விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள் மற்றும் குணாதிசயங்கள்!

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

விருச்சிக லக்னம்

ராசி மண்டலத்தில் எட்டாவதான விருச்சிக ராசி கால புருஷளின் இரகசிய உறுப்பைக் குறிப்பது. ஸ்திர ராசி, இரட்டை அல்லது பெண் ராசி. நீர் தத்துவத்தைக் கொண்டது. கிரோதய ராசி. பகலில் பலம் கொண்டது. இதன் அதிபதி செவ்வாய். இதில் அடங்கியுள்ள நட்சத்திரங்கள், விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை முடிய.

விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களின் பொதுப் பலன்

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் நல்ல சரீரவாகு கொண்டவர்கள். வட்டமான முகமும் நல்ல நிறமும் கொண்டவர்கள். அகலமான நெற்றி உள்ளவர்கள், கிண்டலாகவும், கேலி செய்தும் பேசும் சுபாவம் உள்ளவர்கள். முரட்டுத்தனமும் பிடிவாத குணமுமுள்ளவர்கள். எழுத்து. பேச்சு, வாதம் செய்தல் ஆகியவற்றில் திறமைசாலிகள். சங்கீதத்தில் தேர்ச்சி பெறக்கூடியவர்கள், எதைச் செய்தாலும். ஆதாயத்தை எதிர்பார்ப்பார்கள். சுய நலவாதி என்று அதில் சொல்லலாம். ஆனால் எடுத்த பணியைத் திறமையுடன் செய்து முடிப்பார்கள்.

கிரகங்களின் ஆதிபத்திய பலன்

சூரியன்

ஜீவனஸ்தானமான 10ஆம் இடத்திற்கு அதிபதியானதால் யோகாதிபத்தியம் உண்டு. இவர் வலுப்பது மிகவும் நல்லது. இவரி 10ல் ஆட்சி பெறுவது ராஜயோகம். பெரிய அரசாங்க அதிகாரியாக ஆக்குவார்.

இவருடன் சந்திரனும் குருவும் சேர்ந்தால் வலுத்த தர்மகர்மாதிபதி யோகமாகும். நல்ல புகழ் ஒப்பந்தங்கள் (Contracts), பெரிய வியாபாரம், நிர்வாகத்திறமை ஆகியவற்றை வலுத்த சூரியன் அளிப்பார்.

இவர் சந்திரனுடன் பரிவர்த்தனை ஆனால் அல்லது புதனுடன் சேர்ந்து 10 அல்லது 7ல் இருந்தால் யோகம்.அரசு அலுவலகம், சி.ஐ.டி. காவல், தூதரலுவலகம் தொழிற்சாலை, வங்கி, வர்த்தகம் ஆகிய துறைகளில் உத்தியோகம் அமையலாம். டாக்டர், இன்ஜினீயர், வக்கீல், ஆடிட்டர் போன்ற தொழில் நிபுணராகலாம். கோதுமை, நெல், அரிசி, மருந்து, தங்கம், வெள்ளி,நவரத்தினம் ஆகியவற்றின் வியாபாரம் விருத்தி பெறும்.

சந்திரன்

ஸ்திர லக்னமான விருச்சிகத்திற்கு ஒன்பதாமிட அதிபத்தியம் பெறுவதால் பாதகாதிபதியாகிறார். இவர் லக்னாதிபதிக்கு நட்பானதாலும் 9-ம் இடம் வலுத்த கோணமாவதாலும், இவர் கோணத்தில் இருந்தால் பாதகாதிபத்தியம் நீங்கி அதிரஷ்டம், வாழ்க்கையில் முன்னேற்றம், உத்தியோக விருத்தி, தனம் ஆகியவற்றை அளிப்பார்.

இவர் வலுக்கவேண்டும். இவர் கெட்டால் தந்தைக்குப் பீடை, தந்தையைவிட்டுப் பிரிதல், தனவிரயம், வாழ்க்கையில் நலிவு ஆகிய தீய பலன்களை அளிப்பார்.

