Homeஆன்மிக தகவல்திருப்பாவைதிருப்பாவை பாடல் 21 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 21 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 21

உலகிற்கு ஒளியாய் திகழும் கண்ணனே! எழுந்தருள்வாயாக.

நாதநாமக்கிரியா ராகம், மிச்ரசாபு தாளம்

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து – ஏலோர் எம்பாவாய்.

திருப்பாவை பாடல் 21

எளிய தமிழ் விளக்கம்:

கறக்கும் பாலை வாங்கும் பாத்திரங்கள் எதிர்த்துப் பொங்கி மேலே வழிய, தங்கு தடையில்லாமல் பாலைக் கொடுக்கும் வள்ளல் போன்ற பசுக்களை அதிகம் பெற்றுள்ள நந்தகோபனின் பிள்ளையே விழித்துக்கொள்! சக்தி உள்ளவனே, பெரியவனே! உலகத்தில் அவதாரம் செய்த ஒளி படைத்தவனே! எழுந்திரு.எதிரிகள் உன்னிடம் வலிமையிழந்து உன் வாசலில் கதியற்று வந்து உன் திருவடிகளில் பணிவது போல நாங்கள் உன்னைத் துதித்துப் பாட வந்துள்ளோம்!

எளிய ஆங்கில விளக்கம்:

Thiruppavai – 21 – Raga: Nandanamakriya, Misra Chapu

Wake up, O son-of-the-cow-herd chief
Who bears prized cows that pour milk
incessantly into canisters over-flowing
Wake up, O strong one, O great one,
who stands like a beacon to the world.
We stand at your door like vassals
who accept defeat and come to pay homage to you.
We have come to you , singing your praise and proclaiming your
greatness.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!