விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: கன்னி ராசி
கல்விகாரகனாகிய புதனை ஆட்சி வீடாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே ! இதுவரை உங்கள் ராசிக்கு 9மிடம் இருந்த குருபகவான் மே 14ந் தேதி முதல் உங்கள் ராசிக்குப் 10மிடம் வருகிறார். மேலும் அக்டோபர் 18ந் தேதி முதல் அதிசாரமாக லாபஸ்தானமாகிய 11மிடம் வருகிறார். மீண்டும் வக்ரகதியில் டிசம்பர் 5ந் தேதி முதல் 10மிடம் செல்கிறார்.
மே 18ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 7, 1மிடங்களில் இருந்த ராகு-கேதுக்கள் 6, 12மிடம் சஞ்சாரம் செய்கிறார்கள்.
வருடம் முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 7மிடம் சஞ்சாரம் செய்கிறார்.

இவ்வருடம் உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு காரணமாக வேறு ஊருக்கு மாற்றலடைவார்கள். தொழில்துறையில் அலைச்சலும் வளர்ச்சியும் கலந்து இருக்கும். வருடம் முழுவதும் உங்கள் ராசிக்குச் சனியின் பார்வை இருப்பதால் திருஷ்டி மிக அதிகமாக இருக்கும். அதனால் காரியத்தடைகள் உண்டாகும்.
கணவன்-மனைவிக்குள் கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் பெரிய பிரச்னை வராது. குழந்தைகள் கல்வி நன்றாக அமையும்.தொழில்துறையில் பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பச் சூழல் அமைதியாக இருக்கும். பொறுமையாக இருந்து காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம். புதிய முயற்சிகள் தாமதமானாலும் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம்.
தனக்குக் குருபலம் இல்லாவிட்டாலும் வரனுக்கு குருபலம் இருந்தால் திருமணம் நடக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்கப் பெறுவார்கள்.
பரிகாரம்:
பிரதி வியாழக்கிழமை குருபகவானுக்கு நெய் தீபமும், சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமும் எற்றி வரவும்.
மொத்தத்தில் இவ்வருடம் 65 சதவீத நன்மைகளைப் பெறுவீர்கள்.