குரு பெயர்ச்சி பலன்கள்-கும்பம்
சனி பகவானின் அருள் பெற்ற கும்ப ராசி அன்பர்களே !!!
உங்கள் ஜென்ம ராசியில் இருந்த குரு பகவான் 13.4.2022 முதல் உங்கள் ராசியான கும்பத்திற்கு இரண்டாம் வீடான மீன ராசிக்கு செல்ல இருக்கிறார்.
ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்பது தன ஸ்தானம் , குடும்ப ஸ்தானம் , வாக்கு ஸ்தானம் நேத்திர ஸ்தானம் ஆகும் . இந்த இடத்தைக் கொண்டு பணம் , குடும்பம் , வாக்கு , கண்கள் , கல்வி , அதிர்ஷ்ட வாய்ப்புகள் , பயணம் , புதையல் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். சுபஸ்தானமான இரண்டாம் வீட்டில் குரு பகவான் வரும் காலம் பொற்காலம் என்றே சொல்லலாம்.இக்காலத்தில் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் என்றே சொல்லவேண்டும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும் . மனதில் இருந்த குழப்பங்கள் அகலும் , விலகிச் சென்ற உறவுகளும் நட்பும் மீண்டும் உங்களை நோக்கி வருவார்கள். அவர்களால் பல விதத்திலும் நன்மையும் உதவியும் உண்டாகும்.
தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடந்தேறும். திருமண இருப்பவருக்கு திருமணம் கூடி வரும் ; மனதில் புத்துணர்ச்சியும் செயலில் வேகமும் இருக்கும். எதிலும் வெற்றி என்ற நிலையும் , எதிர்பாராத பண வரவும் கிடைக்கும். இப்படி நிறையவே பலன்களை சொல்லிக் கொண்டு போகலாம் , குரு பகவான் இரண்டில் அமரும் காலம் எல்லாமும் நற்பலனாகவே நடக்கும். இக்காலத்தை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால் உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
குருவின் 5ம் பார்வை பலன்கள்
தனது ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஆறாம் இடமாகிய ரோகஸ்தானம் , சத்ரு ஸ்தானத்தின் மீது தனது பார்வையை செலுத்தும் குரு பகவான் உங்கள் உடலில் இருந்த நோய் நொடிகளை அகற்றுவார் , உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நிலையை மேம்படுத்துவார். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாட்டை அகற்றுவார் , விரோதிகளால் இருந்து வந்த தொல்லையை இல்லையெனச் செய்திடுவார். புதிய நண்பர்களின் சேர்க்கையையும் அதனால் அனு உண்டாக்குவார் , கடன் கூலத்தையும் தொல்லைகளை அகற்றுவார்.
குருவின் 7ம் பார்வை பலன்கள்
அடுத்து தனது ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு எட்டாம் இடமாகிய , அஸ்டமஸ்தானம் என்னும் ஆயுள் ஸ்தானத்தின் மீது தனது பார்வையை செலுத்தும் குரு பகவான் முதலில் உங்கள் ஆயுளை பலமடையச் செய்வார் , செய்தொழிலில் இருந்த தேக்கத்தை விலக்குவார். முயற்சிக்கு மேல் முயற்சி மேற்கொண்டும் நடக்காமல் இருந்த வேலைகளை சுலபமாக முடித்து வைப்பார். வேலை பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளுடனும் சக ஊழியர் களுடனும் உருவான மோதல் ஒரு முடிவிற்கு வரும். வர வேண்டிய தொகை கைக்கு வந்து குடும்பத்தில் சந்தோஷத்தை உண்டாக்கும். எல்லோருடனும் சுமூக போக்கு உண்டாகும்.
குருவின் 9ம் பார்வை பலன்கள்
அடுத்து ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு பத்தாம் இடமாகிய ஜீவனஸ்தானத்தின் மீது தனது பார்வையை செலுத்தும் குரு பகவான் , உங்கள் வாழ்க்கைக்கு வழி காட்டியாக இருப்பார். நீங்கள் செய்துவரும் தொழிலில் முன்னேற்றத்தை உண் டாக்குவார். உத்தியோகத்தில் இருந்த குழப்பம் அகலும் , தேவையில்லா இடமாற்றத்தால் மனநிலை உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலை மாறும் . மேலதிகாரிகளும் , முதலாளிகளும் இனி உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பார்கள். இருந்த இடத் திலேயே செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும் . பெற்றோருடனும் சகோதரர்களுடனும் இருந்தகருத்து வேறுபாடு அகன்று பாசத்தில் திளைப்பீர்கள். இதுவரை வீட்டில் இருந்ததை விற்றும் அடகு வைத்தும் வாழ்க்கையை ஒட்டி வந்த நிலை மாறி புதிய நகைகளை வாங்கும் நிலை உண்டாகும். இருப்பிடத்தை உங்கள் வசதிக்கேற்ப அமைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ ஆரம்பிப்பீர்கள்.
பலன் தரும் பரிகாரம்
ஆலங்குடி சென்று குரு பகவானை தரிசித்து வாருங்கள் வாழ்வில் வெற்றி கிட்டும்