சனி பகவான் பற்றிய சிறப்பு தகவல்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

சனி பகவான்

சனி பகவான் பரிகார தலங்கள்

காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் கோயில்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஏரிக்குப்பம் எந்திர சனீஸ்வரர் கோயில்

விழுப்புரம் கல்பட்டு யோகசனீஸ்வரர் கோயில்.

மதுரை அருகே உள்ள சோழவந்தானில் சனீஸ்வர பகவான்.

சென்னை பொழிச்சலூரில் உள்ள வட திருநள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரர் கோயில்.

தென்காசி அருகே உள்ள இலத்தூர் கோயில்

இவற்றில் சனிபகவான் ப்ரீத்திக்காக அவரை வழிபடும் பழக்கம் ஏற்பட்டது.

சனி பகவான்

சனி பகவானும் -அனுமானும்

ஸ்ரீ அனுமனுக்கு அவர் விரும்பிய காலத்தில் சனிபகவான் பீடிக்க ஒரு வரம் இருந்தது. ஸ்ரீ அனுமன் ராமர் பாலம் கட்டும்போது கற்களை முதுகில் சுமந்து கொண்டு செல்லும் நேரத்தில் ஸ்ரீ சனி பகவானை தன்னை பிடித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். இந்த சமயத்தில் தங்களை பிடிக்க மாட்டேன் மேலும் உங்களை வழிபடுபவர்களின் குறைகளையும் நான் தீர்த்து வைப்பேன் என்று சனிபகவான் அருளினார். இதனால் சனி ப்ரீதியாக ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடும் வழக்கம் உண்டாகியது. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடவும்.

சனி பகவான் பார்வை

பொதுவாக அனைத்து கிரகங்களும் தான் நின்ற வீட்டிலிருந்து ஏழாம் வீட்டில் பார்வை செய்வார்கள். சனிபகவானுக்கு சிறப்பு பார்வைகளாக தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டையும், தொழில் கர்மாஸ்தானமான பத்தாம் வீட்டையும் கொடுத்திருக்கிறார்கள். அதனால் ஜாதகத்தில் சனிபகவான் வலுப்பெற்று அமர்ந்திருந்தால் அத்தகையோருக்கு தங்கள் முயற்சியில் திடமான சிந்தனையுடன் செயலாற்றும் திறமையும் செய்து தொழிலில் கர்ம சிரத்தையுடன் ஈடுபடும் அமைப்பும் ஏற்படும். சனிபகவானின் பார்வை கொடூரமானது என்று சில கிரகந்தங்களில் கூறியிருந்தாலும் சனிபகவான் பெரும் நன்மையை செய்கிறார் என்பது அனுபவ உண்மை.

சனி பகவான்

அஷ்டமாதிபதி தோஷம்

அனைத்து கிரகங்களும் அஷ்டமம் என்கிற எட்டாம் வீட்டில் அமர்ந்தால் பலம் இழப்பார்கள். இதில் சூரிய சந்திர பகவான்களுக்கு அஷ்டமாதிபத்திய தோஷம் இல்லை என்பது பொதுவிதி. அதே நேரம் சனிபகவான் அஷ்டமஸ்தானத்தில் இருந்தால் மிகவும் சிறப்பு என்றும். அத்தகையோருக்கு தீர்க்க ஆயுள் என்றும் கூறப்பட்டுள்ளது ஏனெனில் சனிபகவான் ஆயுள்காரராகி ஆயுள்கஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் அவரின் மூன்றாம் பார்வை கர்ம ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை தனஸ்தானத்தின் மீதும், பத்தாம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீதும் படிவதால் தீர்க்க ஆயுளோடு பொன், பொருள் செல்வாக்கையும் வழங்கி விடுகிறார்.