செவ்வாய்

லக்னம், 6-ம் இடம் இரண்டிற்கும் அதிபதியாகிறார். லக்னம் சுபஸ்தானமானாலும், ரணம், ருணம், ரோகம், சத்துரு ஆகியவற்றைக் குறிக்கும் 6-ம் இட ஆதிபத்தியம் மூலத்திரிகோணஸ்தானமானதால் கெட்ட ஆதிபத்தியம் வலுக்கிறது. ஆகையால் பாபி என்பது கருத்து. ஆனால் இயற்கையில் பாபியானதால் லக்னாதிபத்தியும் பெறுவதால் சுபராகிறார்.

இந்த லக்னக்காரர்களுக்குச்’ சிறுசிறு நோய் நொடிகளும் ஏதாவது ஒரு எதிர்ப்பும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் ஜாதகர் அவைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறி வெற்றி காண்பார். இவர் 6-ல் இருப்பது நல்லதல்ல என்பது பொதுக் கருத்து. ஆனால் சந்திர காவிய நூலாசிரியர் செவ்வாய் 1,4,7.10 ஆகிய கேந்திரங்களில் ஒன்றுக்கு அதிபதியாகி 6-ல் இருந்தால் பூரண சுபன்: நல்லதையே செய்வார் என்கிறார். செவ்வாய் வலுப்பது விசேஷம்.

புதன்

8,11 ஆகிய இடங்களுக்குடைய புதன் இரண்டு ஆதிபத்தியமும் கெட்டதானதாலும், லக்னாதிபதிக்குப் பகை கிரகமானதாலும் முழுப்பாபி ஆகிறார். ஆனாதம் லாபத்தைக் குறிப்பதால், லாபம் கெடக் கூடாது.ஆக புதன் வலுத்தால் வருமானம் கூடும்.

அதே சமயம் உடல் நலமும், முன்னேற்றமும் பாதிக்கப்படும், புதன் கெட்டால் ஆரோக்கியம் கெடாது. ஆனால் வருமானம் கெடும். நஷ்டமும் ஏற்படும்.

குரு

தன, பஞ்சமஸ்தானத்திற்கதிபதியான குரு லக்னாதிபதிக்கு நட்பு பூர்ண சுபர். இவர் வலுத்தால் தெய்வபலம் கூடும். புத்திரபாக்கியம் நன்றாக இருக்கும். தனக்கும் தன் தந்தைக்கும் அதிர்ஷ்டமும், தனச் சேர்க்கையும்கிட்டும். இவர் கெட்டால், புத்திர தோஷம், புத்திரரால் தனவிரயம், ஸ்பெகுலேஷன் மூலம் நஷ்டம். ஆகிய கெடுபலன்களை அளிப்பார். ஆக குரு வலுக்க வேண்டும்.

சுக்கிரன்

7,12 ஆகிய இரண்டு ஸ்தானத்திற்கும் அதிபதியானவர். சப்தமாதிபதியாவதால் கேந்திராதி பத்திய தோஷம் பெறுகிறார். பொதுவாக சுக்ரன் வலுத்தால் ஜாதகர் காம உணர்ச்சி மிகுந்தவராக இருப்பார். தனக்கோ, அல்லது மனைவிக்கோ ஏதாவது ஒரு வியாதி தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கும்.

உழைப்பில்லாமலே வருமானமும் ஏற்படும். ஆனாலும் விரயாதிபத்தியம் பெற்ற காரணத்தால் தன் தசையின் முடிவில் தான் கொடுத்ததையும் பிடுங்கி விடுவார். அதாவது நஷ்டம் அல்லது விரயம் ஏற்படும். பொதுவாக இவர் மறைவது நல்லது என்ற கருத்தும் உள்ளது. இவர் கெட்டால் களத்திரபாவமும் கெடக்கூடும்.

சனி

3, 4 ஆகிய ஸ்தாளங்களுக்கு அதிபதியாள சனி, ஸ்திர லக்னத்திற்கு 3ஆம் இடம் மாரக ஸ்தான மானதால் மாரகாதிபத்தியம் பெற்றாலும், பாபி என்று சொல்ல முடியாது. சுபராகவே சொல்லப்பட்டுள்ளது. இவர் 3 -ல் ஆட்சியாக இருந்தால் உடல்நலக் குறைவும் ஓரளவு கெடுபலன்களும் ஏற்படும்.

