ஜோதிடமும் -காதலும்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ஜோதிடமும் -காதலும்

எந்தவகை காதலாக இருந்தாலும் ஐந்தாம் அதிபதி ஐந்தில் நின்ற கிரகம் ஐந்தாம் இடத்தைப் பார்த்த கிரகம் ஐந்தாம் அதிபதி உடன் இணைந்த கிரகங்கள் மற்றும் புதன் கேது சம்பந்தமே காதலுக்கு காராக கிரகங்களாகும்.

புதனும் கேதுவும் வைத்த புள்ளியை மூலமாகவும் அலங்கோலமாகவும் செய்வது உடன் இருக்கும் மற்ற கிரகங்களின் கோலாட்டம் எனில் மிகைப்படுத்தல் ஆகாது ஒரு நாளைக்கு 10 ஜாதகம் பார்த்தால் அந்த ஜாதகத்தில் காதல் பிரச்சனை தான் பிரதானமாக இருக்கிறது

12 பாவங்களில் ஏன் ஐந்தாம் பாவத்தை காதலுக்கு ஒப்பிடுகிறார்கள் என ஆய்வு செய்தால் ஐந்தாம் இடம் என்பது உள்ளுணர்வு ஆழ்மனம் மற்றும் பூர்வஜன்ம தொடர்ச்சி பூர்வ ஜென்ம வினையின் தாக்கத்தால் தொடர்ந்து வரும் உணர்வு என்பதால்தான் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு சமுதாய வியாதியாக பரவியிருக்கிறது

ஐந்தாம் இடத்துடன் சம்பந்தம் பெரும் கிரகத்தால் ஏற்படும் காதலைப் பற்றி பார்க்கலாம்

சூரியன் : ஒருவரின் கனவுக்கும் கற்பனைக்கும் காரக கிரகம் சூரியன். அதாவது ஒருவரின் ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளக்கூடிய ஒருவரை சந்தித்தால் காதல் வந்துவிடும். ஆனால் அது கவுரவ காதலாக இருக்கும் எளிதில் தன் மனதில் உள்ள உணர்வை வெளிக்காட்டுவதில்லை

சந்திரன் :மனோகாரகன், உடல் காரகன், மனசஞ்சலம், திருட்டுத்தனம், ஈர்ப்பு ஆகியவற்றுக்கு காரக கிரகம் சந்திரன். மன சஞ்சலத்தால் ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வந்துவிடும். பாலுணர்வு தூண்டுதலால் நடுத்தர வயதினருக்கு ஏற்படும் முறையற்ற காதல், எளிதில் தன் உணர்வை எதிர்பாலினருக்கு தெரிவிப்பார்கள்.

செவ்வாய் : எந்த செயலாக இருந்தாலும் அதை செயல்படுத்த தைரியம் மிக அவசியம் அதன்படி காதலுக்கும் திருமணத்திற்கும் தைரியத்தை வழங்குபவர் செவ்வாய்.

புதன் : காதலுக்கு காரக கிரகம் புதன் ஒருவருக்கொருவர் புரிதலை ஏற்படுத்துபவர் புதன். புதன் இல்லாத காதல் இல்லை நல்ல காதல் தீயே காதல் இரண்டுக்கும் புதனே காரணம். புதன் உடன் இணையும் கிரகத்திற்கு ஏற்ப காதலின் தன்மையில் மாற்றம் இருக்கும்.

குரு : ஒருவரின் ஆச்சாரம், அனுஷ்டானம் பார்த்து வரும் காதல், பிரமிக்கத்தக்க செயல்களை செய்தவர்கள் மீது வரும் பண்பான காதல், எளிதில் வெளியே தெரியாத மதிப்பான காதல்.

சுக்கிரன் : ஒருவரின் ஆடம்பரம், அழகு, அலங்காரத்தால், ஈர்க்கப்பட்டு,வரும் காதல் ,வசதி வாய்ப்பை பார்த்து வரும் காதல், இளம்வயது ஆடம்பர காதலுக்கு சுக்கிரனே காரணம்

சனி :வாலிப வயதுக்குப் பிறகு வரும் காதலுக்கும் காதலால் ஏற்படும் அவமானத்திற்கும் சனியே காரணம்

ராகு :மதம் மாறிய குலம் மாறிய காதல் மற்றும் தவறான உறவுக்கும் சட்டத்துக்குப் புறம்பான செயல்களுக்கும் காரக கிரகம் ராகு

கேது :வலை கிரகம், காதல் வலையை வீசும் கிரகம், சட்ட ரீதியான பதிவு திருமணத்தை நடத்தும் கிரகம்.

