துவாதசாமிசம் சக்கரம் அமைப்பது எப்படி?
ஒரு ராசிக்குறிய 30 பாகையை 12 ஆல் பிரிக்க பாகம் ஒன்றுக்கு 2 1/2 பாகை வரும் .அந்தந்த ராசியிலிருந்தே எண்ணி இதை அமைக்க வேண்டும் .
உதாரண ஜாதகத்தில் சுக்கிரன் 16:34:26ல் உள்ள இதை 21/2 ஆல் வகுக்க (6 பெருக்கல் 21/2÷15க்கு மேல் இருப்பதால் )6 பாகம் தள்ளி 7 வது பாகத்தில் வருகிறது எனவே சுக்கிரன் நின்ற சிம்ம ராசியில் இருந்து எண்ண 7 வது ராசி கும்பம் வரும் .அங்கு துவாதசாமிசகட்டத்தில் சுக்கிரனை போட வேண்டும் .இப்படி எல்லா கிரகங்களுக்கும் எண்ணி அமைக்க கீழ் கண்டவாறு சக்கரம் அமையும் .
உதாரண ஜாதகம்
துவாதசாமிச சக்கரத்தின் பலன்கள் :
இது பெற்றோர்களை பற்றியது .இந்த சக்கரத்தில் தந்தைக்குரிய கிரகம் சூரியன் ஆட்சி .எனவே நல்ல ஆயுளுடன் இருப்பார்.சூரியனுடன் கேது இருப்பது தந்தைக்கு ஒரு இடர்பாடு போராட்டம் இருக்கும் .ராசிக்கட்டத்தின் 9மிட அதிபதியும்இங்கு சனி வீட்டில் நிற்பதால் கடின உழைப்பாளி வர்க்கத்தை சேர்ந்தவராக இருப்பார்.தாயாருக்குரிய வியாழனுடன் மாந்தி இருப்பதால் தாயருக்கு பிரேத தோஷ சாபமுண்டு.