மைசூர் நிமிஷாம்பாள் அம்மன்
நிமிஷாம்பாள் அம்மன் வரலாறு:
கர்நாடக மாநிலத்தில் காவிரி நதிக்கரையில் நிமிஷாம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. உண்மையான பக்தர்களின் பிரார்த்தனைக்கு ஏற்ப ஒரு நிமிடத்தில் அருள் புரிவதால் நிமிஷாம்பாள் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இக்கோவிலில் சிவபெருமான் அகீஸ்வராக அருள்புரிகிறார்.
நிமிஷாம்பாள் அம்மன் சிறப்பு :
இந்த ஆலயத்தில் அகீஸ்வரர் சன்னதி, நிமிஷாம்பாள் சன்னதி, லக்ஷ்மி நாராயணர் சன்னதி ஆகிய மூன்று சன்னதியும் ஒரே வரிசையில் இருப்பது சிறப்பாகும். இக்கோவிலின் பூசாரிகள் காக்கைக்கு பலிபீடத்தின் மீது வனிபோஜன் வைத்த பிறகு அங்கு இருக்கும் பிள்ளை மணி அடிப்பர் அதைக்கேட்ட காக்கைகள் வரிசையில் உண்ண வரும் காட்சி அனைவரையும் வியக்க வைப்பதாகும்.
பரிகாரம் :
பல வருடங்கள் வெவ்வேறு காரணங்களினால் ஒத்திவைக்கப்படும் திருமணம், நிமிஷாம்பாளை இத்திருத்தலத்தில் தரிசித்த பிறகு உடனே நடக்கும். இதை அனுபவித்த பல பக்தர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
வழித்தடம்:
கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீரங்கப்பட்டினம் செல்லும் வழித்தடத்தில் கன்ஜம் என்ற இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், மைசூரில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
Sri Nimishambha Temple,
Srirangapatna,
Karnataka-571438