Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:துலாம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:துலாம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:துலாம்

கார்த்திகை மாதம் 19ம் தேதி (05.12.2026)சனிக்கிழமை இரவு 10.33 மணிக்கு சூரிய உதயாதி 40.14 நாழிகை அளவில் திருக்கணிதப்படி ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும்,கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

image 5

4-ல் ராகு

4-மிட ராகுவால் உடல் ஆரோக்கியம் கெடும். மருத்துவ செலவுகள் வரும். தாயாருக்கு கண்டங்கள் வரும். வீடு ,வாகன ரிப்பேர் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் தொல்லைகள் உண்டாகும். சொத்து வாங்க, விற்க வில்லங்கம் ஏற்படும். சொத்து வழியில் கவனம் தேவை. தொழில் வழி தொல்லை அல்லது விரும்பத்தகாத இடமாற்றம், தொழில் மாற்றம் ஏற்படும். அலைச்சல் அதிகம் இருக்கும் காலம் இது.

10-ல் கேது

வேலையில் புதிய மாற்றம் உண்டாகும். அரசியல் ஈடுபாடு கூடும் அல்லது அரசியல்வாதிகள் மூலம் அனுகூலம் கிடைக்கும். அவர்கள் மூலம் சில காரியங்களை சாதித்துக் கொள்ளலாம். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். இவைகளை சிரமப்பட்டு தடைகளை கடந்து தான் சந்திக்க வேண்டும். பழைய பொருளை விற்க நேரிட்டு புதிய பொருளை வாங்க நேரிடும்.

பலன் தரும் பரிகாரம் : ஒருமுறை திருப்பாம்புரம் சென்று ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்து வரவும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular