வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திர ஜோடியை மார்ச் மாதத்தில் இரவு 12 மணிக்கு மேல் வானத்தில் காணலாம்.

உத்திர நட்சத்திரத்தில் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

உத்திர நட்சத்திரத்தில் பூ முடித்தல், தாக்கு பொன் உருக்குதல். திருமணம், சீமந்தம், புதிய வாகனம், ஆடை, அணிகலன்களை வாங்குதல், வியாதிக்கு மருந்து உட்கொள்ள மேற்கொள்ளுதல், தெய்வப்பிரதிஷ்டை செய்தல், விதை விதைத்தல், வியாபாரம் தொடங்குதல், புதிய வேலையில் சேருதல், குளம், கிணறு வெட்டுதல், ஆயுதப் பயிற்சியை மேற்கொள்ளுதல் போன்ற நல்ல காரியங்களை செய்யலாம்.

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயங்கள்

வடகண்டம் என தற்போது அழைக்கப்படும் கருவீர ஸ்தலத்தில் கரவீரநாதரும் அன்னபிரத்யட்ச மின்னமையும் அருள் பாலிக்கும் தலத்தின் தலவிருட்சம் அலரி மரமாகும். இது திருவாரூர் கும்பகோணம் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

காஞ்சிபுரத்துக்கு மேற்கே உள்ள திருப்பனங்காட்டில் வீற்றிருக்கும் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார், உடனுறை பனங்காடீஸ்வரையும் வணங்கலாம்.

ஸ்ரீவைகுண்டத்திற்கு அருகிலுள்ள திருகுளந்தை என்னும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ குளந்தை வள்ளி தாயார், ஸ்ரீ அலமேலு மங்கை தாயார் உடனுறை பெருமாளையும் வழிபடலாம்.

சென்னை பாடியில் திருவலிதாயத்தில் உள்ள ஸ்ரீ தாயம்மை உடனுறை, ஸ்ரீ வல்லீசரரையும் வழிபடுவது நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே

விஷ்ணுபத்ன்யை ச தீமஹி

தந்நோ லட்சுமி பிரசோதயாத்

பொருந்தாத நட்சத்திரம்

கிருத்திகை,புனர்பூசம்,விசாகம்,உத்திராடம்,பூரட்டாதி,ஆகிய ஆண் பெண் நட்சத்திரக்காரர்களை திருமணம் செய்ய கூடாது.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular