Homeஆன்மிக தகவல்திருப்பாவைதிருப்பாவை பாடல் 15 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 15 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 15

எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப்பாட எழுந்துவா!

குறிப்பு: சென்ற பாடல்வரை ஆண்டாள், கோபியரை எழுப்பிக் கொண்டிருந்தாள். முதல் முறை யாக இப்பாடலில் இருந்து துயிலில்
விழித்துக்கொண்ட கோபியருடன் ஆண்டாள் உரை யாடுவதைக் காணலாம்.

பேகடா ராகம், மிச்ரசாபு தாளம்

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்;
வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்;
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக!
ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறு உடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்;
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனைப் பாடு – ஏலோர் எம்பாவாய்.

திருப்பாவை பாடல் 15

எளிய தமிழ் விளக்கம்:

எழுப்புபவர்: இளங்கிளி போன்றவளே! என்ன, இன்னுமா தூங்குகிறாய்?

எழுந்திருப்பவர்: பெண்களே! இதோ வருகிறேன்! ‘சில்’ என்று கூச்சலிட்டு எழுப்பாதீர்கள்.

எழுப்புபவர்: நீ வாயாடி. நீ சொல்லும் கட்டுக்கதைகள் முன்னமே நாங்கள் அறிவோமே!

எழுந்திருப்பவர்: நீங்கள்தான் வாயாடிகள்; பரவாயில்லை; நானேதான் வாயாடியாக இருந்துவிட்டு போகிறேன்.

எழுப்புபவர்: நீ உடனே புறப்பட்டு வா; வேறு என்ன வேலை இருக்கிறது?

எழுந்திருப்பவர்: எல்லாப் பெண்களும் வந்து விட்டார்களா?

எழுப்புபவர்: எல்லோரும் வந்து விட்டார்கள். நீயே வந்து எண்ணிப்பார். குவலயாபீட யானையையும் கம்சன் முதலிய பகைவர்களையும் அழித்த கண்ணன் புகழ் பாட எழுந்துவா.

எளிய ஆங்கில விளக்கம்:

Thiruppavai – 15 – Raga : Begada, Misra Chapu

Note: This verse is in the form of a conversation/argument between
the maidens at the threshold of a house the maiden within the house
“What is this, Pretty-like damsel! Are you still sleeping ?”
“Do not use harsh words!, I am coming
“You can talk well; we know it already”
“As it is, you are all strong; doesn’t matter, let me be the one(harsh in
speech)”
“Come quickly and join us”
“Has everyone come?”
“Yes, everyone has come, count for yourself”
“Let us all sing in praise of the Krishna who killed the elephant
(Kuvalayapida) and Kamsa.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!