மற்றபடி இவர் வலுத்தால் சகோதரம், வித்தை. வீடு. வாகனம் ஆகியவை விருத்தி பெறும். பொதுவாக இந்த லக்னக்காரர்களுக்கு சனி தசை முதலாகவோ நாலாவதாகவோ வராமல் 2,3 அல்லது 5 வதாக வந்தால் யோக பலன்களை அளிப்பார்.

சுபர் அசுபர் விளக்கம்

சுபர்கள்

பொதுவாக எல்லா நூலாசிரியர்களும் சந்திரன் ஒருவரையே சுபன் என்று சொல்லியுள்ளனர். காரணம், வலுத்த கோணமான9-ம் ஆதிபத்தியம் மட்டுமே பெற்றதே. சந்திரனும் சூரியனும் சுபர்.

யோகாதிபதி

9 – க்குடைய சந்திரனும் 10-க்குடைய சூரியனும் யோகாதிபதிகள் இவர்கள் ஒன்று கூடினால் தர்மகர்மாதி யோகம் என்று எல்லா நூலாசிரிர்களும் சம்மதித்துள்ளனர். ஆக சூரியனும் சந்திரனும் யோகாதிபதிகள்.

பாபிகள்

செவ்வாய், புதன், சுக்கிரன் மூவரும் கொடிய பாபிகள் என்கிறார் தாண்டவ மாலை நூலாசிரியர். இதனை மற்ற ஆசிரியர்களும் ஆமோதித்துள்ளனர்- செவ்வாய் லக்னம். 6-ம் இடம் இரண்டிற்கும் அதிபதி. 6ஆம் இடம் மூலத்திரிகோண ஸ்தானம் ஆவதால் வலுக்கிறது. அதனால் லக்னாதியானாலும்
பாபி என்று சொல்லப்பட்படுள்து. 8,11 ஆகிய
ஆதிபத்தியங்களல் புதனும், 7, 12 ஆகிய ஆதிபத்தியங்களால் சுக்கிரனும் பாபியாகின்றனர்.

மாரகாதிபதி

பொதுவாக குரு, செவ்வாய், புதன். சுக்கிரன் ஆகிய நால்வரும் மாரகாதிபதிகள் என்பது ஒரு மித்த கருத்து.

2-ம் ஆதிபதியத்தால் குருவும்,
7-ம் ஆதிபத்தியத்தால் சுக்கிரனும்,
8-ம் ஆதிபத்தியத்தால் புதனும்,
6-ம் ஆதிபத்தியத்தால் செவ்வாயும் மாரகர்களாகின்றனர்.

குருவுக்கு 5ஆம் ஆதிபத்தியம் வந்ததால், கொல்ல மாட்டார் என்பது ஜாதக அலங்கார ஆசிரியர் தவிர மற்றவர்களின் ஏகோபித்த கருத்து. குரு யோகத் தையும் கொடுப்பார். மாரகமும் செய்வர் என்பது ஜாதக அலங்கார ஆசிரியரின் தனிப்பட்ட கருத்து. செவ்வாயோ லக்னாதிபதியானதால் கொல்வாரே என்ற சர்ச்சையும் உண்டு. லக்னாதிபதியும் மாரகம் செய்வார் என்பதே முடிவான கருத்து.

முக்கிய நிகழ்ச்சிகள் நேரும் காலம்

மாதுர் தோஷம்(தாய்க்கு கண்டம் )

சந்திர தசை – ராகு, சனி, சுக்கிர புக்திகள்.

செவ்வாய் தசை – ராகு, குரு, புதன், சுக்கிர புக்திகள்.

ராகு தசை – ராகு, சனி, சுக்கிரபுக்திகள்,

குரு தசை – சனி, சுக்கிரன், சந்திர புக்திகள்.

சுக்கிர தசை – சந்திரன், ராகு, சனி, புக்திகள்.

மேலே கூறிய தசா புக்தி காலங்களில் தாயாருக்குக் கண்டாதி பிணிகளோ, மரணமோ அல்லது தாயாருடன் விரோதமோ பிரிவினையோ ஏற்படலாம்.

