புதன்+ குரு :
மிகுந்த வனப்பு நிறைந்தவர் ; சௌபாக்கியமுடையவர் ; அழகான தோற்றமுள்ளவர் ; நல்ல பண பலம் உடையவர் ; மனோ தைரியம் நிறைந்தவர்.
விளக்கம்:
புதன் , குரு ஆகிய இருவரும் சுபர்கள் . லக்ன பாவத்தில் நிற்பதால் , இவர்களது சுப பலன் மேலும் அதிகரிக்கும்.எனவே , முனிவரது கருத்து சரியென கொள்க.
புதன்+சுக்கிரன் :
அரசு விவகாரங்களில் சமர்த்தர் ; அரசர்களால் மதிக்கத்தக்கவர் . அநேக சாஸ்திரங்களைக் கற்றுத் தெளிந்தவர் . தனவிருத்தியுடையவர் . சத்தியமுள்ளவர்.
விளக்கம் :
புதனும் , சுக்கிரனும் சுபர்கள் ; நெருங்கிய நண்பர்கள்.எனவே , இவர்கள் லக்னத்தில் இருந்தால் , மிகவும் விசேஷமான சுப பலன்கள் ஏற்படும் என்பது உண்மையே !
பு+சனி :
இராஜகாரியத்தில் சமர்த்தர் ; கெடுதல் செய்வதில் ஆர்வம் உள்ளவர் . துஷ்ட ஸ்திரீ சேர்க்கையுள்ளவர் ; வறியவர் ; ஜனங்களின் நன் மதிப்பை இழந்தவர்.
விளக்கம் :
சனியுடன் புதன் கூடியுள்ளதால் , புதனும் அசுபராக மாறி , தீமை செய்வார் என்பது சாஸ்திர ரீதியான உண்மை ! ஆனால் , இருவரும் நண்பர்கள்.லக்ன கேந்திரத்தில் உள்ளதால் , சொற்ப நன்மை செய்ய இடமுண்டு . ஆட்சி , உச்சமாக இருந்தால் , விசேஷமான பலன்கள் ஏற்படுமென கணக்கிட்டுக் கொள்க.