சூரியன் சந்திரன் பரிவர்த்தனை பலன்கள்
சூரியன் இல்லத்தில் சந்திரனும் சந்திரன் இல்லத்தில் சூரியனும் இருந்தால் அந்த ஜாதகருக்கு விசேஷமான பலன்களை தருகிறது.அரசுவகை தொடர்புகளின் மூலம் தொழில் தொடர்புகள் ஏற்படுகிறது.தெய்வ பலம் ,பூர்வீக சொத்து தொடர்புகள் ,வம்சா வழி நன்றாக இருக்கிறது.இப்பலன்கள் பொதுவானது.
மேஷம் ,கடகம் ,விருச்சிகம் போன்ற லக்கினங்களுக்கு இப்பரிவர்த்தனை யோகமானது சிறப்பான பலனை தருகிறது.இதில் உத்திரம் ,புனர்பூசம்,சந்திரன் அமர்ந்து பரிவர்த்தனை ஏற்பட்டால் சிறப்பான பலன்களை உறுதியாக தருகிறது.
இதில் மேஷ லக்கினத்திற்கு ,கடக லக்கினத்திற்கு,விருச்சிக லக்கினத்திற்கு பரிவர்த்தனை ஏற்பட்டு லக்னமோ,மற்ற கிரகங்களின் நிலையோ குபேர அம்சத்தில் அமர்ந்தால் பெரும் ராஜ யோகத்தை தரும்..