ராகு-கேது பகவான் உபாசன மந்திரம்
மூலமந்திரம்:
கயாநச்சித்ர ஆபுவதூ தீஸதாவ்ருதஸ்ஸகா கயாச்சிஷ் யாவ்ருதாஸ் சுவாஹா.(உரு 108 )
பூஜை விதி:
இராகு – கேது பகவானுக்கு வாரம் ஏற்படாததினால் வாரத்திலேனும் காலையில் ஸ்நானஞ் செய்து மடிகட்டி விபூதி அணிந்து அனுட்டான ஜெபதபமுடித்து வீட்டின் சுத்தமான இடத்தில் மெழுகிக் கோலமிட்டு ஆசனப்பலகையிலிருந் தாமிரத் தகட்டில் மேற்கண்ட சக்கரத்தை வரைந்து அபிஷேக செய்து வாழையிலை விரித்து அதில் கிழக்கு முகமாக தகட்டை வைத்து விபூதி , சந்தனம் , குங்குமஞ்சாத்தி மந்தான அல்லது செவ்வரளிப் புஷ்பத்தால் அலங்கரித்தருச்சித் வெற்றிலை , பாக்கு , தேங்காய் , பழம் , புளியோதரை , வடை நைவேத்தியஞ் செய்து சாம்பிராணி , கற்பூர தீபதூபங் கொடுத்த நமஸ்கரித்து மேற்படி மூலமந்திரம் உரு 108 தரம் ஜெபித்து மேற்படி யந்திரத்தைத் தாயத்திலடைத்துச் சாம்பிராணி தூபங்கொடுத்து இராகு – கேது பகவானைச் சிந்தையி நினைத்துத் தோத்தரித்துக் கையில் அல்லது இடுப்பில் கட்டவும்.
இதன் பிரயோஜனம்:
இராது கேது பகவான் திசை , புத்தி , பார்வை சம்பந்தங்களினால் கஷ்டமடையும் ஜாதகர்களுக்கு மேற்கண் விபரப்படி செய்யச் சாந்தமாகிச் சுகமடைவார்கள் . சுபம்.
யந்திரம் தேவைப்படும் அன்பர்கள் Telegramல் தொடர்பு கொள்ளவும்