பிதுர் தோஷம்(தந்தைக்கு கண்டம்)

சூரிய தசை-ராகு, சனி, புக்திகள்

ராகு தசை – குரு, சனி, சுக்ரன், சந்திர புக்திகள்,

குரு தசை – குரு, சனி, சூரிய புக்திகள்.

கேது தசை-சுரன் ராகு சனி புக்திகள்

சனி தசை-சளி, சூரியன், ராகு, புக்திகள்.

செவ்வாய் தசை-ராகு, சனி, சுக்கிர புக்திகள்.

புதன் தசை-சூரியன், ராகு, சனி, புக்திகள்.

மேற்படி தசாபுக்தி காலங்களில் பிதாவுடன் சச்சரவோ, பிரிவிணையோ அல்லது அவருக்குக் கஷ்டமோ பீடைகளோ கண்டமோ மரணமோ நேரலாம்.

திருமணம் நடைபெறும் காலகட்டம்

சனி தசை-புதன், சுக்ரன், குரு புக்திகள்.

புத தசை-சுக்கிரன், சந்திரன், குரு புத்திகள்,

சுக்கிர தசை-சந்திரன், புதன், குரு புக்திகள்

சந்திர தசை – சந்திரன், சனி, சுக்கிர புக்திகள்.

குரு தசை-சனி, புதன், சுக்கிர புக்திகள்

மேற்படி தசாபுக்தி காலங்களில் திருமணம் நடக்கலாம். மனைவிக்கு சுப பலன்களாக நடக்கும்.

களத்திர தோஷம்(மனைவிக்கு கண்டம்)

சனி தசை- சனி, ராகு, கேது, சூரிய புக்திகள்.

புத தசை -புதன், சனி, ராகு புக்திகள்.

சுக்கிர தசை–சுக்கிரன், ராகு, சனி புக்திகள்.

சந்திர தசை – சந்திரன், சனி, சுக்கிர புக்திகள்.

ராகு தசை-குரு, சனி, சூரிய புக்திகள்.

குரு தசை-சனி, புதன், சுக்கிர புக்திகள்.

மேற்படி தாசா புக்தி காலங்களில் மனைவிக்குக்கண்டாதி பிணிகளோ, மரணமோ, அல்லது மனைவி யுடன் விரோதம், பிரிவினை போன்ற கெடுபலன்களோ நிகழக்கூடும்.

புத்திர பாக்கியம்(குழந்தை பிறக்கும் காலம் )

குரு தசை-குரு, சனி, புதன், சுக்கிரன் புக்திகள்.

சனி தசை-சுக்கிரன், சூரியன், ராகு, குரு புக்திகள்.

சுக்கிர தசை-சத்திரன், புதன், கேது புக்திகள்.

சூரிய தசை-குரு, புதன், சுக்கிர புக்திகள்.

மேற்படி தசாபுக்தி காலங்களில் புத்திரன் பிறப்பதோ, புத்திரர்களுக்கு சுபபலன்கள் கிட்டுவதோ நடை பெறலாம்.

புத்திர தோஷம்(குழந்தைகளுக்கு கண்டம்)

குரு தசை- கேது,சுக்கிரன், சூரியன் ராகு புக்திகள்.

சனிதசை- மேற்படி புத்திகள்.

சுக்கிர தசை-மேற்படி புத்திகள்.

சூரிய தசை-மேற்படி புக்திகள்.

மேற்படி தசா புக்தி காலங்களில் புத்திரர்களுடன் விரோதமோ, பிரிவினையோ அல்லது புத்திரர்களுக்குக் கஷ்ட நஷ்டங்கள், கண்டாதிபீணிகள் அல்லது மரணம் நோலாம்.

சகோதர தோஷம்

ராகு தசை-சனி, சுக்கிரன், சூரிய புக்திகள்,

சனி தசை-சனி, கேது, சுக்கிரன் புக்திகள்.

கேது தசை-சுக்ரன், சூரியன், ராகு, சனி புக்திகள்.

