திருப்பாவை பாடல் 1 விளக்கம் – ஆழமான ஆன்மீகப் பொருள் மற்றும் பாடல் பொருத்தம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

திருப்பாவை

திருப்பாவை-பாடல் -1

நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர்,மற்ற சிறுமியர்களை விடியற்காலை நீராட அழைத்தல்….

திருப்பாவை

பௌளி ராகம், ஆதிதாளம்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால் ;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்!
பாரோர் புகழப் படிந்து – ஏலோர் எம்பாவாய்.

எளிய தமிழ் விளக்கம்:

மார்கழி மாதம் பௌர்ணமி நாள் இது.குளிக்க வர விரும்புகின்றவர்களே! ஆபரணங்களை அணிந்தவர்களே! செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில் இருக்கும் இளம் பெண்களே வாருங்கள்.கூர்மையான வேலைக் கொண்டு தீங்கு செய்பவருக்குக் கொடியவனான, நந்தகோபனின் பிள்ளை அழகான கண்களுடைய யசோதையின் சிங்கக் குட்டி மேகம் போல உடல், சிவந்த கண், சூரிய சந்திரனைப் போல முகம் கொண்ட நாராயணன் நாம் விரும்பியதைக் கொடுப்பான்; உலகம் புகழப் பாவை நோன்பில் ஈடுபடலாம் வாருங்கள்.

எளிய ஆங்கில விளக்கம்:

Thiruppavai – 1 – Raga: Bowli, Adi

In the Month of Margazhi of auspicious full-moon day
bejeweled girls who would join us for the bath!
come along prosperous young girls of Ayarppadi
Narayana is the son of Nandagopa renowned for his sharp spear and
fierce
deeds ( towards enemies)
He is the darling-child, lion-cub of beautiful-eyed Yosada.
our dark-hued, lotus-eyed, radiant moon-faced Narayana alone will
grant us our boons.
Girls come assemble for the paavai nonbu
and win the world’s prais

Leave a Comment

error: Content is protected !!