எந்த விநாயகரை வீட்டில் வைத்து வழி பட வேண்டும் ? எப்படி வழிபட வேண்டும் ? எந்த விநாயகரை வழிபட கூடாது ?

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

விநாயகர்

விநாயகர்

கோவில்கள், சித்தர்கள், மகான்கள், யோகிகள் இருப்பிடங்களில் ‘இடம்புரி விநாயகர்’ இருக்கலாம்.

நம் வீடுகளில் வலம்புரி விநாயகர், 6, 8, 10 சந்திரன் உள்ளவர்கள் ‘வலம்புரி விநாயகர்’ தான் வழிபட வேண்டும். இடம்புரி விநாயகர் வீட்டில் இருந்தால் அந்த விநாயகரை கோவில் (அல்லது) குளத்து கரையில் வைத்து விட வேண்டும்.

இடம்புரி விநாயகர் வீட்டில் இருந்தால் அக்கா, தங்கை அண்ணன், தம்பி யாராவது ஒருவர் மற்றொருவருடன் பேச மாட்டார்கள். அல்லது யாராவது ஒருவருக்கு குழந்தை இருக்காது. வீட்டில் சொத்துக்கள் பாகம் பிரிக்கப்படாமல் கோர்ட்டு, கேஸ் என அலைந்து கொண்டிருப்பர். இடம்புரி விநாயகர் படம் /சிலையை விநாயகர் கோவில் குளக்கரை அரசு மரத்தின் கீழ் வைத்து விட வேண்டும்.

கேது 12-ம் இடத்தில் இருந்தாலும் ,6ல் சந்திரனுடன் இருந்தாலும் ,சனி வீட்டில் இருந்தாலும் அந்த வீடுகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கேது திசை கேது புத்தி நடக்கும் போது பொருள் நஷ்டத்தை ஏற்படுத்தும். அப்படி நடப்பதற்கு காரணம் இடம்புரி விநாயகரே. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்கள் கேது இருந்தாலும் இடம்புரி விநாயகரால் தொல்லை ஏற்படும்.

பரிகாரம்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் வலம்புரி விநாயகருக்கு இரண்டு அருகம்புல் மாலை, ஒரு நெய் தீபம், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி, தீப தூபம் வைத்து வழிபடவும். நம் குருவை நினைத்து வழிபாடு பண்ணவும். கேது -அஸ்வினி மகம் மூலம் நட்சத்திரங்களில் இருந்து மூதாதையர்கள் சரியில்லாத மரணம் அடைந்திருந்தால் மூல நட்சத்திரமன்று பிரம்மாவிற்கு தேங்காய் மாலை, மிளகு சாதம், வாழைப்பழம், நெய் தீபம், தீப தூபம் செய்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும்.

ராகு நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம்,கேது அஸ்வினி, மகம் மூலம் நட்சத்திரங்களில் இருந்தால் அவர்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் விதவையாக இருப்பர். அல்லது துர்மரணம் நேரிடும். இந்தப் பாவம் சாமியாட விடாது. தெய்வ உத்தரவுகள் கிடைக்காது. குலதெய்வ கோவிலுக்கு செல்ல விடாது. தாய், தகப்பனுக்கு ஈம கிரியை செய்ய விடாது. தொழில் ரீதியாக நிரந்தரமாககர்மா இருந்து கொண்டே இருக்கும். நவகிரகத்திற்கு தினமும் ஒரு கிரகம் வீதம் சூரியனில் ஆரம்பித்து செவ்வாய் வரை தினமும் பாலபிஷேகம் செய்து அதற்குண்டான பரிகார தானியம் வைத்து தீப தூபம் காண்பித்து வழிபடவும்.

சூரியன் -சந்திரன்- குரு -ராகு- புதன்- சுக்கிரன்- கேது- சனி- செவ்வாய் இந்த வரிசையில் தீபம் ஏற்றி வழிபடவும்.

2 thoughts on “எந்த விநாயகரை வீட்டில் வைத்து வழி பட வேண்டும் ? எப்படி வழிபட வேண்டும் ? எந்த விநாயகரை வழிபட கூடாது ?”

  1. வணக்கம் அஸ்ட்ரோ சிவா. உங்களின் பதிவுகள் படிக்க படிக்க மிகவும் அருமை.
    அதே சமயத்தில் நீங்கள் எடுத்துரைக்கும் கருத்துக்கள் எந்த மூல நூல்களில் இருந்து எடுத்துள்ளீர்கள் என்பதையும் சேர்த்து பதிவிட்டால் படிப்பவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் நன்றி வணக்கம்.

    Reply

Leave a Comment

error: Content is protected !!