சுக்ர தசை-சூரியன், செவ்வாய், குரு, சனி புக்திகள்

சூரிய தசை-சனி, புதன், சுக்கிர புக்திகள்,

இந்தக் காலங்களில் சகோதார்களுடன் விரோதமோ பிரிவினையோ அல்லது அவர்களுக்குக் கண்டாதி பிணிகளோ, கஷ்ட நஷ்டமோ அல்லது மரணமோ கூட நேரலாம்.

மாரகம்(மரணம் நிகழும் காலம்)

குரு தசை-சனி, சூரியன், சந்திரன், ராகு புக்திகள்.

சனி தசை-சுக்கிரன், செவ்வாய், ராரு புத்திகள்.

சூரிய தசை-சந்திரன், ராகு, குரு, புதன் புக்திகள்.

சந்திர தசை-செல்வாய், ராரு, குரு. சுக்கிர புத்திகள்

செல்வாய் தசை-குரு, சனி, செவ்வாய் புக்திகள்.

(மேற்படி தசா புக்தி காலங்களில் கஷ்ட நஷ்டங்களோ, விரோதங்களே, கண்டாதி பிணிகளோ மரணமே சம்பவிக்கலாம்.

யோக காலங்கள்

குரு தசை-சனி, சூரியன், சந்திரன், ராகு புக்திகள்.

சனி தசை-சுக்ரன், செவ்வாய், ராகு, குரு. புத்திகள்.

சூரிய தசை-சந்திரன், ராகு, குரு, புதன் புக்திகள்.

சந்திர தசை-செவ்வாய், ராகு, குரு, சுக்கிர புக்திகள்.

செவ்வாய் தசை-குரு, சளி, சந்திர புக்திகள்.

இந்த தசா புத்திகளில் சுபபலன்களாக நடக்கும்.

யோகம் தரும் அமைப்புகள்

1.குருவும் புதனும் கூடினாலோ ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலோ, பரிவர்த்தனையானாலோ வலுத்த தனயோகம்,

2. சூரியன், புதன், சுக்ரன் மூவரும் 7ல் இருந்தால் புதன் தசையில் பெயர், புகழ், பதவி, கிட்டும்.

3. குருவும் புதனும் 5லும் சந்திரன் 11லும் இருந்தால் மகா அதிர்ஷ்டமும் தனயோகமும் ஏற்படும்.

4. குரு, சந்திரன், கேது, மூவரும் 9ல் இருந்தால் குருதசை யோகம் தரும்.

5. சூரியன் 10ல் ஆட்சியானால் ராஜயோகம்,

6. சூரியனும் சந்திரனும் கூடினாலோ, பரிவர்த்தனை ஆனாலோ ராஜயோகம்.

7. சூரியனும் புதனும் 7 அல்லது 10ல் கூடினால் ராஜயோகம்,

8. குருவும் சந்திரனும் பரிவர்த்தனை ஆனால்
இருவர் தசையும் யோகம்

9. லக்னதில் குருவும் சூரியனும் 2-ம் இடத்தில் சந்திரனும் இருந்தால் யோகமுள்ள ஜாதகம்.

10. சூரியன் சத்திரன் குரு மூவரும் கூடிஎங்கிருந்தாலும் வலுத்த தர்மகர்மாதிபதி யோகமாகும்.

11. சூரியனும் சந்திரனும் ஆட்சி பெற, செவ்வாய் உச்சமானால் யோகம்.

12. குரு, சந்திரன், செவ்வாய் மூவரும் கூடி 2,4,5அல்லது 10லிருந்தால் யோகம்.

13. குரு லாப ஸ்தானம் பெற சந்திரனும் சுக்கிரனும் உச்சமானால் ராஜயோகம்.

14. சந்திரன் 2 ,7 ,9 அல்லது 10-ல் இருந்தால் யோகம்.

15. குரு, சந்திரன், செவ்வாய் மூவரும் உச்சமானால் ராஜயோகம்.

16. ஒன்பதாம் அதிபதி சந்திரனும் லாபாதிபதி புதனும் பரிவர்த்தனையானால் நல்ல யோகம்.

Leave a Comment

error: Content is protected !!