திருப்பாவை பாடல் 7 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

திருப்பாவை

திருப்பாவை பாடல் 7

பறவைகளின் கீசு,கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ?

பைரவி ராகம, மிச்ரசாபு தாளம்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற – ஏலோர் எம்பாவாய்.

திருப்பாவை

எளிய தமிழ் விளக்கம்:

கீசு கீசு என எங்கும் வலியன் பறவைகள் ஒன்று கூடி கூவிய கூச்சல் ஒலி கேட்கவில்லையா? பேதைப் பெண்ணே! காசுமாலையும், குண்டுமாலையும் கலகலவென்று ஒலிக்க வாசனையுடைய கூந்தலை உடைய இடைப்பெண்கள் கைகளை அசைத்து மத்தினால் கடையும் தயிரின் ஓசை கேட்க வில்லையோ! பெண்கள் தலைவியே! நாராயணனான கண்ணனை நாங்கள் பாட கேட்டுக்கொண்டே படுத்துக் கிடக்கிறாயோ? பிரகாசமானவளே! கதவைத் திறப்பாயாக.

எளிய ஆங்கில விளக்கம்:

Thiruppavai – 7- Raga: Bhairavi, Misra Chapu

Devilish Girl! do you not hear
the grey-birds(seven-sisters) screeching in chorus ?
Do you not hear the butter pail of fragrant-haired
milkmaids, their bangles and charms jingling merrily as they churn ?
O noble born girl, do you still lie in bed listening
while we stand and sing in praise of Narayana, Kesava ?
Bright girl! Open the door quickly.

Leave a Comment

error: Content is protected !!