Homeநட்சத்திர ரகசியங்கள்நட்சத்திர ரகசியங்கள்: சித்திரை நட்சத்திரம்

நட்சத்திர ரகசியங்கள்: சித்திரை நட்சத்திரம்

சித்திரை நட்சத்திரம்

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினான்காவது இடத்தைப் பெறுவது சித்திரை நட்சத்திரமாகும். இதன் அதிபதி செவ்வாய் பகவானாவார். இந்த நட்சத்திரத்தின் 1, 2 ஆம் பாதங்கள் கன்னி ராசிக்கும், 3,4-ஆம் பாதங்கள் துலா ராசிக்கும் உரியதாகும். 

இது ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் 1, 2-ஆம் பாதங்கள் தொந்தி, அடிவயிறு போன்றவற்றையும், 3, 4-ஆம் பாதங்கள் சிறுநீரகம், பிறப்புறுப்பு, அடிவயிறு போன்றவற்றையும் ஆளுமை செய்கின்றன. 

இந்த நட்சத்திரத்தில் பிறந் தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் பே, போ, ர, ரி போன்றவை. தொடர் எழுத் துக்கள் பை, பெள போன்றவையாகும்.

குண அமைப்பு:

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட் சத்திராதிபதி செவ்வாய் பகவான் என்பதால் முன் கோபம் அதிகமிருக்கும். அழகிய உடல்வாகும், நீல விழியும், கட்டான உடலமைப்பும், சிறந்த ஒழுக்கமும் அமைந்திருக்கும். பலவகை கலையம்சம் கொண்ட ஆடை அணிகலன்களை விரும்பி அணிபவர்களாக இருப்பார்கள். 

பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருப்பார்கள். தெய்வ பக்தியும், ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் பிறருக்கு கொடுத்து உதவக்கூடிய தாராள குணமும் இருக்கும். சொன்ன சொல்லை தன் தலையை வைத்தாவது காப்பாற்றுவார்கள். நல்ல அறிவுக் கூர்மையும், நடைமுறையைப் பற்றி பேசு பவர்களாகவும் இருப்பார்கள். வாசனைப் பொருட்களை விரும்பி உபயோகிப்பார்கள்.

 சித்திரை நட்சத்திரம்

குடும்பம்:

தெரிந்தோ தெரியாமலோ சில நட்சத்திரங்களைப் பற்றி தவறான பழ மொழிகள் வழங்கி வருகின்றன. “சித்திரைக்கு அப்பன் தெருவிலே’ என்ற பழமொழியும் இதில் ஒன்று. ஆனால் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறப்பான குடும்பமும் தந்தை, தாய்க்கு குறையில்லா வாழ்க்கையும் அமையும். 

மனைவியின் மேல் அதிக பிரியம் உடையவராகவும் மனைவியின் பேச்சைக் கேட்பவராகவும் இருப்பார்கள். பரம்பரை கெளரவத்தை எளிதில் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். 

நந்தி வாக்யம் என்ற நூல் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களைப் பற்றி கூறுகையில் பாதி வாழ்க்கை சுக போகமாகவும் மீதி வாழ்க்கை துறவறத்திலும் கழியும் என்று கூறுகிறது. 

அதிகம் பேசுபவராக இருந்தாலும் அதில் அர்த்தம் நிறைய இருக்கும். 23 வயது வரை கொஞ்சம் கஷ்டமும் சிறு சிறு விபத்துக்களும், பொருள் அழிவும். கெட்ட நண்பர்களின் சகவாசமும் இருக்கும் என்றா லும், அதன்பிறகு வாழ்வில் ராஜயோகமும், செல்வம், செல்வாக்கும் உயர்வடைந்து அனைவரும் அண்ணாந்து பார்க்கும் உயரத்திற்கு வந்துவிடுவார்கள். மணவாழ்க்கை சற்று தாமதமாகவே அமையும்.

தொழில் :

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த துறையை சார்ந்திருந்தாலும் அதில் சாதனைகள் பல செய்யக்கூடிய வல்லமை பெற்றிருப்பார்கள். எதிலும் முதலிடத்தைப் பிடித்துவிடுவார்கள். 

பல பட்டப்படிப்புகள் படித்திருந்தாலும் பார்க்கும் வேலைக்கும் படிப்பிற்கும் சம்பந்தம் இருக்காது. எல்லாரிடத்திலும் கனிவாகப் பேசி வேலைவாங்குவார்கள். பலரை வைத்து நிர்வகிக்கக்கூடிய நிர்வாகத்திறன் இருக்கும். மற்றவர்களை அடக்கி ஆளும் திறன் கொண்டவர்கள். நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ் மனதில் இருந்து கொண்டேயிருப்பதால் சம்பாதிக்க வேண்டும் என்ற கவலையும் நிறையவே இருக்கும். 

தொழில்மீது அதிக பற்று உள்ளவர்களாக இருப்பதால் தங்களுடைய தூக்கத்தைக்கூட தூக்கியெறிந்துவிட்டு பணிபுரிவார்கள். மக்களால் போற்றிப் புகழக்கூடிய அளவிற்கு வாழ்வில் உயர்வடைவார்கள்.

