HomeGem StonePearl Mala:முத்து மாலை அணிவதால் கிடைக்கும் பலன்கள்

Pearl Mala:முத்து மாலை அணிவதால் கிடைக்கும் பலன்கள்

Pearl Mala:முத்து மாலை


ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவர்களது தொழில் மற்றும் உடல்நிலை மேம்பட்டு, குடும்பச் சந்தோசம், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை மனதில் கொண்டு அவர்களின் ராசி நட்சத்திரத்திற்குப் பொருந்தும் ராசிக்கற்களை வாங்கி அணிவார்கள்,இந்த ராசிக்கற்களில் நவகிரகங்களின் அருளை பூரணமாகப் பெற்ற கற்களை நவரத்தினங்கள் என்றும் இதர ரத்தினங்களை உபரத்தினங்கள் என்றும் கூறுவார்.


முத்து(Pearl)

நவரத்தினங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் முத்து, தம்பதியினரை ஒற்றுமையாக வைக்கும் சக்தி உள்ளது என்று நம்பப்படுகிறது.இயற்கையாக நீரில் வாழுகின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பியிலிருந்து எடுக்கப்படுகிறது.முத்துக்கள் பெரும்பாலும் உருண்டை வடிவத்தில் தான் கிடைக்கிறது ஆனால் ஒரு சில சமயங்களில் குறிப்பிட்ட வடிவத்தைப் பெறாமல் முத்துக்கள் கிடைக்கிறது இதற்கு Baroque pearl என்று கூறப்படுகிறது. முத்தின் பண்பையும் அதன் குணங்களையும் பார்ப்போம்.


முத்தின் சிறப்புக்கள்

ஆங்கில நாளேட்டின் படி ஜூன் மாதத்தைக் குறிக்கும் கல்லாகக் கருதப்படும் முத்து,ஹிந்து மதத்தினரின் புனித நூல்களுள் ஒன்றான கருடபுராணத்தில் கூட முத்தை பற்றிய குறிப்புக்கள் இடம் பெறுகிறது.புனித குரானில் கூட சொர்க்கத்தில் இருப்பவர்கள் முத்து மணியை அணிந்து கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட பட்டுள்ளது.

Pearl Mala

முத்தின் மருத்துவப் பண்புகள்

  • முத்தை நீரில் ஊறவைத்துப் பருகினால் வயிற்றில் உள்ள அமில சக்தியை மாற்ற உதவும்.
  • மேலும், குடல் அழற்சி,சிறுநீர் கடுப்பை ஏற்படாமல் தடுக்கும்.
  • மேலும்,மூளைவளர்ச்சியின்மை,தூக்கமின்மை,ஆஸ்த்துமா போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் ஏற்படுத்தும் குணத்தைக் கொண்டது.
  • பண்டைய காலத்தில்,முத்துக் கற்களைப் பொடியாக்கி மன நிலை குன்றியவர்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது.

முத்து கற்களை அணிவதன் மூலம் ஏற்படும் நன்மைகள்

  • முத்து மணி,பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்ற அணியாகவே கருதப்பட்டு வருகிறது.
  • ஆனால்,முத்து மணியை ஆண்கள் அணிவதன் மூலம் தன்னம்பிக்கை ஏற்படும்.
  • பெண்கள் முத்தை அணிவதன் மூலம் அவர்களுக்குப் பாதுகாப்பான உணர்வு ஏற்படுவதோடு கணவன் மனைவிக்கிடையேயான இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக இருக்க உதவும்.
  • முத்து கற்களை மாணிக்கத்துடன் சேர்ந்து அணிந்தால் வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாகும், சொத்துச் சேர்ப்பதில் ஏற்படும் சிக்கல்கள் நீங்கும்.விலகி சென்ற உறவுகளைப் புதுப்பிக்கும் குணம் முது கற்களுக்கு உண்டு.

முத்தை யாரெல்லாம் அணியலாம்??

  • சந்திரனின் முழு ஆசியைப் பெற்ற இக்கல்லை கீழுள்ள விதிகளுக்கு உட்பட்டவர்கள் அணிகலனாக அணிந்துகொள்ளலாம்
  • சந்திரனின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் கடக ராசிக்காரர்கள்.
  • ரோஹிணி,அஸ்தம்,திருவோணம் நட்சத்திரகாரர்கள்.
  • எண்கணித படி 2,11,20,20,7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்.
  • விதி எண்,பெயர் எண் 3,7 அமைய பெற்றவர்கள்.
  • ஆங்கில நாளேட்டின் படி ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் அணிந்து கொள்ளலாம்.

முத்துக் கற்களை எந்தக் கிழமையில் அணிய ஆரம்பிக்க வேண்டும்..?

  • சாஸ்திரப் படி ஒவ்வொரு கல்லையும் ஒரு குறிப்பிட்ட தினத்தில்தான் அணிய ஆரம்பிக்க வேண்டும்.
  • அதன் அடிப்படையில் முத்துக் கல்லை திங்கள் அன்று இஷ்ட தெய்வத்தை வழிபட்டு அணிந்துகொள்ளலாம்.

முத்துக் கல் எந்தத் தொழிலுக்கு ஏற்றது?

ஒருவர் தான் செய்யும் தொழிலுக்கேற்ற அதிர்ஷ்ட கல்லை அணிந்தால் பெரிய அளவில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்.

இசை,கணிதம் போன்ற துறைகளில் பணி புரிபவர்கள் முத்துக்கற்களை அணிந்தால் அவர்களின் துறையில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!