Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்-22.01.2025

இன்றைய ராசி பலன்-22.01.2025

இன்றைய ராசி பலன் : மேஷம்

உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தாமதமான காரியங்கள் கூட எளிதில் முடியும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

இன்றைய ராசி பலன் : ரிஷபம்

உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிட்டும். திருமண சம்பந்தமான முயற்சிகள் நற்பலனை தரும். கடன் பிரச்சினை குறையும்.

இன்றைய ராசி பலன் : மிதுனம்

குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு குறையும். நண்பர்கள் உதவியால் கடன்கள் பைசல் ஆகும்.

இன்றைய ராசி பலன் : கடகம்

இன்றைய ராசி பலன்

உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பர பொருட்களால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

இன்றைய ராசி பலன் : சிம்மம்

நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பொன் பொருள் சேரும்.

இன்றைய ராசி பலன் : கன்னி

குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும்.

இன்றைய ராசி பலன் : துலாம்

வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இன்றைய ராசி பலன் : விருச்சிகம்

குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் டென்ஷனை ஏற்படுத்தும். வேலையாட்களை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

இன்றைய ராசி பலன் : தனுசு

நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

இன்றைய ராசி பலன் : மகரம்

பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். வீட்டில் ஒற்றுமை கூடும். சிக்கனமுடன் செயல்படுவதால் குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும்.

இன்றைய ராசி பலன் : கும்பம்

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும். வியாபார ரீதியான கொடுக்கல்& வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

இன்றைய ராசி பலன் : மீனம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular