மூன்றாம் பாவம்
கால புருஷ”இலக்கினப்படி 3ஆம் பாவம் என்பது மிதுனம் ஆகும். 3ஆம் பாவத்தைக் கொண்டுப் பல விஷயங்களைக் கூறலாம். இந்த இராசியில் உள்ள நட்சத்திரங்கள் அதிபதிகளைத் தெரிந்து கொண்டால் போதும்.
மிதுனம் இராசியில் மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரங்களின் அதிபதிகள் முறையே செவ்வாய், இராகு, குரு ஆகும்.
செவ்வாய்
செவ்வாய் என்பது சகோதரம், தைர்யம், வீரம், ஆண்மை, ஆயுதம், ஆணவம், அகம்பாவம், ஆளடிமை, விபத்து. இராணுவம், போலீஸ், ஆயுதம், அறுவை சிகிச்சை. பூமியிலிருந்து தனியாக உடைந்து சென்ற கிரகம் செவ்வாய் என்பதால் கடினமான கூர்மையான பாறைகளால் ஆனது.
நம் உடலில் கடின உறுப்பு பற்கள். அந்த பற்களைக் குறிப்பது செவ்வாய். பற்கள் விழும் பருவத்தில் உடல் வலிமையும் குறைகிறது. இவ்விஷயங்களைப் பற்றி கூறுவது 3ஆம் பாவம்.
இராகு
அசுரனின் வெட்டப்பட்டத் தலை தன் உடலை தேடி அலைகிறது. அதாவது உடல் சுகத்தை தேடி அலைவதால் “போககாரகன்” என்றும் பெயர். பாம்பு எப்படி சொந்த வீடில்லாமல் சஞ்சாரம் செய்கிறதோ? அதுபோல்… இடமாற்றம், வெளியூர் பயணம், இவற்றை குறிப்பது விண்வெளி பயணம் மின்சாதனம். தபால் தந்தி, தொலைபேசி, செல்போன், இன்டர்நெட் போன்ற தொலை தொடர்புச் சாதனங்களைக் குறிப்பது இராகுவாகும்.
சட்டை உரிக்கும் ஜீவன் என்பதால் நமது ஆடைகளைக் குறிப்பது இராகு. கெளரவத்தைக் குறிப்பது ஆடையல்லவா? இவ்விஷயங்களைக் குறிப்பதே 3ஆம்பாவம்.
குரு
ஒழுக்கம். வெற்றி, அந்தஸ்து, அதிர்ஷ்டம். எழுத்தாற்றல், தங்கம், ஆபரணங்கள், அணிகலன்கள், காது தொண்டை, மூக்கு போன்றவைகளைக் குறிப்பது. செவ்வாய், இராகு, குரு இவர்களுடைய காரகத்துவப் பலன்களே 3ஆம் பாவமாக மிளிர்கிறது.
3ஆம் வீட்டை ஏன் போகஸ்தானம் என்று கூறுகிறோம்? 3ஆம் வீடான மிதுனத்திற்கு 5.12ம் மாதி சுக்கிரன் என்பதால் 3 மாதி புதனும் நட்பு கிரகம். சுக், சூரி – மிதுனத்திற்கு 3,5,12 நட்புக் கிரகமாகிறது.
12ஆம் வீடு அயன சயன எனப்படும் படுக்கை ஸ்தானம் ஆகும். ‘படுக்கை’ என்பது மனிதனுக்கு நான்கு விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுகிறது.
1. சுகம்.
2. சுகவீனம்,
3. தூக்கம்,
4. துக்கம் (சாவு).
கால புருஷ இலக்கினமான மேஷத்திற்கு 3ஆம் வீடு மிதுனம். இது மனைவி ஸ்தானமான துலாமிற்கு பாக்கிய ஸ்தானம். துலாமிற்கு 3ஆம் வீடு தனுசு. இது ஜாதகர்க்குப் பாக்கிய ஸ்தானம். அதாவது கணவன் மனைவிக்கு போகஸ்தானம் 3ஆம் இடம் கெடாமல் நன்றாக அமைந்தால் தான் இருவருக்குமே மகிழ்ச்சி தரும்.
ஜாதகரின் போகஸ்தானத்தின் அதிபதி புதன் என்பவர் இளவரசன். இளமைகாரகன். அதனால் தான் ஆண்களின் போகத்தைப் பொருத்தவரை இளமை வேகத்தோடு இருக்க ஆசைப்படுவார்கள். அதற்காகச் சிலர் ஆயிரக்கணக்கில் செலவும் செய்வார்கள்.
மனைவிக்குப் போகஸ்தானாதிபதி குரு என்பதால் கௌரவமும், ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் தருகிறார்கள் 3ஆம் இடம் கள்ள போகம் 7ஆம் இடம் நல்ல போகம் என்று சில நூல்களில் சொல்லப்பட்டுள்ளன.
