Homeஆன்மிக தகவல்திருப்பாவைதிருப்பாவை பாடல் 20 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 20 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 20

கண்ணனையும் நப்பின்னை பிராட்டியையும் மறுபடியும் எழுப்புதல்.

செஞ்சுருட்டி ராகம், மிச்ரசாபு தாளம்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;
செப்பம் உடையாய்! திறல் உடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;
செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்;
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீர் ஆட்டு – ஏலோர் எம்பாவாய்.

திருப்பாவை பாடல் 20

எளிய தமிழ் விளக்கம்:

முப்பத்து மூன்று கோடி தேவர்களுக்குத் துன்பம் வரும் முன்பாகவே சென்று அவர்களின் நடுக்கத்தைப் போக்கும் வீரனே எழுந்திரு! கருணையுள்ளவனே, வல்லமையான வனே, பகைவருக்கு பயத்தைக் கொடுக்கும் பெருமானே! எழுந்திரு. தங்கக் கலசம் போன்ற மென் முலை, சிவந்த உதடு, சிறிய இடையை உடைய நப்பின்னையே! திருமகளே எழுந்திரு. விசிறியும், கண்ணாடியும் உன் கணவனையும் கொடுத்து எங்களுக்கு நீராட உதவி செய்வாயாக.

எளிய ஆங்கில விளக்கம்:

Thiruppavai – 20 – Raga: Cencurutti, Misra Chapu

O valiant lord who leads the hosts of thiry-three celestials
and allaya their fears! Wake up
O strong one, mighty one, pure one,
who strikes terror in the hearts of evil
O great lady Nappinnai with jar-like soft bosom, coral lips, slim waist
O lakshmi wake up!
Give us a fan, mirror and your lord as well and
may you help us to bathe.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!