Homeஜோதிட தொடர்சூரிய தசா புத்தி பரிகாரங்கள்

சூரிய தசா புத்தி பரிகாரங்கள்

சூரிய தசா

உங்களில் பெரும்பாலானோர் உங்கள் ஜாதகத்தை படித்திருப்பீர்கள் சில சமயங்களில் ஜோதிடர் உங்களுக்கு நல்ல தசா ஆரம்பித்து விட்டது இனி யோக நேரம்தான் என்பார். சில சமயங்களில் கவனமாக இருங்கள் மோசமான தசா ஆரம்பித்துள்ளது என்பார். கூடவே அதற்குரிய பரிகாரங்களையும் கூறுவார்.

சில பரிகாரங்களை குறிப்பிட்ட கோவிலுக்கு செய்யவேண்டி வரும். சில பரிகாரங்களுக்கு குறிப்பிட்ட மனிதர்களிடம் சென்று யாகம் ,பூஜை செய்ய வேண்டி வரும் சில சமயம் தானதர்மங்கள் செய்யும்படி அமையும்.

இனி சூரிய தசா புத்திக்கு ஏற்ற மிக எளிய பரிகாரங்களை காணலாம்.

சூரிய திசை

சூரிய திசையின் கால அளவு 6 ஆண்டுகள். இந்த திசை ஆரம்பித்தவுடன் தினமும் சூரிய வழிபாடு, ஆதித்யஹ்ருதயம் பிரயாணம் சிறப்பு ஞாயிற்றுக்கிழமைகளில் பரிகாரம் செய்ய வேண்டும்.

சூரிய திசை- சூரிய புத்தி(3மாதம் 6நாள்) 

ஞாயிற்றுக்கிழமை அன்று முடிந்த அளவு கோதுமை அல்லது கோதுமை மாவை காலை 6மணி முதல் 7 மணிக்குள் வயதானவருக்கு கொடுக்கவும்.

சூரிய திசை- சந்திரபுத்தி(6மாதம்)

ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் 10 மணிக்குள் வயதான பெண்ணுக்கு அரிசி தானம் கொடுக்கவும்.

சூரிய தசை -செவ்வாய் புத்தி(4 மாதம் 6 நாள்)

ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணி முதல் 1மணிக்குள் சிறிய பையனுக்கு மயிலிறகு வாங்கி கொடுங்கள்.

சூரிய திசை- குரு புத்தி (10மாதம்24 நாள்)

ஞாயிற்றுக்கிழமை ராகு நேரத்தில் மாலை 4.30மணிக்கு மேல் 6.00மணிக்குள்  பிற மதத்தினருக்கு மெழுகுவர்த்தி கொடுங்கள்.

சூரிய திசை-சூரிய புத்தி ( 9 மாதம் 18 நாள்)

ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் 12 மணிக்குள் பசுவுக்கு ஏதாவது கொடுங்கள்.

சூரிய தசை-சனி புத்தி (11மாதம் 12 நாள்)

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல்11 மணிக்குள் உங்கள் வீட்டில் வேலை செய்பவருக்கு கொஞ்சம் மிளகு கொடுங்கள்.

சூரிய தசை-சனி புத்தி (10 மாதம் 6 நாள்)

காலை 8 மணி முதல் 9 மணிக்குள் சிறுகுழந்தைகளுக்கு பச்சைப்பயிறு சுண்டல் செய்து கொடுங்கள்.

சூரிய திசை கேது புத்தி (4 மாதம் 6 நாள்)

உங்களுக்கு முடிந்த நேரத்தில் அல்லது மாலைப்பொழுதில் ஆட்டிற்கு தீவனம் கொடுக்கவும்.

சூரியதிசை-சுக்கிரபுத்தி(1வருடம்)

ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் 8 மணிக்குள் இளம்பெண்ணுக்கு கொஞ்சம் சந்தனம் கொடுக்கவும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular