Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:கும்பம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:கும்பம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:கும்பம்

கார்த்திகை மாதம் 19ம் தேதி (05.12.2026)சனிக்கிழமை இரவு 10.33 மணிக்கு சூரிய உதயாதி 40.14 நாழிகை அளவில் திருக்கணிதப்படி ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும்,கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026

12-ல் ராகு

விரயம் ஏற்படும். பண பற்றாக்குறை இருக்கும். வீட்டை விட்டோ, ஊரை விட்டோ, நாட்டை விட்டோ வெளியேறும் சூழல் உருவாகும். வம்பு, வழக்குகளும் அதன் வழி செலவுகளும் ஏற்படும். அலைச்சல், திரிச்சல் அதிகம் ஏற்படும். நிம்மதியான தூக்கம், நிம்மதியான சாப்பாடு நிம்மதியான சந்தோஷம் இருக்காது. கெட்ட கெட்ட கனவுகள் ஏற்பட்டு தொல்லை தரும். தந்தைக்கு கண்டாதி தோஷங்கள் ஏற்படும். தந்தை வழி உறவு பாதிக்கப்படும்.

6-ல் கேது

எடுத்த காரியங்களில் வெற்றி தரும். எதிர்புகள் குறையும். மன தைரியம் கூடிவரும். பாட்டன் வழியில் இருந்து நன்மைகளை அடையலாம். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கூடிவரும்.

பலன் தரும் பரிகாரம்:திருவாமாத்தூர் (விழுப்புரம்) வட்டப்பாறை அம்மனை தரிசித்து வர நன்மைகள் பல கிட்டும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular