Homeஆன்மிக தகவல்திருப்பாவைதிருப்பாவை பாடல் 25 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 25 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 25

உன்னைப் பிரிந்து யான்படும் துயர் நீக்குவாய்!

பெஹாக் ராகம், ஆதி தாளம்

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான்ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்; பறை தருதியாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து – ஏலோர் எம்பாவாய்.

திருப்பாவை பாடல் 25

எளிய தமிழ் விளக்கம்:

தேவகிக்கு மகனாகப் பிறந்து அதே இரவில் யசோதைக்கு மகனாக ஒளிந்து வளர்ந்துவர, அதைப் பொறுக்காது உன்னைக் கொல்ல நினைத்த கம்ஸனின் வயிற்றில் நெருப்பாக நின்றாய்! எங்கள் குறை தீர்க்கும்படி உன்னைப் பிரார்த்தித்து வந்தோம்; விரும்பியதைத் தருவாயானால் லக்ஷ்மி தேவி விரும்பும் உன் குணச்செல்வத்தையும் உன் வீரத்தையும் பாடி வருத்தம் நீங்கி மகிழ்வோம்.

எளிய ஆங்கில விளக்கம்:

Thiruppavai – 25 – Raga: Behag, Adi

O lord who took birth in anonymity as Devaki’s child and
Overnight grew up incognito as Yasoda’s Child
You who upset the despot king kamsa’s plans and
kindled fire in his bowels.
We have come beseeching, grant us our desire
We will rejoice singing in praise of your prosperity
that befits your spouse; your prowess.
that we may end our sorrow and rejoice.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!