செவ்வாய் பகவானும்-திருமணமும்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

செவ்வாய் பகவானும்-திருமணமும்

லக்கினத்திற்கு 7-ல் செவ்வாய்

  • 7 – ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு.ஆட்சி , உச்சம் அல்லது சுபக்கிரகத்தால் பார்க்கப்பட்டோ அல்லது சூரியன் , சனி , ராகு , கேது சேர்க்கை ( அ ) பார்வை யைப் பெற்றோ இருந்திடில் தோஷம் கிடையாது.
  • தோஷம் உள்ள ஆணையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்தால் குற்றமில்லை.
  • மனைவியின் உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்படும்.
  • சொத்து சம்பந்தமான விவகாரத்தை ஏற்படுத்தும்.
  • குடியிருப்பு இடத்தை அடிக்கடி மாற்ற நேரிடும்.
  • அநேக சகோதரர்களைப் பெற்றவர்.
  • விவாகத் தடை உண்டு.பரிகாரங்கள் செய்தால் விரைவில் திருமணம் நடக்கும்.
  • தானே தன் ஆண் குறியைக் கெடுத்துக் கொள்வான்.
  • தாய்வழி சொத்து கிடைக்க வாய்ப்புண்டு.
  • பெண்களால் துக்கம் அடைவர். சண்டைப் பிரியர். இரு மனைவிகள் ஏற்பட வாய்ப்புண்டு.
  • குருவுடன் கூடிடில் பெண்களால் லாபம் . போக சேஷ்டைகளும் – வேறு மதத்தில் திருமணமும் உண்டாகும்.
  • சனி கூடிடில் பண நஷ்டம்.மேலும் மனம் போன போக்கில் நடந்து கொள்வதால் சில விபரீதங்களை சமாளிக்க நேரும்.மனைவியுடன் அடிக்கடி தகராறுகள் தோன்றும்.
  • சூதாட்டத்தில் பணம் இழப்பர்.
செவ்வாய் பகவானும்-திருமணமும்
செவ்வாய் பகவானும் -திருமணமும்
  • மேலும் , தகாத காரியங்களைச் செய்தல் , கெட்ட சரீரம் உடையவராதல் , விதவைகளை மணத்தல் அல்லது விதவை களுடன் உறவு கொள்ளல்.
  • சதாசம்போகியாக இருத்தலும் உண்டு. முறை தவறிய உறவும் உண்டாகும்.
  • தாய்ப்பால் இல்லாத மனைவி அமைவாள்.
  • மனைவி வரும் திக்கு – தெற்கு – பழைய வர்க்கம் ( சொந்தம் ) சிலருக்கு ஸ்தானாதிபதியைப் பொறுத்து மாறி அமையும்.
  • மனைவியின் நிறம் – சிவப்பு சரீரம்.
  • மனைவியின் குணம்– நல்லவளுக்கு நல்லவள் , அவளே கெட்டவருக்கு கெட்டவள்.
  • மனைவி இருக்கும் தூரம் – சுமார் 25 மைல் சுற்றளவுக்குள்.
  • கணவன் அல்லது மனைவி தொழில்-விவசாயம் , இரும்பு , மின் சாதனங்கள் , அரசாங்க உத்தியோகம் , மற்றவர்களை அதட்டி உருட்டி மிரட்டும் தொழில் , நெருப்பு அல்லது உணவு சம்பந்தப் பட்ட தொழில்.

Leave a Comment

error: Content is protected !!