திவ்ய தேசம் -தஞ்சை மாமணிக் கோவில்
தஞ்சாவூர் பல வகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது என்பது வரலாறு காட்டும் உண்மை. 108 திருப்பதிகளில் நரசிம்மருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கோயில்களில் தஞ்சை மாமணிக் கோவிலும் அதனருகே வீற்றிருக்கும் தஞ்சையாளிக் கோயிலுக்கும் பங்கு உண்டு.
தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திலும் , திருவாரூர்க்கு மேற்கே 58 கிலோமீட்டர் தூரத்திலும் வெண்ணாற்றங்கரையில் அமைந்திருக்கிறது. மாமணிக் கோயில் , மணிக்குன்றம் தஞ்சையாளிக் கோயில் ஆகிய மூன்று கோவில்களிலும் ” பெருமாள் ” எழுந்தருளி இருக்கிறார் . இவை பக்கத்து பக்கத்துக் கோயில்களாகவே இருக்கின்றன .
மணிக் கோயிலில் மூலவர் ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.
தாயார் செங்கமல வல்லி.
தீர்த்தம் கன்னிகா புஷ்கரணி , அம்ருத தீர்த்தம்.வெண்ணாறு
மணிக்குன்றம் கோயிலில் மூலவர் மணிக்குன்றப் பெருமாள்.
தாயார் அம்புஜவல்லி.
தீர்த்தம் ஸ்ரீராம தீர்த்தம் வெண்ணாறு .
விமானம் மணிக்கூட விமானம் ,
மூன்றாவது கோயில் தஞ்சையாழி மொட்டைக் கோபுரம் மூலவர் ஸ்ரீவீர நரசிம்மப் பெருமாள்.
தாயார் தஞ்சைநாயகி ,
தீர்த்தம் சூரிய புஸ்கரணி வெண்ணாறு .
விமானம் வேத சுந்தர விமானம்.
புஷ்கரணி மாமணிக் கோயிலின் மூல வரலாறு சரியாகத் தெரியவில்லை. மார்க்கண்டேய முனிவருக்கு எம்பெருமாள் தரிசனம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.அதேபோல் நீண்ட காலம் தவம் புரிந்த பராசர முனிவருக்கு பகவான் பிரத்திட்சயமாகியிருக்கிறார். இரண்டாவது கோயிலான மணிக்குன்றத்தில் மார்க்கண்டேயர் பெருமானுடைய வேண்டுதலின் பொருட்டு பலமுறை நேரிடையாகத் தரிசனம் கொடுத்ததாக வரலாறு.
மூன்றாவது கோயில் தஞ்சையாளிகர் கோயிலுக்கு ஒரு சிறப்பு வரலாறு உண்டு . பகவான் தஞ்சக யானையைப் பிளக்க நரசிம்ம அவதாரம் எடுத்து நகங்களால் குத்திக் கிழித்த போது தஞ்சகன் வேண்டிக் கொண்டபடி நரசிம்ம உருவத்தோடு சேவை சாதித்தார். அதேபோல் தஞ்சகன் பெயரால் ஊரும் பெயர் மாறிற்று.தஞ்சகன் நகர்தான் பின்னர் தஞ்சாவூராக மருவியது. இந்தக் கோயிலின் விக்ரகங்கள் தஞ்சையைப் பார்த்தபடி அமைந்திருப்பதால் தஞ்சையைக் காத்தருளும் தெய்வம் என்று வழங்கப்படுகிறது.
திருமங்கை ஆழ்வார் , பூதத்தாழ்வார் இந்தக் கோயில்களைப் பற்றி பாடியிருக்கிறார்கள்.
பரிகாரம்
‘ ஏவல் – பில்லி , சூன்யம் – பேய் பிசாசு போன்ற துர் தேவதைகளால் பாதிக்கப்பட்டவர்களும் எதையோ கண்டு பயந்து என்ன சிகிச்சை செய்தும் பலனின்றி பித்துப் பிடித்து தன்னிலை மறந்தவர்களும் நரம்பு தளர்ச்சி மூளை வளர்ச்சி குன்றியவர்களும் இந்தக் கோயிலுக்கு வந்து செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்தால் அத்தனைக் கொடிய நோயிலிருந்தும் தப்பி விடலாம்.
விதியை மாற்றி எழுதும் வலிமை மனிதர்களுக்கு இல்லை . ஆனால் பிரார்த்தனை மூலம் இந்தக் கோயில் பெருமாளின் அனுக்கிரகத்தோடு விதியை நல்லபடியாக மாற்றி எழுத முடியும் . இது இன்றைக்கு நேற்றைக்கல்ல , காலம் காலமாக நடந்து வரும் உண்மை.எனவே உங்கள் கஷ்டங்கள் முற்றிலும் விடிய இங்கு சென்று வந்தால் போதும்.
Google Map