ராகு , கேது 5 , 9 – ல் அமர்ந்து , 2 , 7 – ம் வீட்டதிபர்களுடன் சேர்க்கை , பார்வை , அல்லது அவர்களின் நட்சத்திரத்தைப் பெற்று இருப்பின் , அத்திசா புத்திக்காலம் நல்ல யோகத்தைத் தரும்.
ராகு தங்கிய இடத்திலிருந்து 5 , 9 – ல் சனி , குரு இருப்பின் சண்டாளத் தனமான காரியங்களைச் செய்யும் சுபாவத்தை பெறுவான். துர்தேவதைகளை வைத்து கெட்ட வேலைகளைச் செய்வார்.தவறான வழியில் பணம் திரட்டுவான்.
ராகு நின்ற இடத்திலிருந்து 5 , 9 – ல் லக்கினத்திற்கு10 – ம் வீட்டதிபதி தங்கினால் , தனவான் ஆவான்.இதே பத்தாம் அதிபதி 5 , 9 – ல் நீச்சம் பெற்று இருந்தால் , பாப காரியங்களைச் செய்பவன் என விளம்பரம் ஆகும்.
ராகு நின்ற இடத்திலிருந்து 5 , 9 – ல் லக்னாதிபதியும் 9 ம் இடத்தின் அதிபதியும் சேர்ந்து பலமுடன் இருப்பின் சன்னியாசி யோகம் கிட்டும்.இல்லறத்தில் இருப்பினும் இல்லறத் துறவியாவான். லெளகீக வாழ்க்கை இனிக்காது, ருசிக்காது.ஆத்மீகம் தேன் போல் இனிக்கும் . இது பூர்வ பராசர்யத்தின் மூலம் எடுத்தது.அனுபவத்திற்கு சரியாக உள்ளது.
ராகு , சந்திரன் சேர்க்கையானது , லக்கின முதல் 6 ராசிக்குள் இருக்கக்கூடாது . அப்படி இருப்பின் ஜாதகரின் தாய் தந்தை வம்சத்தை பாதிக்கும்.எக்காரியமும் பலமுடன் அமையாது. தாய்க்கு ரோகத்தை தந்து விடும்.ஜாதகரின் உடல் நிலையும் அடிக்கடி பாதிக்கும் ( 12 வயது வரையிலும் இது பாதிக்கும்)
கேது , சனி , சூரியன் சேர்க்கையானது எங்கு இருப்பினும் ஜாதகரின் 9 வயது வரைக்கும் தந்தை , தந்தையின் வர்க்கத்தாரை பாதிக்கும். ஆயுள் தோஷத்தை தரலாம். மேற்படி திசா புத்திகள் வரும் காலமெல்லாம் தந்தை இல்லையேல் , ஜாதகர் இல்லையேல் அவர் குடும்பம் போன்றவைகளை படாத பாடு படுத்தும்.
ராகு சந்திரன் சேர்க்கை பெற்று இவர்களுக்கு 4 – ல் சனி , செவ்வாய் , இவர்களுக்கு 7 – ல் சுக்கிரன் – புதன் , 8 – ல் சூரியன் , குரு சேர்ந்து இருப்பின் ஜாதகர் 9 வயது கடப்பது மிகவும் துர்லபம் , கடந்து விட்டால் யோகத்தை தரும்.
லக்கினாதிபதியோடு , சந்திரன் நின்ற ராசிநாதன் சேர்க்கை பெற்று 7 – ல் சுக்கிரன் ; 12 – ல் ராகு , குரு இருப்பின் , பல விதமான சொத்துக்களை சேர்க்கும் வாய்ப்பு உண்டாம். வஞ்சம் , சூழ்ச்சி தகாத செயல் புரிந்தாவது பணக்காரன் ஆவார்.
லக்னத்தில் லக்னாதிபதியும் சுக்கிரனும் இருந்து , சந்திரன் நின்ற வீட்டதிபதி 7 – ல் ; 10 – ல் ராகு – குரு இருப்பின் , ஜாதகர் சிறு வயது முதலே யோகத்தை அடைவர். பால்ய வயது 13 கடந்த பின்னே பல சொத்துக்கள் இவரை நாடி வரும் வாய்ப்பு உண்டு . தர்மம் , புண்ணியம் இணைந்த தம்பதிகளுக்கே இப்புண்ணிய புத்திரர் பிறப்பர்.