3இல் ரா+செ நிற்க, விபச்சாரி சிநேகதியாவாள்.
3 மாதி+சுக் 6ஆம் இடத்தில் நிற்க – திருமங்கையை (அலி) திருமணம் முடிப்பான். அல்லது சின்ன வீடாக இருக்கும்.
“பாரப்பாயின்ன மொரு புதுமை கேளு
பாம்புட னேமூன்றோனும் தீயனாகில் கூரப்பா
எவ்விடத்தில் கூடிட்டாலும் குமரி கள்ளப் புருடனையும் கூடுவாளாம்”
இராகு அல்லது கேதுவுடன் 3க்குடையோன் பாபராகி, எந்த இடத்தில் கூடி நின்றாலும் (பெண் ஜாதகத்தில்) அந்த பெண் கள்ளக் காதலுடன் சேர்வாள் என்கிறார். புலிப்பாணி முனிவர்.
“பதிக்கி மூன்றுடையோனும் பாவி அவர் படவரவுடன் கூடி எங்கிருந்தாலும்
பதியாள் குடும்பனை சீறிபூவில் பலருடன் கூடுவாள் பாக்கியசாலி சங்கர”
ஆனந்த களிப்பு 33-ஆம் பக்கம் 243 ஆம் பாடல்
“பதி ஐந்துக் குடையோனும் பாவி அவர் படவரவுடன் கூடி முன்றினில.
விதிகள் நிலை பிசகாது சென்மன் வேல் விழியாள் சோரம் செய்குவாள் தோழி“
ஆனத்தகளிப்பு 33 ஆம் பக்கம் 244 ஆம் பாடல்
5ஆம் வீட்டுக்குடையோன் பாபராகி இராகு அல்லது கேதுவுடன் கூடி 3ஆம் வீட்டில் அமர்ந்தால் அவன் மனைவி பல ஆடவர்களுடன் தொடர்பு கொள்வாள்.
“சேயோடு வெள்ளியுஞ் சேர்ந்து மாதே சென்மனுக்கு போகதாளத்திலேற
“ஆயன் விதி பிசகாது சென்மன் அமங்கலியைக் கூடி அணைவான்டி தோழி.”
ஆனந்த களிப்பு 262 இல் பாடல்
அதாவது செவ்வாய் + சுக்கிரன் 3ஆம் வீட்டில் நிற்க இந்த ஜாதகம் அமங்கலி எனப்படும் விதவையை சேர்வார். அது மட்டுமல்ல 3ஆம் அதிபன் வேறு ஒரு வகையில் ஆச்சரியமாகப் பலன் தருவார்.
“மூன்று ஒன்று அதிபனோடு மொழி புதன் குஜனும் கூடி தோன்றும்
நீர் விடுத்து நின்ற துவாரமும் இரண்டாகும். வென்றிடும்
இவர்களோ சவுரியும் இசைந்து கூடில் சாற்றிடும் சலத்துவாரம் கல்லடைப்பாகும் மன்னா.”
அதாவது 3க்குடையோனும் இலக்கினாதிபதியும் புதன் செவ்வாய்க் கூடினால் சிறுநீர் துவாரம் இரண்டாகும். இவர்களுடன் சனியும் சேர்ந்தால் கிட்னியில் (அ) சிறுநீர் துவாரம் கல்லால் அடைபடும் என்கிறார்.
இது போல மூன்றுக்குடையவன். போகம், ஆண்மை மட்டுமல்ல 3இல் – இராகு, (அ) கேது நிற்க புத்திரதோஷம் ஏற்படும்.
3இல் பாபர்கள் எனப்படும் இராகு அல்லது கேது சனி நின்று, 3ஆம் மாதியைப் புதன் பார்க்க அல்லது சேர மருந்து மாத்திரை, “லேகியம்” போன்ற ஆண்மை விருத்திக்குண்டான மருந்துகளையும் உட்கொள்வார்.
கால புருஷ இலக்கினப்படி 3ஆம் மாதி புதன் என்பதால், புதன் இலக்கினத்தில் நின்றாலும், புதன் வீடான மிதுனம், கன்னி இலக்கின இராசியாகப் பெற்று புதன் நிற்க, பெற்றவர்கள் இளமையாகவும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். பாபர்கள் புதனை பார்க்க அல்லது சேரக் கூடாது.
புதன் உருவத்தில் சிறியது. மிக வேகமாக சுற்றக்கூடியது. சூரியனின் அதிகப்படியான ஒளியை பெற்றுத் தன்னைத்தானே சுற்றாமல் சூரியனை சுற்றியும் வரும் கிரகம் புதன் என்றால் மிகையல்ல.
