குரோதி வருட பலன்கள் 2024-மகரம்
சனிபகவானின் அருள் பெற்ற மகர ராசி அன்பர்களே!! வரும் குரோதி வருடத்தில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் தடைகள் தவிடு பொடியாக கூடிய காலகட்டம்.பணியிடத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். உடன் இருப்பார் ஆதரவு மகிழ்ச்சி தரும். சிலருக்கு முதன் முறையாக வெளிநாட்டு பயணம் செல்லும் வாய்ப்பு வரும். அப்படி செல்லும் சமயத்தில் உரிய நடைமுறை சட்டங்களை கவனமாக கடைபிடியுங்கள். மேல் அதிகாரியிடம் பேசும் போது வீண் ரோஷம் தவிருங்கள். பெருமைகள் வரும் சமயத்தில் வீண் களியாட்டம் தவிருங்கள். நல்லவை தொடரும்.
வீட்டில் நிம்மதி நிலவும். தம்பதியர் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குலதெய்வத்தை முறையாக வழிபட்டால் சுபகாரிய தடைகள் நீங்கும். பூமி, வாகனம் வாங்கும் சமயத்தில் பத்திரங்களை முழுமையாக ஆராயாமல் ஏற்றுக்கொள்ள வேண்டாம். பிற மொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. வாரிசுகளால் வாழ்க்கையில் வசந்தம் வரும். பண வரவு அதிகரித்தாலும், செலவுகளும் சேர்ந்து வரும். அதை அசையும் அசையா சொத்தாக சேமிப்பது தான் புத்திசாலித்தனம் செய்யும்.
தொழிலில் முதலீடுகள் கூட திடீரென்று முடுக்கி விடப்பட்டு லாபம் தரத் தொடங்கும். ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் செழிக்கும். இந்த சமயத்தில் சிலரோட சூழ்ச்சி உங்களை சட்டவிரோத சிக்கலை சந்திக்க வைக்கலாம், உரிய வரிகளை முறையாக செலுத்தி விடுவதும், அரசு வழி அனுமதிகளை தவறாமல் பெறுவதும் பிரச்சனை வலையில் நீங்கள் சிக்காமல் இருக்க உதவும்.
குரோதி வருட குரு பார்வை
அரசு, அரசியல் சார்ந்தவர்கள் புதிய பாதையில் புத்துணர்வோடு நடக்க சந்தர்ப்பம் தேடிவரும். மேல் இடத்தை கேலி செய்யும் வார்த்தைகளை விளையாட்டாக சொன்னாலும் விபரீதம் விளைந்து விடும். பேச்சில் கவனமாக இருங்கள் தேவையில்லாத சமயங்களில் அமைதியே நல்லது. உணர்ந்து அடக்கமாக இருங்கள். பதவி வரும்போது பணிவும் வந்து விட்டால் பல்லாண்டு நிலைக்கும்.
கலை படைப்பு துறையினருக்கு வாய்ப்புகள் வரும். அவை புறம் பேசும் சிலரோட சூழ்ச்சியால் தடைபடவும் வாய்ப்பு உண்டு, கவனமாக இருங்கள். தொலைதூர பயணத்தில் புதிய நட்புகளிடம் நெருக்கம் தவிருங்கள். உடல் நலத்தில் அக்கறை உள்ளவர்கள் தேவையற்ற டென்ஷனை தவிருங்கள். கழுத்து, தோள்பட்டை, மூட்டு, முதுகு, தண்டுவடம், மன அழுத்த உபாதைகள் வரலாம்.
பரிகாரம்
இந்த வருடம் முழுக்க விநாயகரை வணங்குங்கள் உங்கள் வாழ்க்கை வசந்தமாக இருக்கும்.