தனித்த ராகு , கேதுக்கள் தான் நின்ற இடத்தின் பலனைத் தருவர் . ராகு – கேதுக்கு 3 , 7 , 11 – ம் பார்வை உண்டு . இவற்றில் ராகு , கேதுவின் 3 , 11 – ம் பார்வைக்குள் மற்ற எல்லாச் கிரகங்களும் , லக்கினமும் அமையுமானால் , அது ஒரு தெய்வ பிறவி இந்த மாதிரி ஜாதகம் காண்பது மிக மிக அரிது.
மகரம் , கும்பம் , கடகம் , சிம்மம் இந்த நான்கு வீட்டிற்குள் ராகு , கேதுக்கள் அமைந்தால் விசேஷ குணம் உண்டு . ராகு – கேதுக்களின் பார்வையிலேயே ஒரு தனி முக்கியத்துவம் வாய்ந்தது . கேந்திர – கோணங்களில் நின்ற ராகு -கேதுக்கள் தனித்து இருந்தாலும் , கிரக சேர்க்கையுடன் நின்றாலும் விசேஷமாக மெருகு பெறுகின்றன.
தனிச் சிறப்புடையது கால சர்ப்ப யோகம் இதில் கும்பம் முதல் சிம்மம் வரை மேல் பாகத்தில் ராகுகேதுக்கள் எல்லா கிரகமும் , லக்கினமும் அமையுமானால் , தனி விசேஷம் பொருந்தியதாகும். இதே போல் கீழ் பாகத்திலும் இருப்பின் விசேஷமே .
இரண்டு பகை கிரகங்கள் ஒரு வீட்டில் நிற்க அத்துடன் ராகு சேர்ந்தால் நல்ல பலனையும் , கேது சேர்ந்தால் கெட்ட பலனையும் தரும்.நட்பு கிரகங்கள் சேரும்போது மாறுபட்ட பலன்களை தரும் . இவ்வாறு சேரும் போது ராகு , கேதுக் களின் பலம் சற்று குறையும்.வாழ்வில் எதிர் நீச்சலை உண்டாக்குவதே இந்த ராகு – கேதுக்கள்தான்.
ராகு – கேதுக்களுடன் சனி சேர்ந்தால் , பார்த்தால் சொத்து தகராறு நரம்பு சம்பந்தமான வியாதி , பாம்பினால் கண்டம் ஏற்படலாம்.
ராகு , கேதுக்கள் செவ்வாயுடன் சேர்ந்தால் , செவ்வாய் பார்வை பெற்றால் , சகோதர பகை , எதிர்பாராத கண்டம் , உடலில் தொடர்ந்து உபாதையும் , கடவுள் பக்தியும் ஏற்படும்.
சுக்கிரன் பார்வை , சேர்க்கை பெற்றால் ஆவி உலகத் தொடர்பு , பேய் , பிசாசு தொடர்பு மர்ம ஸ்தான நோய் , வாகன கண்டம் , கொலை , காமம் , கற்பழித்தல் , சூதாடல் மறைமுக சூழ்ச்சிகள் , துப்பு துலக்குதல் , போன்ற பலன்.
சூரியனின் பார்வை சேர்க்கை இருப்பின் தந்தை நலிவு – ஆண்மைக் குறைவு – ஆன்ம பல குறைவு.
சந்திரன் பார்வை சேர்க்கை பெற்றால் நீங்காத மனத்துயரம் முகத்தில் வியாதி , தாய்க்கு கண்டம்.
புதன் சேர்க்கை , பார்வை இருப்பின் குழப்பமான நிலை – பிரமை பிடித்து செயல்படுதல் – சித்த பிரமை காண வாய்ப்பு உண்டு.
குரு சேர்க்கை , பார்வை இருப்பின் புத்தி தடுமாற்றம் , புத்திரர் சேதம் , குறை பிரசவம் முதலியன ஏற்படும்.
சிம்மம் , ரிசபம் , கடகம் , கன்னி , ராசிகளில் , ராகு இருந்தால் யோக பலன்கள் உண்டு.
மேசம் – ரிசபம் , கடகம் ராகு இருப்பின் எல்லா பீடைகளும் விலகும் . (கால விதானம் )
மகர ராசியில் ராகு , கடக ராசியில் கேது இருப்பது , பெரும்பாக்கியமாகும் . வாழ்நாளில் எவ்வனவு கஷ்ட , நஷ்டங்கள் அனுபவித்த போதும் பெருத்த தனவான் ஆவது உறுதி.
