Homeராசிபலன்ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2024ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-துலாம்

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-துலாம்

அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!!

இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது.

சுக்கிரனை ஆட்சி வீடாகக் கொண்ட  துலாம் ராசி அன்பர்களே !!! உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. ஆகவே அதிரடி மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் இனி சந்தோஷ காற்றை சுதந்திரமாக சுவாசிக்கலாம். வாரிசுகளுடைய வளர்ச்சி உங்களுக்கு பெருமை சேர்க்கும். பணவரவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்க யோகம் வரும். கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிற மொழி பேசுபவரிடம் இடைவெளி விட்டு பழகுங்கள். தினமும் சிறிது நேரமாவது குல தெய்வத்தை கும்பிடுங்கள். சற்றென்று உணர்ச்சிவசப்படுவதையும், வேண்டாத பிடிவாதத்தையும் தவிர்த்தாலே வீட்டில் விடியல் வெளிச்சம் நிறைய ஆரம்பிக்கும்.

பெண்களுக்கு திடீர் யோகத்தால் பெரும் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆடை, ஆபரணம், பொருள் சேரும். மனதுக்கு பிடித்த வகையில் மாங்கல்ய பாக்கியமும், மகிழ்ச்சி தரும் வகையில் மழலை பாக்கியமும் கிடைக்கும். வீணான தர்க்கமும் வேண்டாத வாதமும் வாழ்க்கை துணையுடன் வேண்டாம். எதையும் உறவுகளுடன் மனம் விட்டு பேசுங்கள், உங்கள் வாழ்க்கை உன்னதமாகும்.

சலிக்காமல் உழைத்தால் சங்கடங்கள் விலகி ஓடக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும். அலுவலகத்தில் பிறரால் மறைக்கப்பட்டிருந்த உங்கள் திறமை இந்த காலகட்டத்தில் நிச்சயம் வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு செல்வாக்கு அதிகரிக்கும். இடமாற்றம், பதவி உயர்வுகள் விருப்பம் போல கைகூடும். சிலருக்கு வெளியூர் செல்ல வேண்டிய அவசியம் வரலாம், தவிர்க்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.

 30.04.2024 வரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் குரு நிற்பதால் வரவேண்டிய பணம் கைக்கு வரும். கல்வியாளர்கள் ,அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்களை பேசி தீர்ப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சிறு பிரச்சனைகளை பெரிதாக பொருட்படுத்த மாட்டீர்கள்.

01.05.2024 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் எட்டாம் வீட்டில் மறைவதால் கணவன்- மனைவிக்குள் வீண் சந்தேகம் வரும். திடீர் செலவுகள் வந்து போகும். வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகளை பெரிதாக்க வேண்டாம். திடீர் பயணங்களும், அலைச்சல்களும் வந்து போகும். சித்தர் பீடங்களுக்கு மறவாமல் செல்லுங்கள். குலதெய்வ கோயிலை புதுப்பிப்பீர்கள்.

ஆண்டு தொடக்க முதல் முடியும் வரை ராசிக்கு 6-ம் வீட்டில் ராகு அமர்வதால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். தாம்பத்தியம் இனிக்கும். தடைபட்ட கல்யாணம் நல்ல விதத்தில் முடியும்.வராது என்று இருந்த பணம் கைக்கு வரும்.

கேது உங்கள் ராசியை விட்டு விலகுவதால், நோய் விலகும். பதற்றம் தணியும். எந்த காரியமானாலும் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.

இந்த ஆண்டு முழுக்க சனி பகவான் 5ம் வீட்டில் தொடர்வதால், பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள். அவர்களிடம் அதீத கண்டிப்பு வேண்டாம். அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிக்கவும். உயர் கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை பிரிவார்கள். சனிபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படும்.

பலன் தரும் பரிகாரம்

மேல்மலையனூர் சென்று அங்காளபரமேஸ்வரி அம்மனை தரிசித்துவிட்டு வரவும். 

மொத்த பலன் : வெற்றி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!