புதன் நல்ல நிலையில் நின்றாலும் சந்திரனுக்கும் இராகுவிற்கும் மத்தியில் புதன் அமைந்தால் பலம் இழந்துவிடும். அந்த வீட்டின் ஆதிபத்யம் பலனைக் கொடுத்து கெடுக்கும்.
குருவும், புதனும் 2,4ஆம் இடம் தவிர எங்கே சேர்ந்தாலும் குரு பலம் இழந்து விடும். மாற்றான் மனைவி மீதும் மையல் ஏற்படுத்தும்.
இலக்கினத்தில் புதன் + பாபர் இருப்பின் கட்டிய வீட்டை இடித்து மறுபடியும் கட்டுவார்.
புதன் புத்திசாலித்தனத்தையும், சந்திரன் மனதையும் செயல்படுத்தும். புதனும் இராகும் சேர்ந்து 3இல் நின்றாலும், புதனும் சந்திரனும் சேர்ந்து 8இல் நின்றாலும், தகப்பனுடைய சொத்துக்களிலிருந்து விலக்கப்படுவார். அப்பாவியாகவோ அல்லது மன பேதலிப்போ ஏற்படும். அத்தை அல்லது தங்கை வாழ்வு பாதிப்படையும். எலக்ட்டிரிக்கல் தொழில் நஷ்டத்தைஏற்படுத்தும்.
புதன் + ராகு+ சூரியன் சேர்ந்து சுபர் வீட்டில் அமர, அரசாங்க விருது, கெளரவம், அந்தஸ்துடன் சகல வசதி ஏற்படுத்தும் ஆனால் சகோதரியின் கணவனை இழக்க (அ) பிரிய நேரிடும். தனித்த புதன் இனித்த பலன் தராது. அதே சமயம் தனுசு, மீனத்தில் அமர்ந்து அல்லது சொந்த வீடான மிதுனம் கன்னியில் நின்று யாரும் பாராமல் தனித்து நின்றால் உயர்ந்த அந்தஸ்து, நல்லபடிப்பு கௌரவ பதவி கிட்டும்.
3ஆம் மாதி யாராயினும் அதனுடைய நட்பு கிரகசாரம் ஏறினாலும் சேர்ந்தாலும் உயர்வு ஏற்படும். 3ஆம் பாவம் பலம் பெற்றால் நல்ல பலன் தரும்.
3ஆம் பாவத்தில் பாபக் கிரகங்கள் நின்றாலும் அல்லது 6,8,12ஆம் அதிபதிகள் நிற்க 3ஆம் பாவம் பலம் குறைந்து விட்டதாக அர்த்தம்.
சகோதர ஸ்தானம்
3ஆம் மாதி + செவ் + அசுபர் 8இல் நிற்க சகோதர விருத்தி இல்லை அல்லது பிரிவு ஏற்படும்.
3இல் பாபர் 3ஆம் பாவம் பாபகத்ரியோகம் பெற்றால், சகோதரர் மடிவார் (அ) பிரிவார். 3,5,7,9,11 ஆம் அதிபதி திசா புத்திகாலங்களில் சகோதரர் பிறப்பார்.
“மந்தன் மூன்றாமிடத்தில் நின்று மாலவன் பன்னிரண்டில் முந்த சேய் நீசம் பெற்று மன்னவன் கதிராய் வந்தால் பந்தமாய் இளையோர் என்றும் பாரினில் உதிக்க மாட்டார்.”
அதாவது, சனி 3இல் நின்று புதன் 12இல் நிற்க செவ்வாய் நீசம் அடைந்து இலக்கினாதிபதி சூரியனாய் வந்தால் (சிம்ம இலக்கினம்) இளைய தம்பி உலகில் பிறக்க மாட்டார்.
ஆயுள் :
விசுவாமித்ரருக்கும், வஸிஸ்டருக்கும் தர்க்க சோதிடம் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது.
“அஷ்டமத்தோன் அதற்கெட்டோன் திட்டமுடன் கேந்திர கோண மேற ஆயுள் தீர்க்கம்”
எட்டுக்கு அதிபதியும் 8க்கும் 8ஆமாதியாதிய 3ஆம் அதியும் கேந்திர கோணமேறி நிற்க ஆயுள் பலம் உண்டு.
ஆபரணங்கள்
3க்குடையோன், சுக், குரு இவர்கள் பலம் தொடர்பு கொண்டால் ஆபரணங்கள் மிகுதி உண்டு. (குமாரசுவாமியத்தில் சொல்லப்பட்டுள்ளது.)
3ஆம் வீட்டு அதிபதி இயல்பான சுபராகி 2இல் நிற்க 3ஆம் வீட்டுக்குரிய ஆபரணங்கள் அணிவான்.
