குரோதி வருட பலன்கள் 2024-கும்பம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

குரோதி வருட பலன்கள்

குரோதி வருட பலன்கள் 2024-கும்பம்

சனிபகவானை ஆட்சி வீடாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே! வரும் குரோதி வருடத்தில் பொறுமையை கையாண்டால் பெருமை பெறக்கூடிய வருடமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய ஏற்றம் கிடைக்கும். அதே சமயம் பிறர் குறைகள் எதையும் பெரிதுபடுத்தி பேசாமல் இருப்பது முக்கியம். இடமாற்றம் பதவி ,ஊதிய உயர்வுகளுக்கு முயற்சிகளுக்கு ஏற்ப பலன் கிடைக்கும். வேண்டாத சிலரோட வழிகாட்டல்கள் உங்களை திசை திருப்பி விடலாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள்.

எந்த பணியிலும் அவசரமும் அலட்சியமும் அறவே தவிருங்கள். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். கசந்த வார்த்தைகளை தவிர்த்தால், வசந்த காலமாக இருக்கும். தம்பதியர் இடையே மனம் விட்டு பேசுங்கள். வரவைத் திட்டமிட்டு செலவிடுங்கள். வீண் ஆடம்பரம் தவிருங்கள். குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்யுங்கள். முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் குழந்தை பாக்கியம் கைகூடிவரும்.

செய்யும் தொழிலில் சலிக்காத உழைப்பு இருந்தால் லாபம் உயரும். பரம்பரை வர்த்தகத்தில் புதிய முதலீடுகளை யோசித்து செய்யுங்கள். சுயதொழில் செய்யும் வாய்ப்பு சிலருக்கு வரலாம். அயல் நாட்டு வர்த்தகத்தில் சீரான போக்கு நிலவும்.

குரோதி வருட குரு பார்வை

அரசியல், அரசு சார்ந்த திடீர் உயர்வுகளை பெற வாய்ப்பு உண்டு. சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரித்தாலும், அதனால் ஆதாயமும் அதிகரிக்கும். உடனிருந்து உபத்திரம் செய்யும் நபர்களை அடையாளம் கண்டு உடனடியாக விலக்குங்கள்.

கலை, படைப்பு துறையினருக்கு வளர்ச்சியும் ,மலர்ச்சியும் ஏற்படும். நம்பிக்கை துளிர்க்கும்போது முயற்சிகளில் சோம்பல் கூடாது.பயணங்களால் ஆதாயம் உண்டு. வழிப்பாதையில் உள்ள மகான்கள் திருத்தலத்தை தரிசிப்பது நன்மை தரும்.

நரம்புகள், படபடப்பு, ரத்த அழுத்த மாற்றம், மன அழுத்த உபாதைகளை உடனே கவனியுங்கள். தினமும் சிறிது நேரம் ஆவது உடற்பயிற்சி, மனப்பயிற்சி செய்யுங்கள்.

பரிகாரம்

வருடம் முழுக்க சிவன் பார்வதி ஆராதியுங்கள் வாழ்க்கை சிறக்கும்

Leave a Comment

error: Content is protected !!