ராஜ மாதங்கி அம்மன்
வரலாறு
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில், விநாயகர் சன்னிதிக்கு பின்புறம் , ராஜ மாதங்கி அம்மன் சன்னிதி உள்ளது. மாதங்கி அம்மனை வணங்கிவிட்டு தான் கருவறையில் உள்ள பவானி அம்மனை வணங்கத் செல்ல வேண்டும் என்கிறது வரலாறு.
சிறப்பு :
மாற்றாங்கி என்பது தான் நாளடைவில் மாதங்கி என்றாகி விட்டது. அம்மனின் பல்வேறு ரூபங்களில் , ராஜமாதங்கியின் அம்சம் மிகச்சிறப்பானது. அம்மனின் அருள் நமக்கு ராஜ வாழ்க்கையையும் கலை ஞானத்தையும் பெற்றுத் தரும். இந்த அம்மனை நாம் மனதில் உருகிவழிபட ,செல்வத்திற்கு அதிதேவதையான குபேரரின் கடைக்கண் பார்வையை பெற்றுத்தருவதற்கும்,கல்வி, கலை ,ஞானம்,வீரம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குவதற்கு அருள்புரிவாள் ராஜமாதங்கி.
குபேரரின் கடைக்கண் பார்வையை பெற்றுத் தருவதால் இவ்வம்மனுக்கு ராஜமாதங்கி என்ற சிறப்பு பெயர் வந்தது. அம்மன் ஒரு கரத்தில் வீணையும் , மறுகரத்தில் கிளியுடனும் காட்சி தருபவள் .
பரிகாரம் :
வீணையின் அம்சம் கலைகளில் வெற்றியும் , கிளியின் அம்சம் வாக்கு வன்மையும் குறிக்கும் . வெள்ளிக்கிழமை தோறும். ராஜமாதங்கி அம்மனின் திருவுருவப்படம் வைத்து , ஐந்துமுக தீபம் ஏற்றி. வாழைப்பழம் , வெற்றிலை பாக்கு . தட்சிணையுடன் இனிப்புகளால் நைவேத்யம் செய்து வழிபட்டால் கலைகளில் மேன்மையும் , ராஜபோக வாழ்க்கையும் கிடைக்கும்.
வழித்தடம் :
சென்னை புறநகர் பகுதிகளிலிருந்து பெரியபாளையம் கோவிலுக்கு நேரடியாக பேருந்துகள் செல்கின்றன .