சனி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர பலன்கள்
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சனி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தை லக்கினமோ , சந்திரனோ,லக்கினத்தின் அதிபதியோ பெற்றால் அந்த ஜாதகருக்கு சனி மூலம் கிடைக்கக் கூடிய பலன்கள் தடைபடும்.
அவரவர் ஜாதகத்தில் சனி எந்த பாவத்தில் உள்ளாரோ அந்த பாவத்தின் அதிபதி சனிபெற்ற நட்சத்திரத்தின் எதி ரிடை நட்சத்திரத்தை பெற்று இருப்பின் அந்த பாவத்திற்கு சனி மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காமல் போகும்
1.இதன் பலன்கள் :
மானபங்கம் உடல் பாதிப்பு , விபத்து ரண சிகிச்சை , பல வித சோதனைகளுக்கு உட் படுதல்.
2.இதன் பலன்கள் :
அன்பு , பாசம் , இனபந்து , நட்பு என்கிற வகையில் ஏற்படுகின்ற பாதிப்புகள் ஒருவரால் மிரட்டப்படுவது கட்டுப்படுத்தப்படுவது , கயிறு சங்கிலி போன்றவைகளால் கட்டப்படுவது.
3.இதன் பலன்கள்:
பலவிதமான தண்டனைகளுக்கு ஆளாதல் , அரசாங்க வகை காவல் துறை அபராதங்கள் , இல்லறபாதிப்பு குழந்தைகளின் பிரிவு.
4.இதன் பலன்கள்:
வாழ்க்கையில் சுகங்களை அனுபவிக்காத நிலை , வேண்டாத வேலைகளை செய்து மாட்டிக்கொள்வது பிறரின் பழி பாவத்திற்கு ஆளாவது.
5.இதன் பலன்கள்:
தாய் , தந்தையரின் பிரிவு, ஆதரவு தந்து காப்பாற்றியவர்களால் வரும் ஆபத்து, கவனக் குறைவான வாழ்க்கை.
6.இதன் பலன்கள்:
பிரயாணத்தில் பயம்,பெண்களால் வரும் இடையூறுகள்,மனகசப்பான வாழ்க்கை.
7.இதன் பலன்கள்:
எதிர்பாராத கொடுமைகள்,முன்னேற்ற தடைகள்,தகுதிக்கு மீறிய வேலைகளால் வரும் பாதிப்பு,உடல் நலம் கெடுதல்.
1முதல் 7வரையில் சொல்லப்பட்ட பலன்கள் சனி தசாபுத்தி அந்தர காலங்களிலும்,பூசம்-அனுஷம்-உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களிலும் சனி கிழமைகளிலும்,சனி ஓரை வரும் நேரங்களிலும் சொல்லப்பட்ட பலன்கள் நடைமுறைக்கு வரும்.
சனி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர அட்டவணையை பெற கீழே சொடுக்கவும்.