ஜோதிடமும் -காதலும்

இனி ஐந்தாம் அதிபதி 12 பாவங்களில் நிற்பதால் ஏற்படும் காதல் உணர்வுகளை காணலாம்.

  • ஐந்தாம் அதிபதி லக்னத்தில் அமரக் காதல் உணர்வு மிக அதிகமாக இருக்கும். திருமணம் ஆனாலும் மீண்டும் மற்றவர்களிடம் காதல் உணர்வு ஏற்படும்.
  • ஐந்தாம் அதிபதி இரண்டில் அமர சம்பாதிக்கும் பொழுது அல்லது சம்பாதிக்க ஆரம்பிக்கும் காலத்தில் காதல் வரும். காதலுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினர் இவருடைய காதலுக்கு உதவுவர். காதல் திருமணத்தில் முடியும். திருமணத்திற்கு பிறகும் நண்பர்கள் எனும் போர்வையில் ஒரு காதல் இருக்கும்.
  • ஐந்தாம் அதிபதி 3ல் இருந்தால் இனகவர்ச்சியாலும், போகதிற்க்காகவும் ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் வரும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன்” சாட்”செய்வார்கள். மூன்றாம் பாவகம் காதலை வளர்க்கும் என்பதால் காதலுக்கான ஆதாரத்தை வைத்து மிரட்டுவது போன்ற சம்பவங்கள் நடக்கும். இந்த அமைப்பு இருக்கும் கௌரவமான குடும்ப பெண்கள் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த இளம் பருவத்தினருக்கு தகவல்தொடர்பு நட்பு ஏற்படுகிறது. இதன் உச்சகட்டமாக தற்கொலையும் செய்து கொள்கிறார்கள்.

கடன் தொல்லை தீர்க்கும் – காரமடை நரசிங்கபெருமாள்

  • ஐந்தாம் அதிபதி 4ஆம் வீட்டில் அமர தாய்வழி சொந்தத்தில் அல்லது தன் வீட்டுக்கு அருகில் பழகும் நண்பர்கள் வட்டாரத்தில் காதல் வரும். ஒருவரின் ஒழுக்கத்தின் மேல் மற்றவருக்கு வரும் சந்தேகம் பிரிவினைக்கு காரணமாக அமைகிறது. சிலர் முன்னாள் காதலியை மறுமணம் செய்து கொள்கிறார்கள்.
  • ஐந்தாம் அதிபதி ஐந்தில் அமர அடுத்தடுத்து காதல் ஏற்படும். இவர்கள் எந்த வயதிலும் காதல் உணர்வுடன் இருப்பார்கள். ஆழ்மன உணர்ச்சியை தூண்டும் சம்பவங்கள் இவர்களின் அடுத்தடுத்த காதலுக்கு காரணமாக அமைகின்றன. தன் ரோல்மாடலாக நினைக்கும் நபர்கள், சமுதாய அந்தஸ்து உள்ள நபர்கள், சினிமா நடிகர்-நடிகைகள் ,விளையாட்டு வீரர்கள் என மிகப்பெரிய காதல் லிஸ்ட் வைத்திருப்பார்கள். அவர்களுடன் மனதால் மானசீகமாக குடும்பம் நடத்துவார்கள். இவ்வளவு ஏன் இவர்கள் கடவுளை கூட காதல் உணர்வுடன் தான் பார்ப்பார்கள்.
  • ஐந்தாம் அதிபதி ஆறில் அமர, காதல் திருமணத்தில் நிறுத்தாமல் வம்பு வழக்குகளில் நிறுத்தும், இவர்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குடும்பத்துடன் பழகி இரண்டு குடும்பத்திற்கும் தீராத பகையை ஏற்படுத்துவார்கள். இந்த அமைப்புள்ள பிள்ளைகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கண்டிப்பது கிடையாது. எதிர்பாலினத்தவருடன் பிரச்சனை செய்வார்கள்.
  • ஐந்தாம் அதிபதி ஏழில் அமர காதல் உரிய அங்கீகாரம் பெறச்செய்து திருமணத்தில் முடியும். பூர்வ ஜென்ம கர்ம பந்தத்தால் தொடர்ந்த காதல்திருமணம் எனவும் கூறலாம். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காதல் திருமணம் நடக்கும். சிலருக்கு குடும்பத்தின் நெருங்கிய உறவுகள் மற்றும் நட்பு வட்டாரத்தில் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்ட திருமணம் நடக்கும். பிறகு காதலர்களாக மாறுவார்கள். எது எப்படி இருந்தாலும் 5மற்றும்7 சம்பந்தம் இருப்பவர்கள் ஆதர்ச தம்பதிகள் வாழ்நாள் முழுவதும் காதலர்களாக வாழ்வார்கள். இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட திருமணம் எனவும் கூறலாம்.
  • 5 மற்றும் 8ஆம் இட சம்பந்தம் இருப்பவர்கள் காதலிப்பது தவறு அவமானம் என கருதுவார்கள். இவர்கள் எளிதில் காதலிக்க மாட்டார்கள்.
  • ஐந்தாம் அதிபதி ஒன்பதில் அமர அந்நிய மொழி மற்றும் அன்னிய மதத்தினருடன் காதல், கலப்பு திருமணம் நடக்கும். உயர்கல்வி கற்க போகும் இடங்களில் காதல் வரும். தன்னைவிட தகுதியானவர்களிடம் காதல் வரும்.
  • 5ம் அதிபதி 10ல் இருப்பவர்களுக்கு வேலைக்கு செல்லும் இடத்தில், தொழில் பார்க்கும் இடத்தில் காதல் வரும். காதலுக்கு கடுமையான எதிர்ப்புகள் வரும். விரோதிகள் இருப்பார்கள். நெருங்கிய உறவினர்கள் கூட பகைவராக மாறுவார்கள்.
  • ஐந்தாம் அதிபதி 11ல் அமர, ஜாதகரின் காதல் திருமணத்தில் முடியும். காதலால் பெரும் மகிழ்ச்சி ஏற்படும். சிறப்பான திருமண வாழ்க்கையாக இருக்கும்.
  • ஐந்தாம் அதிபதி 12ல் இருந்தால் முறைகேடான உறவை மட்டுமே அடைய நினைப்பவர்கள். அசிங்கம், அவமானம், நிம்மதியின்மை நீடிக்கும் இதன் உச்சகட்டமாக தற்கொலை கூட நடக்கும்.

