- லக்னத்தில் ஒரு கிரகம் உச்சமானால் பெரியபதவி பெறுவர்.
- 2இல் (குடும்பஸ்தானத்தில்) ஒரு கிரகம் உச்சமானால் பிற சாதியினருடன் திருமணம் உண்டு.
- 3இல் ஒரு கிரகம் உச்சமானால் (லக்னத்திலிருந்து) சகோதரர் பெரும் பதவியில் இருப்பர்,
- லக்னத்தில் இருந்து 4 இல் ஒரு கிரகம் உச்சமானால் வீடு வாகன யோகம் உண்டாகும்.
- லக்னத்துக்கு 5 இல் ஒரு கிரகம் உச்சமானால் புத்திர பேறு உண்டு. ஆனால், சிம்மம், தனுசு, கும்பம்.மிதுனத்தில் எந்தக் கிரகமும் உச்சம், நீச்சம் ஆகாது.
- லக்னத்துக்கு 6 இல் ஒரு கிரகம் உச்சமானால் கடன் பெருகும்.
- 7 இல் கிரகம் உச்சமானால் மணவாழ்வு சரியாக இருக்காது.
- 8 இல் கிரகம் உச்சமானால் விஷ பயமுண்டாகும்.
- லக்னத்துக்கு 9 இல் கிரகம் உச்சமானால் இவரது தந்தை இரண்டாவது மணம் செய்வார்.
- 10 இல் ஒரு கிரகம் உச்சமானால் தொழிலேதுமின்றி சுகமாய் இருப்பர்.
- 11 இல் கிரகம் உச்சமானால் இலாபம் உண்டாகும்.
- 12 இல் உச்சமானால் வேற்று மாநிலம் வாசமும் உண்டாகும்.