“பாம்புடனே திரிநாயகன் கூடியே பாக்கிய மாளிகை யேறிடினே பசுமேதகம் வைடூர்யம் மணி மாளிகை அணி வாரென பட்டயம் தீட்டிக் கொடுப்பாயே.”
(சுகர் நாடி 1146 ஆம் பாடல்) (எ) ஜோதிட சிகாமணி
அதாவது இராகு அல்லது கேதுவுடன் 3ஆமாதி கூடி 9ஆம் வீட்டில் நிற்க, கோமேதகம், வைடூர்யம் போன்ற நவரத்தினங்களை ஆபரணமாக அணிவார்.
இலக்கினாதிபதி புதனுடைய ஸ்புடத் திலிருந்து 3ஆம் பாவாதிபதி ஸ்புடத்தை கழித்தால் வருகின்ற பாகை கலையில் சனி கோட்சாரத்தில் வரும் போது சகோதரருடன் சண்டை அல்லது பிரிவு கண்டம் ஏற்படும்.
அடுத்து தைர்யம் வீரத்தை பற்றிப் பார்க்கலாம்.
- 3ஆம் பாவாதிபதி பலம் பெற்று சூரி, செவ்வாய் வலிமையுடன் நின்று தொடர்பு கொண்டால் தைர்யசாலியாகவும், இராணுவம் போலீஸ் போன்ற துறைகளில் பணிபுரிந்து பாராட்டு பெறுவார்.
- 3மாதி பலம் பெற்றுச் சந்திரன் சேர பார்க்க உடல் வலிமை இருக்கும் மனதில் தைரியம் இருக்காது.
- 3ஆமாதி பலம் பெற்று செவ்,புதனுடன் சேர, தைரியமான பத்திரிக்கையாளர், எழுத்தாளர், ஜாக்கிரதையாக சண்டை செய்வார். வாதம் தர்க்கம் செய்வார்.
- 3ஆமாதி பலம் பெற்று குரு தொடர்பு ஏற்பட்டால் கண்ணியம், தந்திரசாலி, பணிவாக இருப்பது போல காட்டிக் கொண்டுபழி வாங்குவார்.
- 3ஆமாதி பலம் பெற்று சுக்கிரன் தொடர்பு ஏற்பட்டால், ஆடம்பர வாழ்வு, காதலில் வீரம், எதிர்ப்பு, இன எழுச்சி கொண்டவராவார்.
- 3மாதி பலம் பெற்று சனியுடன் தொடர்பு கொண்டால், முரடன், அசட்டு துணிச்சல், உணர்ச்சி வசபட்டு பேசுதல் வளரும்.
- 3ஆமாதி பலம் பெற்று இராகு அல்லது கேது தொடர்பு கொண்டால் வெளிதோற்றத்தில் சண்ட பிரசண்டர் ஆனால் உங்களுக்குள் பயம். மறைமுகமாகவோ, மற்ற ஆட்களைக் கொணடு சண்டைக்கு போவார்.
- 3இல் இராகு நிற்பது மிக நல்ல இடம் (கடகம், சிம்மம் தவிர) உயர்ந்த புகழ் பெற்ற வாழ்வு, பயமின்றி தைரியமாகப் பேசுவார். சொந்த பந்தங்கள் இவரை ஏமாற்றுவார்கள் அல்லது முன் விட்டுப் பின்பாக குறை கூறுவார்கள்.
- 3இல் கேது நிற்கப் பழிவாங்குவதைவிட மன்னித்தலே சிறந்தது என்பார். தெய்வ சக்தி ஒன்று கூட இருந்து தேவைகளைப் பூர்த்தி செய்யும். நுரையீரல், காது, முதுகு தண்டு முழங்கால் வலி போன்ற துன்பம் ஏற்படும்.
- 2ஆமாதியும் 3ஆமாதியும் சேர்ந்து 5இல் நிற்க.
- 2ஆமாதியும் 3ஆமாதியும் பரிவார்த்தனை.
- 2க்குடையோன் 3ஆம் இடத்தை பார்க்க அல்லது நிற்க, 3க்குடையோன் 2ஆம் இடத்தை பார்க்க அல்லது நிற்க.
- 2ஆமாதியையோ 3ஆமாதியையோ சுபகிரகங்கள் எனப்படும் சந்,குரு பார்க்க அல்லது அவர்களது தொடர்பு ஏற்பட்டாலும் சரித்திரத்தில் முத்திரை பதித்து மக்கள் மனதில் நிலைத்து இருப்பார்கள்.
- 3ஆம் பாவம் என்பது நமது வாழ்வில் ஏற்படும் முக்கிய நிகழ்ச்சிக்குக் காரண கர்த்தாவாக அமைந்து நமக்கு ஏற்றமிகு ஏற்றமிகு வாழ்வினை தந்து போற்றி புகழ் பெறும் நிலையை தந்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.