மகா கீர்த்தி யோகம்

சனிபகவான் கலத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் அமர்ந்திருப்பது அவருக்கு திக்பலத்தை கொடுக்கும். இங்கு சனிபகவானின் பார்வை லக்னத்தின் மீது பதிவு லக்னம் பலம் பெறுகிறது. இதை மகா கீர்த்தி யோகம் என்பார்கள். இந்த ஏழாம் வீட்டில் சனிபகவான் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்று அமர்ந்திருந்தால் இந்த மகா கீர்த்தி யோகத்தின் பலன் நன்றாக வேலை செய்யும். சனிபகவான் வலுத்தவர்கள் பொறுப்பு மிகுந்த பதவியில் அமர்ந்து கடுமையாக உழைத்து மிகப்பெரிய செல்வம் திரட்டுவார்கள். அதோடு ஏழை எளியவர்களுக்கும் உதவிகள் செய்ய மேலும் உயர்வு உண்டாகும்.

சனி சஞ்சாரம்

மந்தன் (மெதுவாக) சஞ்சரிப்பவர் என்றழைக்கப்படும் சனி பகவான் ஒரு ராசியை கடக்க 30 மாதங்கள் எடுத்துக் கொள்வார் என்று கூறினாலும் சில ராசிகளில் 36 மாதங்களும் சில ராசிகளில் 24 மாதங்களும் சஞ்சரிப்பார் என்பதிலிருந்து கிரகங்கள் எப்பொழுதும் ஒரே வேகத்தில் சுற்றுவதில்லை சில சமயங்களில் வேகமாகவும் சில நேரங்களில் வேகக் குறைவாகவும் சுழலுகின்றன. இதை நாம் சயன பேதம் என்கிறோம் இதை ஆங்கிலத்தில் வேரியேஷன் ஆப் பிளானட்ஸ் இன் மோஷன் என்று கூறுவார்கள். சனிபகவானுக்கு எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் அவர் நமக்கு நன்மைகளை அருள்வார்.

சனி பகவான்

சனி பகவான் யார்?

சனிபகவான் நீதிமான் ஒருவர் முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடி பலாபலன்களை வழங்கக் கூடியவர் ஆவார். குறிப்பாக ஏழரை நாட்டு சனி, அஷ்டம சனி,அர்த்தாஷ்டம சனி ஆகிய காலங்களிலும், தன்னுடைய தசை, புத்தி அந்தரங்களிலும் ஜாதகரின் வாழ்க்கையை தன் கட்டுக்குள் கொண்டு வந்து பலன்களை நடைமுறைப்படுத்துவார். சனிபகவானை தத்துவ பேராசிரியர் என்றும் கூறுவார்கள்.சனி பகவான் ஜாதகத்தில் வலுத்தவர்கள் தீர்க்காயில் யோகம் உடையவர்கள் ஆவார்கள். அதோடு வாழ்க்கை தரமும் உயர்ந்த நிலையில் காணப்படும். சனி பகவான் உழைத்துப் பொருளீட்ட வைப்பார். வெளிநாட்டு விவகாரங்களையும் அறிய வைப்பார்.

சனி பகவான் 3சுற்றுகள்

சனிபகவான் 12 ராசிகளையும் கடக்க சராசரியாக 30 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறார். இதில் முதல் சுற்று மங்கு சனி என்றும், இரண்டாம் சுற்றுக்கு பொங்கு சனி என்றும், மூன்றாம் சுற்று மரண சனி என்றும் பெயரிட்டுள்ளார்கள். இந்த காலங்களை ஏழரை நாட்டு சனி காலம் என்பர். சனிபகவான் ஒருவரின்(சந்திர பகவான் இருக்கும் இடம் ) ராசிக்கு 12-ம் வீட்டிலும், ஜென்ம ராசியிலும், இரண்டாம் வீட்டிலும் சஞ்சரிக்கும் ஏழரை ஆண்டு காலத்தை ஏழரை நாட்டு சனி என்பார்கள். இது ஒருவரின் 30 ஆண்டுகளில் ஒரு தடவை வரும். இவை கருத்தில் கொண்டு 30 ஆண்டுகள் வாழ்ந்தவனும் இல்லை 30 ஆண்டுகள் விழுந்தவனும் இல்லை என்பார்கள்.