ஜோதிடமும் -காதலும்

பரிகாரம்:

மனவேதனையுடன் ஜோதிடரை அணுகும் பெற்றோரின் விருப்பம் என்ன பரிகாரம் செய்தால் என் பிள்ளையை நான் மீட்க முடியும் என்பதாகவே இருக்கிறது. ஜோதிட ரீதியாக இந்த கேள்விக்கு தீர்வு தர முடியும்

காதலுக்கு காரக கிரகம் புதன், காதலுக்கான தைரியத்தை தந்தாலும் காதல் பிரிவினையை தரக்கூடிய கிரகங்கள் செவ்வாய் மற்றும் ராகு கோட்சார-புதன் ஜனன கால செவ்வாய் மற்றும் ராகுவுடன் சம்பந்தம் பெரும் காலங்களில் பிள்ளைகளுடன் முறையற்ற நட்பில் இருப்பவர்களுடன் பேசும்போது நல்ல தீர்வு கிடைத்து பிரச்சனைக்கு முடிவு வருகிறது

ஜாதகமும் -உறவு முறைகளும்

  • கோட்சாரத்தில் லக்னாதிபதி 12ல் மறையும் போது அல்லது கோட்சாரத்தில் 6, 8,12ஆம் அதிபதிகள் லக்னாதிபதிமேல் சஞ்சரிக்கும் பொழுது எடுக்கும் முயற்சிகள் பாதிக்கப்பட்டவர்களின் மனதில் தெளிவை ஏற்படுத்துகிறது.
  • தவறான பிரச்சினைக்காக தகாத வார்த்தைகளால் பிள்ளையை திட்டக்கூடாது, அடிக்கக்கூடாது, சபிக்கக்கூடாது, அன்பால் திருத்த முயல வேண்டும்.
  • புதன்கிழமை மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரையிலான ராகு கால வேளையில் வெள்ளை பசுவுக்கு பசும் புல்லை உண்ண தர வேண்டும்
  • இரவில் உறங்கும் போது தலைமாட்டில் ஒரு செம்பு நிறைய நீரை நிரப்பி வைக்கவும் காலையில் அதை நீரை செடிக்கு ஊற்றவும்.
  • தவறான உறவுகளால் வரும் பிரச்சனைகள் தீர கருட பகவானை வழிபடலாம்.

Leave a Comment

error: Content is protected !!