Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:மகரம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:மகரம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:மகரம்

கார்த்திகை மாதம் 19ம் தேதி (05.12.2026)சனிக்கிழமை இரவு 10.33 மணிக்கு சூரிய உதயாதி 40.14 நாழிகை அளவில் திருக்கணிதப்படி ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும்,கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026

ஜென்ம ராகு (1-ல் ராகு )

ஜென்மத்தில் இருக்கும் ராகு உங்களுக்கு பல கெடுபலன்ங்களை தரவே செய்யும். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், சில சங்கடங்கள் ஏற்படும். உடல் நலம் பாதித்தல், அலைச்சல், திரிச்சல் மனதில் ஒருவித குழப்பம், மன நிம்மதியின்மை, கவுரவம், புகழ், அந்தஸ்தில் குறைவு ஏற்படலாம். மனதில் இனம் புரியாத ஒரு பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். எதிலும் ஒரு சந்தேகம் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

7-ல் கேது

கேது 7-ல் இருப்பதால் கணவன் மனைவி உறவில் வேறுபாடோ, விரிசலோ தோன்றும். சில சமயம் வெளிநாடு சென்று கஷ்டப்பட வைக்கும். கூட்டுத் தொழிலில் பிரிவினை தலை காட்டவே செய்யும். உங்களால் மற்றவர்களுக்கு தான் ஆதாயம் ஏற்படும். அதிகமான வேலை பளு இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது. காரிய தடையும், பண விரயமும் ஏற்படும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular