அடிப்படை ஜோதிடம் -பகுதி -38-11ம் வீட்டு கிரக பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

11ம் வீட்டு கிரக பலன்கள் (11th House In Astrology)

11ம் வீட்டு கிரக பலன்கள் : பதினோராம் அதிபதி(11th House In Astrology) 11ஆம் இடத்திலேயே அல்லது திரிகோணத்தில் அல்லது லக்னத்திலிருந்து இருக்க வேண்டும் அங்கே பலவிதமான நன்மைகள் உண்டாகும் இதுபோல் பதினோராம் அதிபதி உச்சம் பெற்றாலும் அஸ்தங்கம் அடைந்தால் அதிகமான பலன்கள் உண்டு

  • பதினோராம் அதிபதி(11th House In Astrology) 2ஆம் வீட்டிலும் இரண்டாம் அதிபதி லக்னத்திற்கு கேந்திரங்களிலும் குருடனும் இருந்தால் அதிகப்படியான நன்மைகள் உண்டாகும்
  • பதினோராம் அதிபதி மூன்றாம் வீட்டில் 11இல் சுபர்கள் இடம் பெற்றிருந்தால் ஜாதகர் தன்னுடைய 36 வயதில் அதிக செல்வம் கிடைக்க பெறுவர்
  • பதினோராம் அதிபதி(11th House In Astrology) சுபர் களுடன் சேர்ந்து திரிகோணங்களில் இருந்தாலும் லக்னத்தில் இருந்தாலும் அந்த ஜாதகர் தன்னுடைய நாற்பதாவது வயதில் மிகுந்த செல்வம் கிடைக்க பெறுவார்
  • பதினோராம் இடத்தில் குரு இருந்துகொண்டு 2, 9-ல் முறையே சந்திரன் சுக்கிரன் இருப்பின் ஜாதகர் சொந்தமாக நகைகள் வைத்திருப்பார்
அடிப்படை ஜோதிடம் -பகுதி -38-11ம் வீட்டு கிரக பலன்கள்

 

  • குரு புதன் மற்றும் சந்திரன் பதினோராம் இடத்திற்கு அதிபதியாகவும், பதினோராம் இடத்தில் இருந்தாலும் அந்த ஜாதகர் செல்வம், தானியம், அதிர்ஷ்டம், வைரம், ஆபரணங்கள் கிடைக்கப் பெறுவர்
  • ஒருவர் தங்க நகைகளை 33 வயதில் வாங்குவார் எனில் பதினோராம் அதிபதி லக்னத்திலும் லக்னாதிபதி பதினோராம் வீட்டிலும் இருக்க வேண்டும்
  • பதினோராம் அதிபதி 2ஆம் வீட்டிலும் இரண்டாம் அதிபதி பதினொன்றாம் வீட்டில் இருக்கப் பிறந்தவர் அபிரிமிதமான அதிர்ஷ்டத்தை கல்யாணத்திற்கு பிறகு பெறுவார்
  • பதினோராம் அதிபதி(11th House In Astrology) மூன்றாவது வீட்டில் உம் மூன்றாவது அதிபதி 11-ம் இடத்திலும் இருக்க ஒருவர் செல்வத்தை தன்னுடைய கூடப் பிறந்தவர்களின் மூலமாக பெறுவதோடு தலைசிறந்த ஆபரணங்களும் பெறுவார்
  • பதினோராம் அதிபதி பலமிழந்து அஸ்தங்கம் பெற்றோ 6 8 12ல் அசுபர்களுடன் இருந்தால் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டாலும்  ஒன்றும் கிடைக்கப் பெறாது.
 
அடிப்படை ஜோதிடம் -பகுதி 1-E BOOK-தமிழில்  

Leave a Comment

error: Content is protected !!