கைரேகை ஜோதிடத்தில் சனி பகவான்

சனி மேடு இது நடுவிரலுக்கு கீழாக இருக்கும் பகுதி. இந்த சனி மேட்டுக்கு வலது புறம் குரு மேடும், இடது புறம் சூரிய மேடும் அமைந்திருக்கும். மணிக்கட்டில் இருந்து ஒரு ரேகை உருவாகி அது சனி மேட்டை அடையும் அந்த ரேகை விதி ரேகை என்று அழைக்கப்படுகிறது. சற்று உப்பலான சனி மேட்டை உடையவர்கள் கடமை, திட சிந்தனை, பொறுப்புணர்வு ஆகியவைகள் இயற்கையாகவே பெற்றிருப்பார்கள். இதன் தனித்தன்மை என்ன என்று பார்த்தால் விவேக சிந்தனை. கவனமாக பணியாற்றும் திறன். ஒழுங்கு முறையான நெறி பிறழாத இயல்பும், முற்றிலும் உணர்ந்தறியும் ஆற்றலும், சாதனை திறனும் கொண்டு அனைவருக்கும் நம்பிக்கைகுரியவராக திகழ்வார்.

சனி பகவான் காரகத்துவங்கள்

சனிபகவான் முக்கியமாக ஆயுள்காரகராவார். சனி பகவானின் சுப பலத்துடன் ஆயுள் ஸ்தானமான எட்டாமிடம் அந்த எட்டாம் வீட்டுக்கு எட்டாம் வீடான மூன்றாம் இடம் வலுத்து இருக்க தீர்க்க ஆயுள் உண்டு. தச்சு வேலை. உடல் உழைப்பால் அபிவிருத்தி. மனோதத்துவ சிகிச்சை. கடன் வாங்குதல்/அடைத்தல், அரசு கௌரவம்/பாராட்டு/அபராதம், நடுவர் மன்றத்தில் வாதாடும் திறமை, நடுவர் பதவி போன்றவைகளுக்கும் காரகராகிறார். சனிபகவானுக்கு வாகனம் காக்கை திருநள்ளாறில் தங்க காக்கை வாகனம் உள்ளது. ஆனால் வட இந்தியாவில் வாகனம் கழுகு அங்குள்ளோர் கழுகை வழிபடுகின்றனர்.

குருவும் சனியும்

குரு கொடுப்பின் சனி தடுப்பர்! சனி கொடுப்பின் எவர் தடுப்பர்? என்பது ஜோதிட பழமொழி அனைவருக்கும் குருமகா தசை முடிந்து சனிமகா திசை நடக்கும். இதில் சனி பகவான் யோகக்காரர் ஆகி இருந்தால் பெரியதாக வேலை செய்யாது. அதே நேரம் குருமகா திசையில் அறிவு, ஆற்றல், திறமை, புத்திசாலித்தனம் ஆகியவைகள் கைவரப் பெறுவார்கள். சனிமகா திசையில் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து சுக,சௌரியங்கள், பொருளாதாரம், சமுதாயத்தில் அந்தஸ்து ஆகியவையில் மேன்மையாக கிடைக்கும் என்பது மேற்கூறிய பழமொழியின் பொருளாகும்.

சனி பகவானும் -வாழ்க்கையும்

சனிபகவான் ஜாதகத்தில் சுப பலத்துடன் இருப்பவர்களுக்கு செய்யும் தொழிலில் அது சுத்தம் சம்பந்தப்பட்ட தொழிலோ, அசுத்தம் சம்பந்தப்பட்ட தொழிலோ எதுவாக இருந்தாலும் அதிலிருந்து வருமானம் பெருகும். இவர்கள் வசிக்கும் வீட்டுக்கு மிக அருகில் ஒரு பாழடைந்த வீடோ அல்லது வீடு கட்டிப் பாதையில் தடைபட்டிருக்கும் வீடோ, வற்றி போன குளமும் இருக்கும். அதோடு சனிபகவான் வலுத்தவர்களுக்கு வயதான தோற்றமும், முன் தலை வழுக்கை போன்றவை விரைவில் உண்டாகக்கூடும். மற்றபடி வாழ்க்கை தரம் உயர்ந்தே காணப்படும். மேலும் எதிர்ப்புகளுக்கு இடையே எதிர்நீச்சல் போட்டு காரியத்தை சாதித்துக் கொண்டு விடுவார்கள்.

Leave a Comment

error: Content is protected !!