நோய்கள்:

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தோல் வியாதியும், சிறுநீரக பாதிப்பும், கர்ப்பப்பை, சிறுநீர் குழாய்கள் போன்றவற்றில் பாதிப்பும் உண் டாகும். உடல் நீர்சத்து குறைவு, ஹார்ட் அட்டாக், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அப்பன்டிக்ஸ் போன்றவற்றால் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை, ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்புகள் போன்றவை உண்டாகும்.

தசைப் பலன்கள்:

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக வரும் செவ்வாய் தசை மொத்தம் வருட காலம் 7 என்றாலும், பிறந்த நேரத்தைக் கொண்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்.

இரண்டாவதாக வரும் ராகு தசை மொத்தம் 18 வருட காலங்களாகும். இந்த காலங்களில் ராகு நின்ற வீட்டதிபதி ஆட்சி, உச்சம்பெற்று சுபர் பார்வை யுடனிருந்தால் மட்டுமே இளமைக்கால வாழ்வில் கல்வியில் முன்னேற்றமும், சுகவாழ்வும் கிட்டும். ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் கல்வியில் ஈடு பாடு இருக்காது. பெற்றோர். பெரியோர், மற்றும் ஆசி ரியர்களிடம் அவப்பெயரை எடுக்க நேரிடும். தேவை யற்ற நண்பர்களின் சேர்க்கையும் அதனால் வம்பு வழக்குகளும் ஏற்படும்.

மூன்றாவதாக வரும் குரு தசைக்காலங்கள் 16 வருடம் நடைபெறும். இந்த காலங்களில் கடந்த கால பிரச்சினைகள் விலகி முன்னேற்றமான நிலை, முரட்டு சுபாவம் மறைந்து அனைவரிடமும் அன்பாகப் பழகும் பண்பு உண்டாகும். சுகவாழ்வும் கிட்டும்.

நான்காவதாக வரும் தசை சனி தசையாகும். இது 19 வருட காலங்கள் நடைபெறும். சனி தசை மாராக தசை என்றாலும் சனி பலம்பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் பலவகையில் மேன்மைகளும் சமுதா யத்தில் உயர்வும் உண்டாகும். உடனிருப்பவர்களால் உயர்வுகள் கிட்டும். சமுதாயத்தில் பெயர், புகழ் உயர் வடையும்.

ஸ்தல விருட்சம்:

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஸ்தல விருட்சம் வில்வ மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்க ளில் வழிபாடு செய்தால் நற்பலனை அடைய முடியும். இந்த நட்சத்திரம் மீனின் கண்போல பளிச் சென்று இருக்கும் ஏப்ரல் மாதத்தில் இரவு சுமார் ஒரு மணிக்கு உச்சிக்கு நேராக விண்ணில் காண முடி யும்

செய்யவேண்டிய நல்ல காரியங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் திருமணம். பூ முடித்தல், குழந்தைக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெயர் வைத்தல், புதுமனை புகுதல், அன்னதானம் செய்தல் கல்வி. ஜோதிடம், மருத்துவம், சங்கீதம் கற் றல், வாகனங்கள் வாங்குவது நாட்டிய அரங்கேற்றம் போன்றவற்றை தொடங்கலாம். புத்தகம் வெளியிடுதல், குளம், கிணறு வெட்டுதல், தானியத்தை களஞ்சியத்தில் சேர்த்தல் போன்றவற்றை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

அண்ணன் கோவில்:

நாகை, சீர்காழிக்கு தென்கிழக்கே 8 கி.மீ தொலைவிலுள்ள திருமால் கோவில்.

நன்னிலம்:

மயிலாடுதுறை, திருவாரூர் இடையேயுள்ள செஞ் சடைநாதர்- பெரிய நாயகி திருக்கோவில்.

நாச்சியார்கோவில்:

9 கி.மீ கும்பகோணத்துக்கு தென்கிழக்கே தொலைவிலுள்ள ஸ்ரீநிவாச பெருமாள் தாயாரை மணம் புரிந்த காட்சியிலுள்ள கோவில்.

திருநெடுங்களம்:

திருவெறும்பூருக்கு கிழக்கே 10.கி.மீ தொலைவி லுள்ள நித்ய சுந்தரர் ஒப்பிலாநாயகி திருக்கோவில்

திருக்கோயிலூர்:

பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்த வீரட்டேசுவரர்- சிவானந்த வல் திருக்கோவில்

திருநாராயணபுரம்:

கரூர்- முசிறிக்கு மேற்கில் 15.கி.மீ தொலைவில் காளமேகப் பெருமாள் பூதேவி- ஸ்ரீதேவி சந்நிதி.

திருக்கண்டியூர்:

சிரக்கண்டீசுவரர் மங்களநாயகி திருக்கோவில்.

கூறவேண்டிய மந்திரம்

ஓம் நமோ பகவதே, மஹா ஸுதர்சனாய தீப்த்ரே

ஜ்வாலா பரீதாய ஸர்வ திக்ஷோபணகராய ஹும் பட் ப்ரஹ்மனே பரஞ்ஜ்யோதிஷே நம!

சித்திரை நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்

அவிட்டம், மிருகசீரிஷம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்யக்கூடாது.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular