திருப்பாவை பாடல் 17
கதவு திறக்கிறது. கோபியர் உள்ளே சென்று, நந்தகோபனையும், யசோதையையும், பலதேவரையும் சயனத்திலிருந்து எழுப்புதல்.
ராகம் கல்யாணி, ஆதி தாளம்.
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா ! எழுந்திராய்;
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உளகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்;
செம் பொற் கழலடிச் செல்வா ! பலதேவா!
உம்பியும் நீயும் உகந்து – ஏலோர் எம்பாவாய்.
எளிய தமிழ் விளக்கம்:
உடை, தண்ணீர், சோறு இவற்றை தானம் செய்யும் எங்கள் எஜமானனான நந்தகோபாலரே எழுந்திருக்கவேண்டும். வஞ்சிக் கொடிக்கு கொழுந்து போல் முதன்மையானவளே! எங்கள் குலவிளக்கே; எஜமானியான யசோதையே விழித்துக்கொள். வானளாவிய ஓங்கி வளர்ந்த அனைத்துலகங்களையும் அளந்த தேவர்களுக்கெல்லாம் தலைவனே எழுந்திரு. பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழலை அணிந்த பலராமா நீயும் உன் தம்பியான கண்ணனும் எழுந்திருக்கவேண்டும்.
எளிய ஆங்கில விளக்கம்:
Thiruppavai – 17 – Raga : Kalyani, Adi
O king Nandagopala who gives food, water and shelter wake up
O queen Yasodha, the foremost scion among women of sterling
character
the beacon light please rise up
O lord of gods ! the one who grew up and pierced through the space
and measured all the worlds!
O prince Balarama the one who adorned with gold anklets! may your
younger brother and yourself get up from your sleep.