முதல் பாவத்தின் முக்கிய விதிகள்-பகுதி-1

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

முதல் பாவத்தின் முக்கிய விதிகள்

  1. 1 க்குரியவர் , கேந்திர , திரிகோணங்களில் இருந்து , இன்னொரு கேந்திர திரிகோணாதிபதியோடு சேர்ந்து இருந்து , சுப ஆதிபத்தியம் , பெற்ற கிரகத்தால் பார்க்கப்பட்டால் , அந்த ஜாதகர் செல்வம் , செல்வாக்கில் குறையின்றி சர்வ சுகங்களையும் அனுபவிப்பார்.( மேற்படி கிரகங்கள் எந்த வகையிலும் கெடாமல் இருக்க வேண்டும் )
  2. 1 – ல் புதன் , சனி , சேர்க்கை , பாவர் பார்வை – அழுக்கடைந்த விகாரமான சரீரம் உள்ளவன் , கெட்ட காரியத்தில் நாட்டம் உண்டு.வித்தை , தனம் , வாகனம் , சுகங்கள் குறைவுபடும்.
  3. 1 – க்குரியவர் சுக்கிரன் , 4 – க்குரியவர் லக்கினத்திலிருந்தால் நல்ல யோகத்தை தருகிறது பொருள்
  4. 1 – ல் சூரி , குரு , புத , செவ் , சுக் , சேர்க்கை தார தோஷம் உள்ளவன் . பெண்களால் தொல்லைகள் உண்டு விருத்தி உண்டு.
  5. லக்கினம் , அல்லது 1- க்குரியவரை , சனி , சந் , செ இவர்கள் ஏக காலத்தில் பார்த்தால் , உடலில் ஊனம் ஏற்படும் . இவரோடு புதன் , சனி , 3 , 6 க்குரியவராகி 1- க்குடைய வருடன் சேர்ந்து 3 , 6 , 8 , 12 – ல் இருந்தாலும் மேற்படி பலன்.
  6. 1 – க்குரியவர் 3 , 6 , 8 – ல் 5 க்குரியவர் , 12-ல் சந்திரனோடு சேர்ந்து இருந்தாலும் , 3 – ல் லக்கினாதிபதி , சுக்கிரன் , புதன் . சேர்ந்து சனியால் பார்க்கப்பட்டு இருந்தாலும் உடல் எச்சுகத்தையும் அனுபவிக்காத நிலை ஏற்படும்.
  7. 1 – ல் 3,6 – க்குரியவர் , கேது சேர்க்கை பெற்று 5 , 10 க்குரியவரால் பார்க்கப்பட்டால் 3,6 – க்குரியவரின் திசையில் அனேக சொத்தை விரையம் செய்வார் . நோய்த்தொல்லை . கடன் பகையும் வரும்.
  8. 1- ல் பாக்கிய விரையாதிபதி இருந்து , மாந்தி சேர்க்கை பெற்று 1 – க்குரியவர் , 3 , 6 , 8 , 12 – லிருப்பின் வீட்டிற்கு அடங்காமை , தாய் , தந்தை சொல் கேளாமை , திருட்டு குணம் உடையவன் . அரச தண்டனைகள் பெறுவான்.
  9. 1 – ல் , 5,4 க்குரியவர் சேர்க்கை , 11 – ல் 2 க்குரியவர் இருந்தால் பெரும் செல்வந்தர் குடும்பத்தில் ஜெனனம் ஏற்பட்டு பலவகை சுகங்களை அனுபவிப்பார்.
  10. 1 – ல் 5,7 க்குரியவர் சேர்க்கை , 2 க்குரியவர் , 2 – லோ , 2 மிடத்தை பார்ப்பதோ மிகுந்த சிறப்பைத் தரும் . மனைவிவகை செல்வம் , அதிகாரம் கிட்டும்.
முதல் பாவத்தின் முக்கிய விதிகள்
முதல் பாவத்தின் முக்கிய விதிகள்
  1. 1 – ல் ‘ பாபர் 1 க்குரியவர் மாந்தியுடன் சேர்ந்து 6 க்குரியவரின் தொடர்பை பெற்றால் , உடல் பலம் . குன்றியவன் அடிக்கடி நோய்த் தொல்லை கானும் . ஆயுள் பலம் குறைந்தவன்.
  2. 1 – க்குரியவர் நீச்சம் பெற்று , 1 – ல் பாவர் இருந்து , 6 க்குரியவரின் தொடர்பு பெற்றால் , இளைத்த தேகம் . கடின நோய்த் தொல்லை , கல்வியில் தடை.
  3. 1 – க்குரியவர் 6 – ல் பாவர் சாரம் பெற்று , 1-க்குரியவர் திசை நடந்தால் , படு திண்டாட்டத்தை தந்து விடும்.
  4. 1 – ல் பாவர் இருந்து , 1 – க்குரியவர் ,குரு 12- ல் அமர , 2 க்குரியவர் பாதகம் பெற , படிக்காதவன் ஊர் சுற்றித் திரிபவன் , திருடிப் பிழைக்கும் குணம் உள்ளவன்.
  5. 3 – க்குரியவர் இரட்டை ராசியிலிருந்து , புதன் சேர்க்கை பெற்று , சந்திர ராசிநாதன் இரட்டை ராசியிலிருக்க ராகு , கேது , சேர்க்கை பார்வை பெற்றால் இரட்டை ஜெனனம் ஏற்படும்.
  6. 1 – க்குரியவர் பாதகம் பெற்று , பாவருடன் சேர அவரை பாவர் பார்க்க பிறந்தவன் , துர்க்குணம் , கெட்ட நடத்தை . தாய் தந்தை பேச்சை கேட்காமை . ஊதாரி யான செலவுகளை செய்பவன்.
  7. 1 – ல் , 2 – க்குரியவர் கேது சேர்க்கை பெற்று , குருவால் பார்க்கப்பட்டால் மனக்கட்டுப்பாடு அதிகம் உண்டு . நல்லவாக்குள்ளவன் ஆன்மீக வாழ்க்கையில் விருப்பம் உள்ளவன்.
  8. 1 – ல் , 4 , 5 க்குரியவர் இருந்து ,9 – க்குரியவர் நல்ல நிலையில் பலம் பெற்றால் , பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறப்பான் . அல்லது நல்ல கெளரவமான குடும்பத்தில் பிறப்பான் தெய்வ பக்தி உண்டு.4 – க்குரியவர் தசா புத்தி காலம் நல்ல யோகத்தை தரும்
  9. உடல் , உயிராதிபதி பலம் பெற்று சுயசாரம் அல்லது சுபர் சாரம் பெற்று இருப்பின் தெய்வ பக்தி , பொறுமையுடன் தொல்லைகளை சமாளித்தல் , எந்த நிலையிலும் , போராடி காரியத்தை சாதித்துக் கொள்வார்.தீயபழக்கம் இருக்காது.

Leave a Comment

error: Content is protected !!