கிருஷ்ண ஜெயந்தி 2024
கிருஷ்ணர் பிறந்த நாளை தான் ‘கிருஷ்ண ஜெயந்தி’ என்று கொண்டாடுகிறோம்.மேலும் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றுதான் கிருஷ்ணர்அவதாரம் ஆகும்.
அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்தி இந்த 2024-ம் ஆண்டு 26ம் தேதி திங்கட்கிழமை அன்று வருகின்றது. அஷ்டமி திதி ஆகஸ்ட் 26 ஆம் தேதி காலை 9:13 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 27ம் தேதி காலை 07:30 மணி வரை உள்ளது. ஆகஸ்டு 26ம் தேதி மாலை வேளையில் ‘கிருஷ்ண ஜெயந்தி’ வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக கருதப்படுகிறது. நள்ளிரவில் தங்களது விரதத்தை முடித்துக் கொள்வது வழக்கம்.
‘கிருஷ்ணஜெயந்தி’ நாளில் விரதம் இருப்பவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. அன்னாளில் நீங்களும் விரதம் இருக்க விரும்பினால் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாத விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள்..
‘கிருஷ்ண ஜெயந்தி’ நாளில் விரதம் இருப்பவர்கள் உணவு ஏதும் சாப்பிடாமல் தண்ணீர் அருந்தாமல் விரதம் இருக்கலாம். ஒருவேளை நீங்கள் மருந்து எடுத்துக் கொள்பவராக இருந்தால் பழங்களை மட்டும் சாப்பிடலாம். அதுபோல அரிசியில் சமைத்த உணவை தவிர, ஜவ்வரிசி கஞ்சி, சப்பாத்தி போன்றவற்றை சாப்பிடலாம்.
‘கிருஷ்ண ஜெயந்தி’ நாளில் விரதம் இருப்பவர்கள் தேவைப்படுபவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை தானமாக கொடுப்பது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இப்படி செய்தால் வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்குமாம், மேலும் அந்நாளில் பசுக்களுக்கு உணவளிப்பது புண்ணியமாக கருதப்படுகிறது.
விரதம் இருப்பவர்கள் நாள் முழுவதும் சோர்வாக இல்லாமல் முழு ஆற்றலுடன் இருக்க பழங்கள் மற்றும் உலர் பழங்களை சாப்பிடலாம். வீட்டில் வெங்காயம் பூண்டு பயன்படுத்தவே கூடாது. வெங்காயம் பூண்டு சேர்க்கபடாத உணவைத்தான் வீட்டில் சமைக்க வேண்டும். அதுபோல இறைச்சி மற்றும் அசைவு உணவுகளை சாப்பிடக்கூடாது. விரதம் இருப்பவர்கள் டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் முடிந்த அளவிற்கு எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பழங்கள், பால், பழ ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.