குரோதி வருட பலன்கள் 2024-ரிஷபம்
சுக்கிரனின் ஆசி பெற்ற ரிஷப ராசி அன்பர்களே!! வரும் குரோதி வருடம் உங்களுக்கு குதூகலமான வருடமாக இருக்கும். ராசிநாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் வெகு நன்மைகள் கிடைக்கும். மேலும் கூடவே இருக்கும் ராகு உங்கள் அடி மனதில் உள்ள ஆசைகளை அமர்க்களமாக நிறைவேற்றி வைப்பார். இந்த வருடம் உங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும். அதற்கு தகுந்த பணம் ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு வந்து சேரும்.
ரிஷப ராசி குழந்தைகளுக்கு இளைய சகோதரி பிறக்க வாய்ப்புண்டு. சில ரிஷப ராசி அன்பர்களின் சகோதரர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு. இந்த வருடம் வீட்டுக்கு மிக அதிக முதலீடு செய்து உங்கள் கனவு இல்லத்தை கட்டுவீர்கள். வேறு சிலர் வீட்டை விட்டு அதனை வெளிநாடு அல்லது அரசியல் சார்ந்து செலவழிப்பீர்கள். உங்கள் தாயார் உங்களின் மூத்த உடன்பிறப்புடன் சென்று விடுவார், ஆரம்ப கல்வி மாணவர்கள் உயரிய பள்ளியில் இடம் பிடிப்பீர்கள். மீனவர்கள் அரசின் ஆபத்து உதவிகளைப் பெற்று நன்மையும் லாபமும் அடைவீர்கள்.
இந்த வருடம் உடல் நலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். கால் பாதம் வீங்கி கொள்ளக்கூடும். பாதத்தில் நரம்பு பிடித்துக் கொள்ளும். சிலருக்கு காலில் விஷக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. முன்பு பார்த்த வேலையில் மீண்டும் இணையலாம். சிலர் புத்தி அடிப்படையாக கொண்டு செய்யும் வேலைகள் அல்லது வங்கி வேலை, சினிமா எடிட்டிங் வேலை, வெளிநாட்டில் ஆசிரியர் பணி அல்லது கம்ப்யூட்டரில் பாடம் நடத்தும் வேலை என இந்த மாதிரியான வேலைகள் உங்களுக்கு வந்து சேரும்.
குரோதி வருட கிரக நிலைகள்
12ல் சூரியன் குரு,2ல் சந்திரன் ,5ல் கேது ,10ல் செவ்வாய் சனி ,11ல் புதன் சுக்கிரன், ராகு |
எதிரிகளின் பெருக்கம் அதிகரிக்கும். எதிரிகள் மிக பலமாகி உங்கள் கண்களில் விரலை விட்டு ஆட்டுவர். கடனும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. நிறைய ரிஷப ராசியினருக்கு இந்த வருடம் காதல் திருமணம் கைகூடும். வேலை பார்க்கும் இடத்தில் தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் பெண்கள் வரனாக வருவதற்கு வாய்ப்பு உண்டு.
இப்போது வியாபாரம் ஆரம்பித்தால் உங்களின் தந்தையின் உதவி இருக்கும். தர்மகர்மாதிபதி எனும் யோகத்தில் உங்கள் அதிர்ஷ்டம் மிளிர்கிறது. இந்த யோகம் வெளிநாட்டு முதலீடுகளை தரும். சட்டத்துக்கு புறம்பான வருமானம் தரும்.உங்கள் எண்ணங்களை ஏதோ ஒரு மட்டமான வழியிலாவது ஈடேற்றி விடும்.
இந்த வருடம் இவர் பிறந்த இடத்துக்கு தான் அதிகமாக பயணம் மேற்கொள்வார் அல்லது பிறந்த ஊரில் ஒரு இடம் விடாமல் சுற்றிக் கொண்டிருப்பார் அது அரசியல் அல்லது அரசுப்பணி அல்லது தந்தை அல்லது மூத்த சகோதரன் என காரணம் ஏதோ ஒன்று இருக்கும் பிறந்த ஊர் அலைச்சலும் செலவும் அதிகம் இருக்கும்.
ஒருமுறை ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்க ரங்கநாத பெருமாளை வணங்கி வரவும். சனி+செவ்வாய் சேர்க்கைக்கு வெள்ளிக்கிழமை வெண் தாமரை பூ, சேமியா பாயசம் இவற்றோடு வெள்ளைத் துணியில் 24 மிளகு பொட்டலம் கட்டி, தாமரை நூல் திரியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபமேற்றவும்.