Homeஆன்மிக தகவல்திருமண பொருத்தம் : திருமணத்திற்கு நாள் குறிப்பது எப்படி?

திருமண பொருத்தம் : திருமணத்திற்கு நாள் குறிப்பது எப்படி?

திருமண பொருத்தம்

திருமணத்திற்கு ஏற்ற மாதங்கள் 

சித்திரை ,வைகாசி ,ஆனி ,ஆவணி  ,கார்த்திகை ,தை ,பங்குனி 

திருமணம் நடத்த ஆகாத மாதங்கள் 

ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகளோ அல்லது இரண்டு பெளர்னமிகளோ வரும் மாதம் மல  மாதம் ,அம மல  மாதங்களில் திருமணம் செய்வது நன்றன்று .

திருமணதிற்கு  ஏற்ற பட்சம் 

வளர்பிறை என்ற சுக்லபட்சத்தில் நடைபெறுவது நன்று 

திருமணத்திற்கு ஏற்ற கிழமை 

  • புதன் ,வியாழன் ,,வெள்ளி ,நன்று. 

குருட்டு நாள்கள் என்னும் செவ்வாய் ,சனி போன்ற தினங்களை தவிர்ப்பது நல்ல்து 

ஒற்றை கண் நாள் என்னும் ஞாயிறு, திங்கள்  கிழமைகளும் நன்றன்று.ஆனால் இன்றய காலகட்டத்தில் திருமண கூடம் ,ஞாயிறு விடுமுறை  முதலிய காரணமாக கிழமைகளுக்கு அதிக முக்கியத்துவம் யாரும் தருவதில்லை 

திருமணத்திற்கு நேரம்

திருமணத்திற்கு ஏற்ற லக்கினங்கள் 

ரிஷபம் ,மிதுனம் ,கடகம் ,கன்னி ,துலாம் ,தனுசு ,மீனம் என்ற எட்டும் நன்று .

சிலர் கும்ப லக்கினமும் நன்று என்று கூறுகிறார்கள். 

ஒரு சிலர் சிம்மம் ,மீனம்  உகந்தது என்கிறார்கள். 

திருமணத்திற்கு ஏற்ற திதிகள் 

துவிதியை ,திருதியை ,பஞ்சமி ,சப்தமி ,தசமி ,திரயோதசி ,ஆகிய சுப திதிகள் 

திருமணத்திற்கு ஏற்ற நட்சத்திரங்கள் 

ரோகினி ,மிருகசீரிடம் ,மகம் ,உத்திரம் ,உத்திராடம் ,அஸ்தம் ,உத்திரட்டாதி ,சுவாதி ,அனுஷம் ,மூலம் ,ரேவதி ஆகிய சுப நட்சத்திரங்கள் 

அஷ்டமி நிலை 

அஷ்டமி பொதுவாக சுப  காரியங்களுக்கு விலக்க பட்ட திதியாகும் .ஆனால் சுக்ல பட்ச (வளர்பிறை )அஷ்டமியன்று திருமணம் செய்யலாம் 

அமாவாசை 

அமாவாசை  நாள் பெற்றோருக்கு தர்ப்பணம் செய்யும் நாள் .ஆகையால் திருமணம் செய்வதில்லை 

மணமகன் பிறந்த நட்சத்திரத்தன்று  திருமணம் செய்தல் கூடாது 

உதய காலம் 

கோதூளி  வேளை  என்னும் உதயகால லக்கினத்தில் திதி தோஷம் இல்லை 

அபஜித்  முகூர்த்த காலம் என்னும் உச்சி வேளையில் நட்சத்திர தோஷம் இல்லை 

தமிழகத்தில் காலை 12 மணிக்குள்  நடத்துவது மரபு .காலை 4.30 மணி முதல் 6.00 மணிக்கும் உதயாதிக்கு  முன் செய்யும் மரபும் சிறந்தது.

குரு பலம் 

ஆண்  பெண் இருவருக்கும்  அல்லது யாராவது ஒருவருக்கு குருபலம் வரும் போது திருமணம் நடத்துவது நன்று.

நட்சத்திரங்கள் :

ரோஹிணி ,மிருகசீரிடம் ,மகம் உத்திரம் ,ஹஸ்தம் ,சுவாதி,அனுஷம் ,மூலம் ,உத்திராடம் ,திருவோணம் ,உத்திரட்டாதி ,ரேவதி -உத்தமம் 

அசுவினி ,புனர்பூசம் ,பூசம் ,சித்திரை ,அவிட்டம் ,சதயம் ,முதலியவை மத்திமம் 

நட்சத்திரங்கள் தம்பதியர் நட்சத்திரத்திலிருந்து 2,4,6,8 ஆக இருத்தல் வேண்டும் 

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!