ராகு , கேது நின்ற வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற வேண்டும் ராகு , கேதுவிற்கு கேந்திர திரிகோணம் பெற்று இருப்பது ஏதோ ஒரு துறையில் சிறப்பு பெற்று , அரசராக , மந்திரியாக , பெரும் தனவானாக , பெரும் புகழ் கொண்டவராக இருப்பர்.
மிதுன ராகு , புனர்பூசத்தில் இருந்தால் பெரும் யோகத்தை தந்து உள்ளது . இது அனுபவத்தில் கண்ட உண்மை.
தனுசு-கேது , கும்ப கேது , சிம்ம ராகுவும் பெரும் யோகத்தை தந்துள்ளது , இதுவும் அனுபவத்தில் சரியாக உள்ளது .
குருவுடன் கேது சேர்ந்து நிற்க , இவர்களுக்கு பத்தா மிடத்தில் சுக்கிரன் நிற்க , சனி ஐந்து அல்லது ஆறாமிடத்தில் இருந்தால் பெருத்த ராஜயோகத்தையும் பெரிய பதவி களையும் தரும்.
ராகு ஸ்தானத்திற்கு 5மிடத்தில் சனியும், ராகு நின்ற ஸ்தானாதிபதியும் , வளர்பிறைச் சந்திரனும் , சுக்கிரனுக்கு பத்தாமிடத்தில் இருந்தால் பெருத்த ராஜயோகத்தையும், பெரிய பதவிகளையும் தரும்.
ராகுவும் , குருவும் சேர்ந்து கேந்திரஸ்தானத்தில் இருக்க , அவர்கள் இருந்த ஸ்தானாதிபதி கேந்திரத்தில் இருந்தாலும் , குருவும் , இராசி நாதனும் கேந்திரத்திலிருந்தாலும் அந்த ஜாதகர் பாக்கிய யோகத்தை அனுபவிப்பார்.
குருவுடன் ராகு சேர அல்லது 1 , 4,7,10 – எனும் கேந்திரங்களில் இருக்க அவர்களுக்கு இரு புறமும் இருந்த கிரகங்கள் கேந்திரம் பெற்று இருப்பினும் அல்லது , குரு ஜெனன லக்கினாதிபதி இவர்கள் கேந்திரம் பெற்றிருந்தாலும் , அந்த ஜாதகருக்கு நல்ல பாக்கிய யோகம் அமையும்.
ராகுவுடன் ஒரு கிரகம் சேர்ந்து நிற்க , அவர்களுக்கு இரண்டு பக்கத்திலும் மற்ற கிரகங்கள் இருந்தால் மகாராஜ யோகம் , பலரும் புகழ் , பாராட்டும்படியான மேன்மையான யோகத்தை அனுபவிப்பான்.
குருவுடன் , ராகு சேர்ந்திருக்கும் ஸ்தானத்திற்கும் 4 , 7 , 8 – ம் இடங்களில் 2-மிடத்ததிபதி உச்சமாயிருந்தால் , பெரிய ராஜயோகத்துடன் உரிய பதவிகளும் கிடைக்கும்.
ராகு நின்ற ஸ்தானத்திற்கு ஐந்தாமிடத்தில் 5 கிரகங்கள் சேர்ந்திருந்தால் , மகா சாமர்த்தியத்துடன் ராஜ யோகத்தையும் , பெரிய பதவியையும் அடைவான்.
சனியும் , செவ்வாயும் சேர்ந்து சந்திரனுக்கு 7 – மிடத்தில் நிற்கவும் , சூரியனும் , ராகுவும் இவர்களுக்கு நாலாமிடத்திலிருக்க ; குருவும் சுக்கிரனும் , சந்திரனுக்கு 6 , 8 – மிடங்களிலிருந்தால் , இந்த ஜாதகனுக்கு எந்தக் காலத்திலும் யோகம் இல்லை.
ராகு நின்ற ஸ்தானத்திற்கு லாபஸ்தானத்தில் குரு நிற்க ; சுக்கிரனுக்கும் ராகுவுக்கு 3 – ல் நிற்க , ராகுவுக்கும் 7 ல் புதன் நிற்க . இப்படி அமைந்த ஜாதகருக்கு சகல செல் வமும் போய்விடும்.
சந்திரன் நின்ற ராசிக்கு இருபுறமும் பாபக்கிரகங்கள் இருந்தாலும் , ராகுவுக்கு 8 – மிடத்திற்கு இருபுறமும் பாபக் கிரகங்கள் இருந்தாலும் , எவ்வளவு இராஜயோக ஜாதகரானாலும் பாக்கியத்தை அனுபவிக்க முடியாதபடி கண்டம் ஏற்படும் .