Homeஆன்மிக தகவல்திருப்பாவைதிருப்பாவை பாடல் 16 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 16 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 16

பாவையர்கள் நந்தகோபன் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவைத்திறக்க வேண்டுதல்.

குறிப்பு: சென்ற பாடல் வரை, தூங்கிக்கொண்டிருந்த கோபியரை எழுப்பிய பாடல்களைக் கண்டோம். இப்பாடலில் பாவையர்கள் நந்தகோபன் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவைத் திறக்கச் சொல்லுகின்றனர்.

மோஹன ராகம், ஆதி தாளம்

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்,
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக் கதவம் நீக்கு – ஏலோர் எம்பாவாய்.

திருப்பாவை பாடல் 16

எளிய தமிழ் விளக்கம்:

எங்களுக்குத் தலைவனான நந்தகோபனுடைய மாளிகையைக் காப்பவனே! கொடிகள் கட்டப்பட்டு விளங்கும் தோரண வாசல் காப்போனே! அழகிய தாழ்ப்பாளைத் திறந்து எங்களை உள்ளேவிடு. ஆயர்குலப் பெண்களான எங்களுக்கு மாயன் கண்ணபிரான் நேற்றே விரும்பியதைத் தருகிறேனென்று வாக்களித்துள்ளான். எனவே, அவனைத் துயிலெழுப்பத் (பாட) தூய்மையுடன்
வந்துள்ளோம். முதல் முதலிலே மறுக்காமல் பிணைந்து மூடிக்கொண்டுள்ள கதவைத் திறந்து எங்களை உள்ளேவிடு.

எளிய ஆங்கில விளக்கம்:
Thiruppavai – 16 – Raga Mohana, Adi

Till the previous song, Andal and her friends woke up her friends who
were fast asleep. In this song they all have gathered in front of
Nandagopan’s mansion. They approach the gate-keeper and request him
to open the door.
O-Gate keeper of our lord Nadagopala’s mansions
where festoons and flags flutter high
Open the doors richly decked with bells.
Our gem-hued lord gave us his word yesterday
we have come with a pure heart to sing his reverie
O noble one, for the first time without refusing
kindly unlatch the great front door and let us enter

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!