குரு சுக்ரன் பரிவர்த்தனை
குரு – சுக்கிரன் குருவின் இல்லங்களில் சுக்கிரனும் சுக்கிரனின் இல்லத்தில் குருவும் இருக்கும் கிரக நிலையான பரிவர்த்தனையானது குழந்தைகள் விஷயத்திலும் அரசு வகை நிர்வாக திறன்களிலும் பொருளாதார விஷயங்களிலும் மிக சிறப்பை தோற்றுவிக்கிறது.
இவர்களின் செயல்திறன் அணுகு முறை தொலில் திறன் மற்றவர்கள் பாராட்டும் நிலையை தோற்றுவிக்கும்.ஆனால் இவர்கள் இல்லற வாழ்வில் குதர்க்க நிலையை காட்டுகிறது.சுக்கிரனின் வினோத செயல்கள் இவர்களை வழிதவறி நடக்க செய்துவிடும் . இவர்களின் பாலுணர்வு பசுந்தோல் போர்த்திய புலியாக காணும்.
இவர்கள் செய்யும் தீய செயல்களை தனது அந்தஸ்து , கௌரவம் என்ற போர்வையில் மறைத்து வெளியுலகிற்கு பக்திமானாகவும் , மகான்களாகவும் தோற்றமளிப்பார்கள்.
இவர்களோடு சேர்ந்து செயல்படும் நண்பர்கள் . இவர்களிடம் ஏமாந்து பேதலித்து நிற்கும் கோலத்தை பார்த்தால் பரிதாபமாக இருக்கும். தர்மம் நியாயம் என்ற கொள்கையில் தவறுகளை செய்வதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள்.
இவர்கள் பல துறைகளில் ஈடுபட்டு தனம் தேடுவார்கள். இவர்களிடம் நாஸ்திகமும் ஆஸ்திகமும் மந்திரமும் தந்திரமும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும். அசுர தன்மையும் அமைதியான நிலையும் கலந்தே காணும் இவர்கள் கீழ் நிலையில் இருந்து மேல்நிலை வரை உள்ளவர்களை நண்பர்களாக கொண்டவர்கள்.
நீதி துறை , பொருளாதார துறை , பணம் பழக்க வழக்கங்கள் உள்ள கொடுக்கல் வாங்கல் போன்ற தொழில் திறன்களும் பெண்களை வைத்து சாமர்த்தியமாக தனது தொழிலில் ஈடுபடுத்தி அவர்களிடம் மூலதனம் தேடி செல்வந்தர் ஆகும் நிலையை ஏற்படுத்துகிறது.
இப்பரிவர்த்தனையானது எந்த ஒரு லக்னத்திற்கும் சிறப்பான பலன்களை சொல்ல வழியில்லை. குருவும் சுக்கிரனும் எதிரிடையான நட்சத்திரங்களில் இருந்தால் மேலே , சொன்ன தவறான பலன்கள் தருவதில்லை.